ஆழ்வார்திருநகரி வைபவம் – உத்ஸவங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி வைபவம்

<< ஸந்நிதிகள்

120188497.0p9mnWFF

இங்கே பெருமாள், தாயார்கள், ஆழ்வார், ஆசார்யர்கள் ஆகியோர் ஆண்டு முழுவதும் பல உத்ஸவங்களை அனுபவிக்கிறார்கள். தினமும் ஆழ்வாருக்குத் தாமிரபரணி தீர்த்தம் எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து திருமஞ்சனம் நடக்கும்.

மாதந்தோறும் நடக்கும் புறப்பாடுகள்

  • திருவோணம் – பெருமாள்
  • ரோஹிணி – கண்ணன்
  • புனர்பூசம் – ஸ்ரீராமர்
  • உத்ரம் – பெருமாள் மற்றும் ஆழ்வார்
  • திருவிசாகம் – பெருமாள் மற்றும் ஆழ்வார்
  • ஏகாதசி – பெருமாள் மற்றும் தாயார்
  • த்வாதசி – ஆழ்வார்
  • அமாவாஸ்யை – பெருமாள்
  • பௌர்ணமி – ஆழ்வார்
  • வெள்ளிக்கிழமை – பெருமாள் மற்றும் தாயார்

4000 திவ்யப்ரபந்த ஸேவாகால க்ரமம்

ஆழ்வார் ஸந்நிதியில் மாதந்தோறும் 4000 திவ்யப்ரபந்த ஸேவாகால க்ரமம் அந்தந்த ஆழ்வார்களின் திருநக்ஷத்தன்று அவரவர்கள் ப்ரபந்தம் சாற்றுமுறை ஆகும் க்ரமத்தில் அமைக்கப்பட்டுள்ளது:

  • அஸ்வினி – பெரிய திருமொழி 9ஆம் பத்து, திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல்
  • பரணி – பெரிய திருமொழி 10ஆம் பத்து, பெரிய திருமடல்
  • கார்த்திகை – பெரிய திருமொழி 11ஆம் பத்து, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
  • ரோஹிணி – அமலனாதிபிரான்
  • ம்ருகசீர்ஷம் –
  • திருவாதிரை – இராமானுச நூற்றந்தாதி
  • புனர்பூசம் – பெருமாள் திருமொழி, திருவாய்மொழி 1ஆம் பத்து
  • பூசம் – திருவாய்மொழி 2ஆம் பத்து
  • ஆயில்யம் – நான்முகன் திருவந்தாதி, திருவாய்மொழி 3ஆம் பத்து
  • மகம் – திருச்சந்தவிருத்தம், திருவாய்மொழி 4ஆம் பத்து
  • பூரம் – நாச்சியார் திருமொழி, திருவாய்மொழி 5ஆம் பத்து
  • உத்ரம் – பெரியாழ்வார் திருமொழி 1ஆம் பத்து, திருவாய்மொழி 6ஆம் பத்து
  • ஹஸ்தம் – பெரியாழ்வார் திருமொழி 2ஆம் பத்து, திருவாய்மொழி 7ஆம் பத்து
  • சித்திரை – பெரியாழ்வார் திருமொழி 3ஆம் பத்து, திருவாய்மொழி 8ஆம் பத்து
  • ஸ்வாதி – பெரியாழ்வார் திருமொழி 4ஆம் மற்றும் 5ஆம் பத்துக்கள், திருவாய்மொழி 9ஆம் பத்து
  • திருவிசாகம் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி 10ஆம் பத்து
  • அனுஷம் –
  • கேட்டை – திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
  • திருமூலம் – உபதேசரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி
  • பூராடம் – பெரிய திருமொழி 1ஆம் பத்து
  • உத்ராடம் – பெரிய திருமொழி 2ஆம் பத்து
  • திருவோணம் – பெரிய திருமொழி 3ஆம் பத்து, முதல் திருவந்தாதி
  • அவிட்டம் – பெரிய திருமொழி 4ஆம் பத்து, இரண்டாம் திருவந்தாதி
  • ஸதயம் – பெரிய திருமொழி 5ஆம் பத்து, மூன்றாம் திருவந்தாதி
  • பூரட்டாதி – பெரிய திருமொழி 6ஆம் பத்து
  • உத்ரட்டாதி – பெரிய திருமொழி 7ஆம் பத்து
  • ரேவதி – பெரிய திருமொழி 8ஆம் பத்து

