Category Archives: vedhartha sangraham

வேதார்த்த ஸங்க்ரஹம் 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

<< பகுதி 16

வேதங்களின் உட்பொருள் உணர்தல்

பாஸ்கரரின் பேதாபேத விமர்சம்

பத்தி 73

இரண்டாவது பக்ஷத்தில் (பாஸ்கரரின்) ப்ரஹ்மனையும் உபாதி(லக்ஷணங்கள்)யையும் தவிர வேறெதுவும் ஏற்கப்படவில்லை. ஆகவே உபாதி ப்ரஹ்மனை மட்டுமே பாதிக்கும். இந்தப் ப்ரகரணத்தில், “குற்றங்குறைகள் அற்றிருத்தல்” என்பனபோல் வேதங்களில் சொல்லப்படுவன மறுக்கப்பட்டதாகும்.

பத்தி 74

இதற்கு பேதாபேத வாதியின் பதில்:

ஒரு ஜாடியில் உள்ள ஆகாசத்தினின்றும் ப்ரபஞ்ச ஆகாசம் வேறுபட்டது; ஜாடியில் உள்ள ஆகாசம் கட்டுக்குள்ளடங்கியது. எல்லையற்று விரிந்து கிடைக்கும் ஆகாசத்தை ஜாடியில் உள்ள ஆகாசத்தின் குறைகள் தீண்டா. அதேபோல உபாதிகளால் தனிப்பட்ட ஆத்மாக்களில்  தோன்றும் குறைகள் ப்ரஹ்மத்தை பாதியாது.

நம் விடை:

இது சரியன்று. கூறுகள் இல்லாததால் ஆகாசம் என்பது பகுக்கப் படமுடியாதது. ஜாடி போன்ற பொருள்கள் ஆகாசத்தைப் பகுக்க முடியாது. பகுக்கப்பட முடியாத ஆகாசமே  வருகிறது.

அதேபோல ப்ரஹ்மனும் பகுக்கப்பட முடியாதது. ஆகவே அது தானே குணங்களைத் தருமவற்றோடு தொடர்பில் வருகிறது.

பத்தி 75

வேறொரு காரணத்திற்காக  தொடர்புபட்ட ஆகாசம் ப்ரபஞ்ச ஆகாசத்தினின்றும் வேறுபட்டது என்று கூற முடியாது.

ஜாடி ஒரே இடத்தில் ஸ்திரமாக இராது அகண்ட ஆகாசத்தில் எங்கு வேண்டுமானாலும் அசைக்கப் படக்கூடியது. அது நகரும் இடம் தோறும் அளவுபட்ட ஆகாசத்தையே காட்டுகிறது. தொடர்பிலும் நிரந்தரமில்லை. இதேதான் ப்ரஹ்மனுக்கும் பொருந்த வேண்டும். “குணங்கள்”  என்று. ப்ரஹ்மனின் வெவ்வேறு பகுதிகளாக. ஒவ்வொரு க்ஷணமும் பகுதிகளின் பந்தமாகவும் விடுதலையாகவும் இவை உள்ளன. அறிவாளிகள் இதைக் கண்டு சிரிப்பார்கள்.

பத்தி 76

பேதாபேத வாதி கூறுகிறார்:

செவிப்புலனைப் போன்றதே ஆகாசமும். ஆனாலும் கேட்பது என்பது தனிப் புலனாய் உள்ளது. அதேபோல ப்ரஹ்மனில் தனி ஜீவனும் ஆகும்.

