அருளிச்செயல் அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஆழ்வார்கள் பாசுரங்களும் ஆசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளும் மிகவும் உயர்ந்ததாகக் கொண்டாடப்படுகின்றன. நம் பெரியோர்கள் எப்பொழுதும் ஆழ்வார் ஆசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டே பொழுது போக்கி வந்துள்ளனர். மேலையார்களின் செயல்களே நமக்கும் கொள்ளத்தகுந்தவைகளாக ஆகும். நாமும் முடிந்தவரை ஆழ்வார் ஆசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளை தினமும் ஸேவித்து அதன் வழி நடக்கவும் முயற்சி செய்தல் நலம்.

அருளிச்செயல் அறிமுகம் என்ற தலைப்பில்  ஸர்வேச்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களான திவ்யப்ரபந்தப் பாசுரங்களை முதலிலிருந்து கற்பவர்களுக்கு வசதியாக, பொதுத்தனியன்கள், திருப்பல்லாண்டு, கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருப்பள்ளியெழுச்சி,திருப்பாவை மற்றும் சாற்றுமுறை ஆகியவைகளை எளிய விளக்கவுரையுடன் இங்கே தொகுத்து அளித்துள்ளோம். அனைவரும் இதைக் கொண்டு  பயன்பெறுமாறு ப்ரார்த்தித்துக்கொள்கிறோம்.

மேலும் இதில் பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் திவ்யப்ரபந்த பாசுர விவரங்கள், 108 திவ்யதேசங்கள், ஆழ்வார்/ஆசார்யர்கள் திருநக்ஷத்ரங்கள் மற்றும் அநத்யயன கால க்ரமம் ஆகிய அடிப்படை விஷயங்களைச் சேர்த்துள்ளோம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org