Monthly Archives: April 2020

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 4

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

<< பகுதி – 3

तानि प्रमाणानि प्रत्यक्षानुमानशब्दाख्यानि त्रीण्येव । तत्र साक्षात्कारिप्रमाकरणं प्रत्यक्षम् । अनुमानादिव्यावृत्त्यर्थं साक्षात्कारिति । दुष्टेन्द्रियव्यावृत्त्यर्थं प्रमेति ।

தானி ப்ரமாணானி ப்ரத்யக்ஷானுமானஶப்தாக்யானி த்ரீண்யேவ | தத்ர ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷம் | அனுமானாதிவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸாக்ஷாத்காரிதி | துஷ்டேந்த்ரியவ்யாவ்ருத்த்யர்த்தம் ப்ரமேதி |

இப்படி விளக்கப்பட்ட ப்ரமாணமானது மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – அவை (1) ப்ரத்யக்ஷம், (2) அநுமானம், (3) ஶப்தம். அவைகளில் நேராய் (ஸாக்ஷத்தாய்) வஸ்துவை அறிவதற்குக் காரணமாயிருப்பது ப்ரத்யக்ஷமாகும். ஸாக்ஷாத்காரி என்னும் சொல்லினால் அநுமானம், ஶப்தம் ஆகிய ப்ரமாணங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தோஷமுள்ள இந்த்ரியங்களால் வருவதை ப்ரமாணம் என்று கொள்ளாமல் இருக்க லக்ஷணத்தில், ப்ரமை எனும் சொல் சேர்ந்திருக்கிறது.

 • அநுமானம், ஶப்தம் ஆகியவற்றின் விளக்கம், லக்ஷணம் ஆகியவை மேலே அவதாரங்களில் வரப் போகின்றன. இப்போதைக்கு ஸாக்ஷத்தாய் (நேராய்) வஸ்துவை அறிவது ப்ரத்யக்ஷத்தால் என்று கொள்வது.
 • துஷ்ட இந்த்ரியத்திற்கு எடுத்துக்காட்டு காமாலை நோய் வந்தவனின் கண்கள். அதைக் கொண்டு பார்த்தால் வெண்சங்கும் மஞ்சளாகத் தெரியும். அதனை ப்ரமை விலக்குகிறது.
 • ப்ரமையின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டது.

तच्च प्रत्यक्षं द्विविधम् – सविकल्पकनिर्विकल्पकभेदात् । निर्विकल्पकं नाम गुणसंस्थानादिविशिष्टप्रथमपिण्डग्रहणम् । सविकल्पकं तु सप्रत्यवर्शं गुन्णसंस्थानादिविशिष्टद्वितीयादिपिण्डग्रहणम् । उभयमप्येतत् विशिष्टविषयमेव । अविशिष्टग्राहिणः ज्ञानस्यानुपलम्भात् अनुपपत्तेश्च ।

தச்ச ப்ரத்யக்ஷம் த்விவிதம் – ஸவிகல்பகநிர்விகல்பகபேதாத் | நிர்விகல்பகம் நாம குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டப்ரதமபிண்டக்ரஹணம் | ஸவிகல்பகம் து ஸப்ரத்யவர்ஷம் குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டத்விதீயாதிபிண்டக்ரஹணம் | உபயமப்யேதத் விஶிஷ்டவிஷயமேவ | அவிஶிஷ்டக்ராஹிண: ஞானஸ்யானுபலம்பாத் அனுபபத்தேச்ச |

இந்த ப்ரத்யக்ஷ ஞானமானது இரண்டு வகை.

 1. நிர்விகல்பகம்
 2. ஸவிகல்பகம்.