நம் பதில்:

ஆகாசம் (இடம்) என்பது செவிப்புலன் அன்று. செவியினுள் காற்றினால் அமைக்கப்பட்டுள்ள அந்த ஒரு ஆகாசப் பகுதி மட்டுமே கேட்பது எனும் செவிப்புலன் ஆகும்.  கேட்பிக்கும் இந்த ஆகாசப் பகுதிக்கும் செவிக்கும் தொடர்பு இல்லை எனினும் கேட்கும் புலன் இருக்கிறது. ஒரே ஆகாசமே வெவ்வேறு இடங்களிலும் வஸ்துக்களை நகர்த்தியும் அசைத்தும் வினை ஆற்றினாலும் பொருள்களுக்கும் அதற்கும் இடையே நிரந்தர அல்லது தொடர்ந்த சம்பந்தம் என்பதில்லை. அதேபோலத்தான் ப்ரஹ்மமும் பல குணங்களோடு, தொடர்ச்சி இல்லாமல் ஸம்பந்தப் படுகிறது என நம் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்தி 77

செவிப்புலன் தொடர்பான ஆகாசம் பற்றிய இக்கூற்றும் ஒரு விவாதத்துக்காக மட்டுமே யோஜிக்கப் பட்டது. உண்மையில் கேட்பது எனும் புலன் அறிவு ஆகாசத்தோடு தொடர்புடைத்தன்று. வேதம் வல்லார்கள் வைகாரிகம் எனப்படும் ஸாத்விக அஹங்காரத்திலிருந்து பதினொரு புலன்கள் உருவாவதாகக் கூறுகிறார்கள். பகவான் பராசரர், சிலர் இவை தைஜஸத்திலிருந்து வருவதாகக் கூறுகிறார்கள் என்கிறார். ஆனால் உண்மையில் பத்துப் புலன்களும் மனஸ்ஸும் வைகாரிகத்திலிருந்து தோன்றுகின்றன.  வைகாரிகம், தைஜஸம், பூதாதி என அஹங்காரம் மூவகைப்படும்: இவை முறையே ஸாத்விக, ராஜஸ, தாமஸிகங்களோடு ஒக்கும். ஆகாசம் முதலியன பூதாதியிலிருந்து தோன்றும். ஆனால் இங்கு ‘தேவ’ எனப்படும் புலன்கள் வைகாரிகத்திலிருந்து தோன்றும். வைகாரிகத்திலிருந்து தோன்றும் புலன்களுக்கு அனுபவம் பூதாதியிலிருந்து வரும் பொருள்களால் அமையும். இவ்வாறு மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பத்தி 78

அவ்வாறே புலன்கள் ஆகாசம் போன்ற பூதங்களின் விளைவே எனினும் தவறில்லை ஏனெனில் ஆத்மாக்களின் சரீரங்களும் பூதங்களின் மாறுபாடே.

என்றாலும் இதை ஏற்பதில் உங்கள் ப்ரஹ்ம தத்வம் சில ப்ரச்சினைகளுக்கு ஆளாகிறது. எனினும், அது விதி முறைகளின்றிக் கணக்கற்ற குறைபாடுகளோடு வருகிறது. இதிலிருந்து தப்ப முடியாது.  வேதம் வல்லார்கள் இது குருட்டு நம்பிக்கை உள்ளவர்களுக்குப் பொருந்தும், என்று மிக மதிப்பதில்லை.

பத்தி 79

ப்ரஹ்மனின் இயல்வை மாற்றி அமைப்பதன் மூலம் மாற்றமற்றது (அவிகாரம்) ப்ரஹ்மன் எனும் ச்ருதி அடிப்படையையே இது கேள்விக்குரியதாக்குகிறது. ப்ரஹ்மனுக்கு இயல்புகள் கற்பித்து ப்ரஹ்மன் இயல்பு(குறை)கள் அற்றதெனும் ச்ருதி வாக்யத்தோடு முரண்பாடும் ஏற்படுத்துகிறது. ப்ரஹ்மனின் சக்தி மட்டுமே மாற்றத்துக்குட்படுகிறது என்றால், இந்த சக்தி என்பது என்ன?