குறிப்பு

  • நித்யப்படி ஸேவாகாலம் –
    • பெருமாள் ஸந்நிதியில் – இரவு – திருப்பல்லாண்டு, சென்னியோங்கு முதலியவை
    • ஆழ்வார் ஸந்நிதியில் – காலை – தினமும் கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருப்பாவை முதலில் ஸேவிக்கப்படும். பிறகு அந்தந்த நாளுக்கான பாசுரங்கள்.
    • ஆழ்வார் ஸந்நிதியில் – இரவு – கண்ணிநுண்சிறுத்தாம்பு, ஏழை ஏதலன், ஆழியெழ .
  • அநத்யயன காலத்தில் நித்யப்படியில்
    • ஆழ்வார் ஸந்நிதியில் – காலை – உபதேசரத்தினமாலை ஸேவாகாலம்
    • ஆழ்வார் ஸந்நிதியில் – இரவு – திருவாய்மொழி நூற்றந்தாதி ஸேவாகாலம்.
  • தனுர் மாஸம் பெருமாள் மற்றும் ஆழ்வார் ஸந்நிதியில் தனித்தனியே திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை ஸேவாகாலம்.

உத்ஸவங்கள்

சித்திரை

  • பெருமாள் ப்ரஹ்மோத்ஸவம் – 10 நாட்கள் – திருவாதிரை அன்று புறப்பாட்டில் எம்பெருமானார் எதிர் ஸேவை, 9ஆம் நாள் – சித்திரைத் திருத்தேர், 10ஆம் நாள் – மிக்க ஆதிப்பிரான் தீர்த்தவாரி – சித்திரை உத்ரம்
  • மதுரகவி ஆழ்வார் திருநக்ஷத்ரம் – சித்திரை சித்திரை
  • எம்பெருமானார் திருவவதார உத்ஸவம் – 11 நாட்கள் – 10ஆம் நாள் திருவாதிரை (பவிஷ்யதாசார்யன் ஸந்நிதி). ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்.
  • சித்ரா பௌர்ணமி – 2 நாட்கள் – பௌர்ணமி – பெருமாள் புறப்பாடு, ப்ரதமை – ஆழ்வார் எல்லைக்கல் புறப்பாடு
  • ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ப்ரஹ்மோத்ஸவம் 4ஆம் நாள் – பொலிந்து நின்ற பிரான், ஆழ்வார் ஸ்ரீவைகுண்டம் புறப்பாடு

வைகாசி

  • நம்மாழ்வார் திருவவதார உத்ஸவம் – 10 நாட்கள் – 5ஆம் நாள் நவதிருப்பதிப் பெருமாள் கருட ஸேவை, நம்மாழ்வார் ஹம்ஸ வாஹனம், மதுரகவி ஆழ்வார் பரங்கி நாற்காலி, 7ஆம் நாள் ஆழ்வார் எம்பெருமானார் சேர்த்தி திருமஞ்சனம் (பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியில்), 8ஆம் நாள் – அப்பன் கோயில் (அவதார ஸ்தலம்) புறப்பாடு, 9ஆம் நாள் – வைகாசித் திருத்தேர் , 10ஆம் நாள் – வைகாசித் திருவிசாகம் ஆழ்வார் ஸ்வயம் திருமேனி தீர்த்தவாரி, தொடர்ந்து 5 நாட்கள் விடாயாற்றி.
  • வருஷாபிஷேகம் – வைகாசி உத்ரட்டாதி

ஆனி

  • முதல் நாள் – முப்பழம் (கோடை பூர்த்தி)
  • வஸந்தோத்ஸவம் – 10 நாட்கள் – ஆனி உத்ரம் சாற்றுமுறை
  • பெரியாழ்வார் – ஆனி ஸ்வாதி
  • ஸ்ரீமந் நாதமுனிகள் – ஆனி அனுஷம்
  • திருப்புளியாழ்வார் திருநக்ஷத்ரம் – ஆனி திருமூலம்
  • ஜ்யேஷ்டாபிஷேகம் – ஆனி கேட்டை. ஏழு திரைகள் போட்டு நடக்கும்.