நிர்விகல்பகமாவது ஒரு வஸ்துவை முதன் முதலில் அறிவது. அப்போதும் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம். ஸவிகல்பகமாவது அதே வகுப்பைச் சேர்ந்த வஸ்துவை பின்னர் அறியும் பொழுது உண்டாகும் ஞானமாகும். இப்போதும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  இப்படி இரண்டாவதாக அறிவதினால் (ஸவிகல்பக ஞானத்தால்) முதலில் அறியப்பட்ட வஸ்து நினைவில் வந்து, சில அமைப்புக்கள் இந்த வஸ்துவின் வகுப்பிற்கே பொது என்னும் ஞானம் உண்டாகிறது.

உதாரணமாக முதன் முதலில் ஒரு பசுமாட்டைப் பார்க்கிறோம். அப்போது நமக்கு பசுவின் ஸம்ஸ்தானம் – அமைப்புகள், தெரிந்து அவற்றைக் க்ரஹித்துக் கொள்கிறோம். இப்பொழுது எல்லாப் பசுக்களுக்கும் இந்த அமைப்புக்கள் இருக்கும் என்பதை அறியமாட்டோம். இது நிர்விகல்பகம் ஆகும்.

பின்பு சிறிது காலம் கழித்து வேறு ஒரு பசுமாட்டைப் பார்க்கும் பொழுது, கோத்வம் முதலிய விசேஷணங்கள் மற்றும் ஸம்ஸ்தானங்கள் பசு வகுப்பிற்கே பொதுவானவைகள் என்று அறிந்து கொள்கிறோம்.

இவ்விருவகையிலும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  விசேஷணங்கள் இல்லாமல் வஸ்துவின் ஞானம் மட்டும் உண்டாகாது. விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது.

 • இது தன்னை (விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது) பாஷ்யகாரர் केनचिद्विशेषेण इदमित्थमिति हि सर्वा प्रतीतिरूपजायते  [கேனசித்விசேஷேண இதமித்தமிதி ஹி ஸர்வா ப்ரதீதிரூபஜாயதே] (ஸ்ரீ பாஷ்யம் 1-1-1) என்றருளிச்செய்தார். அதாவது எல்லா ஜ்ஞாநமும், ஏதாவது விசேஷத்தையிட்டு ‘இது இப்படியானது’ என்றுதானே உண்டாகிறது.
 • அத்வைதிகள், நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்கிறார்கள். நிர்விகல்பகம் என்பதை விகல்பம் அற்றது என்று கொண்டு, ப்ரஹ்மம் ஒன்றே இருக்கிறது. வேறு இல்லை அது தன்னைக் க்ரஹிக்கிறோம் என்கிறார்கள்.
 • विवितान् कल्प्यन्ते इति विकल्पकः – பலவாகக் கல்பிக்கப்படுவது
 • இது கிடையாது, நிர்விகல்பகம் என்றால் ஏதாவது விசேஷணங்களை விட்டுவிட்டு க்ரஹிப்பதே அன்றி, விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது அன்று. ஒருவனை நிர்தனன்/தரித்ரன் என்று சொன்னால் மிகவும் குறைவாக பணம் உள்ளவன் என்று ஆகுமே அன்றி, பணமே இல்லாதவன் என்று ஆகாது.
 • வைசேஷிகர்களும் நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது, ஸவிகல்பகமாவது – விசேஷணம், விசேஷ்யம், அவைகளின் ஸம்பந்தம் ஆகிய மூன்றும் தோன்றும் ஜ்ஞாநம் என்கிறார்கள்.
 • இதற்கு உதாரணமாகக் குழந்தைகள் இப்படித் தான் க்ரஹிப்பார்கள் என்கிறார்கள்.
 • ஆனல் அதுவும் சரியன்று, பாலர்களும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள். ஒரு குழந்தை விளையாடும் பொம்மையை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைக் கொடுத்தால் அது ஏற்பதில்லை. எனவே குழந்தைகளும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள்.