இது ப்ரஹ்மனின் மாறுபட்ட வடிவா அல்லது வேறு ப்ரஹ்மனேவா? எவ்விதத்திலும் ப்ரஹ்மனில் மாற்றம் என்பது இதில் தவிர்க்க முடியாதது.

“பாஸ்கரரின் பேதாபேத விமர்சம்“ முற்றியது.

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/16/vedartha-sangraham-17/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வேதார்த்த ஸங்க்ரஹம் 16

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

<< பகுதி 15

வேதங்களின் உட்பொருள் உணர்தல்

அத்வைத விமர்சம்

பத்தி 66

எல்லா பேத ஞானத்தையும்  நீக்கும் ஞானம் எங்கிருந்து பிறக்கிறது? வேதங்களிலிருந்து என்றால் அது ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. ப்ரபஞ்சம் மாயம் என்கிற   ஞானத்தை நீக்கும் ஆற்றல் வேதங்களுக்கு இல்லை. ஏனெனில் அவை (1) ப்ரஹ்மத்தினின்று வேறுபட்டவை, (2) அவையே அவித்யையின் விளைபொருள்கள்.

இது இப்படி இருக்கிறது:

ஒருவர் பார்வைக் கோளாறால் ஒரு துண்டுக் கயிற்றைப் பாம்பு என்று எண்ணிவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாயையை  ‘இது பாம்பன்று’ எனும் இன்னொரு ஞானத்தால் நீக்க முடியாது, அந்த ஞானமும் அதே தவறான பார்வையால் விளைந்தால். குழப்பதினால் அது பாம்பு என்று அஞ்சுகிற ஒருவரின் அச்சத்தை அதே குழப்பமுள்ள வேறொருவரால் நீக்க முடியாது. அல்லது குழம்பியுள்ள ஒருவரின் உறுதி மொழியாலும் அது பாம்பன்று என்று தேறாது.

வேதங்களைப் பயிலும் ஒரு வித்யார்த்தி அவை ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை என்று அறிவதால், வேறு பிறவற்றைப் போன்றே வேதங்களும் இந்த மாயை பற்றிய குழப்பத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன என்று தெரியும்.

கருத்துரை

உண்மைப் ப்ரமாணத்திலிருந்தே உண்மை ஞானம் உண்டாக முடியும். அத்வைதக் கோட்பாட்டில் வேதங்கள் வித்யாசத்தைச் சொல்வதால் அவையும் அஞ்ஞானத்தின் விளைபொருள்களே. எதை நீக்க முயற்சிக்கின்றனவோ அதன் பொருள்களாய் இருப்பதால் வேதங்கள் மாயையை விலக்க நம்பத்தக்க ப்ரமாணங்கள் அல்ல.

பத்தி 67

பேதம் நீக்கும் ஞானம், அறிவோன், இந்த அறிவுக்கு மூலமான வேதங்கள் யாவும் ப்ரஹ்மத்தினின்றும் வேறானதால் இந்த ஞானத்துக்குட்பட்டவை என ஒருவர் நினைப்பாரேல் மேலும் குழப்பங்கள் விளையும்.  

ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தினின்றும் வேறானதால் இது அதற்குட்பட்டது என்பது பொய்யாகி, ப்ரபஞ்சம் மெய் என்றாகிவிடும்.

ஒருவன் தன மகன் இறப்பதை ஸ்வப்னத்தில் கண்டு, விழித்து எழும்போது மகனை உயிரோடு உள்ளபடி காண்பதுபோலாகும் இது.

தத்வமஸி போன்ற வாக்யங்கள் ப்ரபஞ்சத்தை விளக்கப் போதுமானவையல்ல ஏனெனில் கயிறா பாம்பா எனத் தானே குழம்பியுள்ளவர் சொற்கள் போன்றவையே இவை.