ஆடி

  • பக்ஷிராஜர் உத்ஸவம் – 10 நாட்கள் – சாற்றுமுறை ஆடி ஸ்வாதி
  • திருவாடிப்பூரம் – குருகூர் நாச்சியார் உடையவர் கோயில் எழுந்தருளுதல்

ஆவணி

  • திருப்பவித்ரோத்ஸவம் – 8 நாட்கள் – ஆவணி சுக்ல பக்ஷ த்வாதசி தொடக்கம். 8ஆம் நாள் மிக்க ஆதிப்பிரான் தீர்த்தவாரி
  • ஸ்ரீஜயந்தி – புராண படனம், கண்ணன் புறப்பாடு, மறுநாள் – உரியடி – பெருமாள் தாயார் ஆழ்வார் கண்ணன் புறப்பாடு
  • திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் ப்ரஹ்மோத்ஸவம் – 8ஆம் நாள் – ஆழ்வார் திருக்கோளூர் புறப்பாடு

புரட்டாசி

  • நவராத்ரி உத்ஸவம் – 9 அல்லது 10 நாட்கள் – அமாவாஸ்யை தொடக்கம்
  • விஜய தசமி – பரிவேட்டை
  • திருவேங்கடமுடையான் – புரட்டாசி திருவோணம்.
  • வேதாந்தாசார்யர் – புரட்டாசி திருவோணம் – ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்

ஐப்பசி

  • முதல் நாள் – வெந்நீர்க்காப்பு தொடக்கம்
  • ஊஞ்சல் உத்ஸவம் – 10 நாட்கள் – ஐப்பசி உத்ரம் சாற்றுமுறை
  • மணவாள மாமுனிகள் – 10 நாட்கள் – ஐப்பசி திருமூலம் சாற்றுமுறை – ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு ஆழ்வாருடைய பல்லக்கில் எழுந்தருளி மங்களாசாஸனம்
  • ஸேனை முதலியார் – ஐப்பசி பூராடம்
  • பொய்கை ஆழ்வார் – ஐப்பசி திருவோணம்
  • பிள்ளை லோகாசார்யர் – 10 நாட்கள் – ஐப்பசி திருவோணம் சாற்றுமுறை – ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்
  • பூதத்தாழ்வார் – ஐப்பசி அவிட்டம்
  • பேயாழ்வார் – ஐப்பசி ஸதயம்
  • தீபாவளி – ஆழ்வார் ஆசார்யர்கள்,  ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளல்

கார்த்திகை

  • திருமங்கை ஆழ்வார் – கார்த்திகை கார்த்திகை
  • திருப்பாணாழ்வார் – கார்த்திகை ரோஹிணி
  • திருக்கார்த்திகை தீபம் – சொர்க்கப்பனை, திருத்தொண்டைக்கு எண்ணெய் சாற்றுதல். மறுநாள் தொடங்கி அநத்யயன காலம்.
  • சுக்ல பக்ஷ ஏகாதசி – கைசிக ஏகாதசி – ஆழ்வார் ஆசார்யர்கள்,  ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளல்
  • கைசிக த்வாதசி – கைசிக புராணம் வாசித்தல், அண்ணவியார் ப்ரஹ்மரதம். பெருமாள் கருடஸேவை, ஆழ்வார் ஹம்ஸ வாஹனம்

மார்கழி

  • 1ஆம் நாள் – திருப்பள்ளியெழுச்சி தொடக்கம். தனுர் மாஸ க்ரமம்.
  • அமாவாசை மறுநாள் தொடக்கம் (பிச்சத்திலும் ஆரம்பிக்கும்) – திருவத்யயன உத்ஸவம் தொடக்கம். 21 நாட்கள். திருவத்யயன உத்ஸவம் பகல் பத்து 9 அல்லது 10 அல்லது 11 நாட்கள் வரும்.  பகல் பத்தில் – தினமும் ஆழ்வாருக்கு இரண்டு திருக்கோலம், தசமி அன்று – ஆழ்வார் சயனம், எம்பெருமானாருக்கு நாச்சியார் திருக்கோலம்.
  • சுக்ல பக்ஷ ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி. பொலிந்து நின்ற பிரான் சயனம்.
  • இராப்பத்தில் – தினமும் திருமுடி ஸேவை. திருவாதிரை அன்று ஆழ்வார் எம்பெருமானார் சேர்த்தி திருமஞ்சனம், 8ஆம் நாள் திருவேடுபறி. 10ஆம் நாள் நம்மாழ்வார் மோக்ஷம், 11ஆம் நாள் வீடு விடை திருமஞ்சனம்.
  • அடுத்து வரும் முதல் திருவிசாகம் – அநத்யயன காலம் முடிவு
  • மார்கழி கேட்டை – தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தை