ग्रहणप्रकारस्तु – आत्मा मनसा संयुज्यते । मन इन्द्रियेण, इन्द्रियमर्थेन । इन्द्रियाणां प्राप्यकारित्वनियमात् । अतः घटादिरूपार्थस्य चक्षुरुपेन्द्रियस्य च सन्निकर्षे सति अयं घटः इदि चाक्षुषज्ञानं जायते । एवं स्पार्शन प्रत्यक्षादयोपि । द्रव्यग्रहणे संयोगः सम्बन्धः । द्रव्यगतरूपादिग्रहणे समवायानङ्गीकाराति संयुक्ताश्रयणं सम्बन्धः ॥

க்ரஹணப்ரகாரஸ்து – ஆத்மா மனஸா ஸம்யுஜ்யதே | மன இந்த்ரியேந, இந்த்ரியமர்தேந | இந்த்ரியாணாம் ப்ராப்யகாரித்வநியமாத் | அத: கடாதிரூபார்தஸ்ய சக்ஷுரூபேந்த்ரியஸ்ய ச ஸன்னிகர்ஷே ஸதி அயம் கட: இதி சாக்ஷுஷஞானம் ஜாயதே | ஏவம் ஸ்பார்சந ப்ரத்யக்ஷாதயோபி | த்ரவ்யக்ரஹணே ஸம்யோக: ஸம்பந்த: | த்ரவ்யகதரூபாதிக்ரஹணே ஸமவாயானங்கீகாராதி ஸம்யுக்தாஶ்ரயணம் ஸம்பந்த: ||

ப்ரத்யக்ஷ ஜ்ஞாநமாவது கண் முதலான இந்த்ரியங்களால் உண்டாவது என்று விளக்கப்பட்டது. இப்பொழுது அவை க்ரஹிப்படும் ப்ரகாரம் விளக்கப்படுகிறது. முதலில் ஆத்மா மனதோடு சேருகிறது, மனம் இந்த்ரியத்தோடு சேருகிறது, இந்த்ரியம் கடம் முதலான வஸ்துக்களோடு சேருகிறது. இப்படி ஐந்து விதமான ப்ரத்யக்ஷ ஜ்ஞாநங்கள் உண்டாகின்றன, கண், மெய், நாக்கு, செவி, மூக்கு என்ற ஐந்து இந்த்ரியங்கள் வாயிலாக அவை உண்டாகின்றன.

 • இதனால் தான் மனம் ஒன்றாவிட்டால் இந்த்ரியங்கள் அதன் வேலையைச் செய்தாலும் நம்மால் க்ரஹிக்க இயலவில்லை. இதனை அனுபவத்திலேயே உணரலாம். நாம் மனம் செலுத்தாவிட்டால், எதிரில் நடந்து வரும் நமக்குத் தெரிந்த நபரையே அறியாமல் சென்று விடுவோம்.

இப்படி ஒரு த்ரவ்யத்தை அறியும் பொழுது அதற்கும் இந்த்ரியத்திற்கும் ஸம்பந்தம் ஸம்யோகம். அந்த த்ரவ்யத்தை ஆச்ரயித்திருக்கும் ரூபம் முதலான குணங்கள் அறியும் பொழுது அந்த ஸம்பந்தம் – ஸம்யுக்தாஶ்ரயணம்.

வைசேஷிகர்கள் ரூபம் முதலான குணங்கள் ஸமவாயம் என்பதினால் சேர்ந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். எம்பெருமானார் தரிசனத்தில் ஸமவாயம் அங்கீகரிக்கப் படவில்லையாதலால், அது ஸம்யுக்தாஶ்ரயணம் ஆகிறது.

 • ஸமவாயம் என்பது ஒரு ஸம்பந்தம் – அதை ஒரு பொருளானது, அதன் ஆதாரத்தை விட்டுப் பிரியாமல் இருந்தால் அந்த தொடர்பு ஸமவாயம் என்பது வைசேஷிகர்களின் கொள்கை. இதிலுள்ள குறைகள்/தோஷங்கள் ஸ்ரீ பாஷ்யத்தில் மஹத்தீகாதிகரணத்தில் காட்டப்பட்டுள்ளது.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org