கருத்துரை

அத்வைதி ப்ரஹ்மன் தவிர்த்த யாவும், அது பற்றிய மாயையை அகற்றுவது உள்பட அது நீங்கியவன் உள்பட, மாயையே என்கிறார். உலகம் என்பது அநுபவம் மூலம் உணரப்படுவதால் அதன நீக்கம் பற்றிய மாயத் தோற்றமே அது உண்மை என மெய்ப்பிக்கிறது.

பத்தி 68

இக்கருத்துக்கு ஒரு  பதில் சொல்லலாம்: கனவில் ஒன்றுக்கு அஞ்சினவர் ஏதோ ஒரு நிலையில் இது கனவு என உணர்வாரேல் பயம் நீங்கும் யாவும் கனவு என்ற அறிவால். இதுவும் அதுபோல்தான்.

இவ்விளக்கம் எப்பிரச்னையையும் தீர்க்காது. கனவு என்பதால் பயம் நீங்கிற்று எனும் அறிவு மீண்டும் பயம் வர ஹேதுவாகும்.

வேத வித்யார்த்திக்கே (அத்வைதத்தில்) வேதங்களும் கனவின் பகுதியே என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

கருத்துரை

கனவில் அனுபவிக்கும் பயம் விழித்தெழுந்து உணர்வுறுவதால் நீங்குகிறது. அது கனவு என்கிற கனவுணர்வால்  அன்று.

சில மனச்சிக்கல்கள் இருக்கும்போது விழித்திருக்கும்போதே உண்மையன்று/உலகே கனவு என்றிருப்போரையும் காண்கிறோம். இதனால் மன உளைச்சலும் தொடர்ந்த பயமும் இவர்களுக்குள்ளதும் காண்கிறோம்.

நவீன அத்வைதிகள், கைகாட்டிமரம் சென்று சேரிடம் ஆகாது என இதைச் சமாளிக்க முயற்சி செய்கின்றனர்.  ஆனால் சேரிடத்தைக் காட்டும் கைகாட்டி மரம் நிஜம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகவே இந்த நவீன அத்வைத விளக்கமும் எடுபடவில்லை,

பத்தி 69

அத்வைதத்தின் மற்றொரு விளக்கம் இப்படியும் அமையலாம்: வேதங்கள் மாயையின் விளைவு, இறுதியில் வெறும் பொய் என்றாலும் ப்ரஹ்மன் தூயது, அபேதமானது எனும் வேதக் கூற்று மெய்தான். எல்லாம் அடக்கமாகும்போது, ப்ரஹ்மன் மட்டுமே நிற்கிறது.

இந்த வாதமும் சரியன்று. சூன்ய வாதிகள் (பௌத்தர்) நோக்கில் ப்ரஹ்மனும் இல்லை, “சூன்யமே உள்ளது” என்பர். பௌத்தர் கூற்று அறியாமையின் விளைவு என அத்வைதி  தள்ள முடியாது. ஏனெனில், அத்வைதியின் நோக்கிலேயே வேதங்கள் ப்ரஹ்மனைச் சொல்வனவும் அறியாமையின் வெளிப்பாடே.

ப்ரஹ்மன் மட்டுமே மெய் என்பதால் ப்ரபஞ்சம் அடங்கிப்போகும் எனில், ப்ரஹ்மனும் சூன்யம் மட்டுமே என்பதில் அடங்கிப்போகும் என்பதே  சரி ஆகும்.

உண்மையில் (சூன்ய வாதம் செய்யும்) பௌத்தர், (ப்ரஹ்மன் ஒன்றே உண்மை மீதி யாவும் பொய் எனும்) அத்வைதி இருவருமே தத்வ விசாரத்தில் இறங்க உரிமை அற்றவர்கள். ஏனெனில் அவர்கள் தத்வத்தில் ஒன்றைவிட மற்றொன்று மேலும் அறிவு பூர்வமானதா என அறிந்துகொள்ளும் ஞானமுண்டு என்பதை ஏற்கும் இடமுண்டு. இருவருக்குமே அறிவை அடையும் வழிகள் யாவும் மாயை, அந்த நிலையிலேயே அவர்கள் தத்வ விசாரம் அடங்கிவிடுகிறது!  இது ஆசார்யர்கள் பிறராலும் காட்டப் பட்டுள்ளது.