  • சங்கராந்தி – வங்கக் கடல் – திருப்பள்ளியெழுச்சி சாற்றுமுறை
  • கனு பரிவேட்டை – தாயார்கள் தீர்த்தவாரி
  • திருமழிசை ஆழ்வார் – தை மகம்
  • கூரத்தாழ்வான் – தை ஹஸ்தம் – ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்

மாசி

  • மாதத்தின் முதல் நாள் அல்லது மாசி உத்ஸவம் முதல் நாள் – வெந்நீர்க்காப்பு முடிவு
  • ஆழ்வார் திருமேனி ப்ரதிஷ்டோத்ஸவம் – 13 நாட்கள் – 7ஆம் நாள் ஆழ்வார் எம்பெருமானார் சேர்த்தி திருமஞ்சனம் (பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியில்), 9ஆம் நாள் – மாசித் திருத்தேர், 10 (பெருமாள்) மற்றும் 11ஆம் (ஆழ்வார்/ஆசார்யர்கள்) நாட்கள் தெப்போத்ஸவம், 12ஆம் நாள் ஆழ்வார் ஸ்வயம் திருமேனி தீர்த்தவாரி, 13ஆம் நாள் ஆழ்வார் திருத்தொலைவில்லிமங்கலம் எழுந்தருளி சாற்றுமுறை – திருத்தொலைவில்லிமங்கலம் அத்யயன உத்ஸவம் சாற்றுமுறை.
  • குலசேகராழ்வார் – மாசிப் புனர்பூசம்
  • திருக்கச்சி நம்பி – மாசி ம்ருகஸீர்ஷம். பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியிலிருந்து ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்

பங்குனி

  • பெருமாள் ப்ரஹ்மோத்ஸவம் – 10 நாட்கள் – 9ஆம் நாள் – பங்குனித் திருத்தேர், 10ஆம் நாள் – மிக்க ஆதிப்பிரான் தீர்த்தவாரி – பங்குனி உத்ரம்
  • பங்குனி உத்ரம் – ஆதி நாச்சியார் உடையவர் கோயில் எழுந்தருளுதல்
  • யுகாதி – ஆழ்வார் ஆசார்யர்கள்,  ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளல்

குறிப்பு

  • பொதுவாக முக்ய உத்ஸவங்களில் 5ஆம் நாள் பெருமாள் கருட ஸேவை, ஆழ்வார் ஹம்ஸ வாஹனம்.
  • நான்கு உத்ஸவங்களிலும் கொடியேற்றம்
  • நான்கு உத்ஸவங்களில் நான்கு திருத்தேர்
  • ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலில் யாருக்குத் தீர்த்தவாரி நடந்தாலும் பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியில் எழுந்தருளி திருமண்காப்பு

ஆதாரம் – காறிமாறன் கலைக் காப்பகம் – நாட்குறிப்பு

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

This entry was posted in azhwarthirunagari vaibhavam on by .

About sarathyt

Disciple of SrImath paramahamsa ithyAdhi pattarpirAn vAnamAmalai jIyar (29th pattam of thOthAdhri mutt). Descendant of komANdUr iLaiyavilli AchchAn (bAladhanvi swamy, a cousin of SrI ramAnuja). Born in AzhwArthirungari, grew up in thiruvallikkENi (chennai), presently living under the shade of the lotus feet of jagathAchArya SrI rAmAnuja, SrIperumbUthUr. Learned sampradhAyam principles from vELukkudi krishNan swamy, gOmatam sampathkumArAchArya swamy and many others. Full time sEvaka/servitor of SrIvaishNava sampradhAyam. Taking care of koyil.org portal, which is a humble offering to our pUrvAchAryas. koyil.org is part of SrI varavaramuni sambandhi Trust (varavaramuni.com) initiatives.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s