கருத்துரை

தத்வ ஞானத்தில் அடிப்படையாவது , ஞானத்தின் மூலம் (ப்ரமாணம்) தத்வத்தின் முடிவு (ஸித்தாந்தம்) போன்றே உண்மையாய் இருத்தல் வேண்டும்.  முடிபு, சித்தாந்தம் எவ்வளவு முக்யமோ அவ்வளவு முக்கியமானது ப்ரமாணமும். நம் நோக்கு, ஞானம், எல்லாவற்றிற்கும் அடிப்படையான ப்ரமாணத்தையே மறுப்பது/வினவுவது, உட்கார்ந்துள்ள மரத்தையே வெட்டுவது போலாகும். அப்படிச் செய்பவர்கள் தத்வ விசாரத்துக்குத் தகுதியற்றவர்கள்.  

பத்தி 70

நாம் காணும் ப்ரபஞ்சம் இறுதியில் பொய்யானது என்பதற்கு என்ன ஆதாரம்?

ஒரு வேளை  இப்படிச் சொல்லலாம்: த்ருஷ்டி என்பது அறியாமையின் விளைவு எனவே உண்மையை அறிவதில் பிழைபட்டது.  குறையற்ற முறைகளால் நமக்கு ப்ரபஞ்சம் பற்றிய ஞானம் கிடைக்கிறது.

இவ்விடையும் பிழையானது. பேதானுபவம் தரும் ப்ரத்யக்ஷத்தால் என்ன குறை உண்டு? அது காலம் காலமாக நமக்கு வரும்  பழக்கமல்லவா? ! ப்ரத்யக்ஷம் மட்டும் அன்று, வேதமும் அந்த அஞ்ஞானத்தின் வெளிப்பாடே! இரண்டும் அஞ்ஞானத்தின் வெளிப்பாடுகும்போது ஒன்றை மற்றொன்று விலக்க முடியாதே.

பத்தி 71

மாறாக, நம் ஸம்ப்ரதாயம் மரபு வெவ்வேறு ஞானக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து வருகிறது. ப்ரத்யக்ஷம் என்பது நிலம் நீர் ஆகாசம் எனும் பூதங்களையும் அவற்றின் குணங்களான ஒளி ஒலி சுவை ஸ்பர்சம் முதலானதுகளையும் அவற்றின் வழி மனிதர் முதலான உயிர் இனங்களையும் தழுவியது. வேதங்கள் இவ்வெல்லாவற்றையும் தன் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை அறிவதும், வழிபட்டு த்யானிப்பதும் அவரை அடைவதுமான வழிகளைக் காட்டுகிறது இந்த ப்ரத்யக்ஷத்துக்கும் வேதங்களுக்கும் முரண்பாடு இல்லை.

கருத்துரை

ப்ரத்யக்ஷமும் வேதங்களும் பரஸ்பரம் சார்புள்ளவை.

பத்தி 72

வேதங்களை அநாதியானவை, தொடக்கம் முடிவு அற்றவை இடையறாத ஆன்மீக மரபுள்ளவை என்று மதிப்போர்  அவ்வேதத்தை அநுஸரித்த ப்ரத்யக்ஷத்தையும் ஏற்க வேண்டும்.

ஆகவே தவறான அடிப்படையில் எழுந்துள்ள இவ்வாதங்களை மறுக்க இவ்வளவே போதும். இவை வேதங்களின் உண்மையை, உயர்வை நூற்றுக்கணக்கான சான்றோர் நிலை நாட்டியபடி நின்று நிலவும்.

“அத்வைத விமர்சம்” பகுதி முற்றியது.

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/15/vedartha-sangraham-16/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org