Category Archives: Uncategorized

அந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 13

இனி தத்பக்தாபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய், உபேய விரோதிகளுமாயிருக்கும், கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து அவரைக் கோயிலிலே குடியிருக்கவொண்ணாதபடி கடலைக் கலக்கினாப்போலே பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில்நின்றும் புறப்பட்டுத் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம் “பூகி கண்டத்  வயஸஸரஸ ஸ்நிக்தநீரோபகண்டாம் ஆவிர்மோத ஸ்திமிதஶகுநாநூதிதப்ரஹ்மகோஷாம் | மார்க்கே மார்க்கே பதி கநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஶ்யேயம் தாம் புநரபி புரீம் ஶ்ரீமதீம் ரங்கதாம்ந:” என்று பெருமாளையும் கோயிலையும் விட்டுப் பிரிந்து மிகவும் க்லேஶப்பட்டுக்கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டரை ஸேவித்து “அடியேனுக்குத் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு ப்ராஸாதித்தருளவேணும்” என்று மிகவும் அநுவர்த்திக்க, பட்டரும் தம்முடைய ஶிஷ்யரான நஞ்சீயரைப் பார்த்து ‘ஜீயரே, எனக்குக் கோயிலையும் , பெருமாளையும் பிரிந்த விஶ்லேஷாதிஶயத்தாலே செவிகள் சீப்பாயாநின்றது; ஆகையாலே எனக்கு வாய்திறந்தொரு வார்த்தை சொல்லப்போகிறதில்லை. நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு இந்த ஶ்ரீவைஷ்ணவருக்குச் சொல்லும்’ என்று அவரை ஜீயர் ஶ்ரீபாதத்திலே காட்டிக்கோடுத்து இங்ஙனே நடந்து செல்லுகிற நாளிலே பட்டரளவிலே விரோதித்த வீரஸுந்தரப்ரஹ்மராயனுக்கு ஶரீரவிஶ்லேஷமாக, அவ்வளவில் கோயிலிலே பட்டர் திருத்தாயாரான ஆண்டாளை ஸேவித்துக்கொண்டு எழுந்தருளியிருந்த ஶ்ரீவைஷ்ணவர்கள் பட்டருடைய விரோதி போகையாலே திருப்பரிவட்டங்களை முடிந்து ஆகாஶத்திலே ஏறிட்டு, நின்றார் நின்ற திக்கிலே ஸந்தோஷித்துக் கூத்தாட, அவ்வளவில் ஆண்டாள் செய்தபடி திருமாளிகைக்குள்ளே புகுந்து திருக்காப்பைச்சேர்த்து தாளையிட்டுக் கொண்டு வயிற்றைப்பிடித்து வாய்விட்டழுதாள்; அவ்வளவில் ஸந்தோஷித்துக் கூத்தாடுகிற முதலிகள் ஆண்டாளைப் பார்த்து ‘என்! பட்டருடைய விரோதி போகவும், பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்தருளவும், நாமெல்லாரும் கண்டு வாழவும் உமக்கு மிகவும் அஸஹ்யமாயிருந்ததோ?’ என்ன, அவ்வளவில் ஶ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து ஆண்டாள் அருளிச்செய்தபடி:- பிள்ளைகாள்! நீங்கள் ஒன்றும் அறிகிறிகோளில்லை; வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்கிறவன் நேரே ஆழ்வானுடைய ஶிஷ்யனாயிருந்து, ஆசார்ய புத்ரரான பட்டரைப் திண்டாட்டங்கண்டு அவர்திறத்தில் மஹாபராதத்தை தீரக்கழியப் பண்ணி, ‘அறியாமல் செய்தேனித்தனை, பொறுத்தருளவேணும்’ என்று பட்டர் திருவடிகளிலே தலைசாய்ப்பதும் செய்யாதே ‘இப்படி செய்தோம்’ என்கிற அநுதாபமற்றுச் செத்துப்போனான். ஆகையாலே அவன் ஶரீரம் விட்ட போதே யமபடர்கையிலே அகப்பட்டுக்கலங்கி அடியுண்டு மலங்க விழிக்கிறான் என்றத்தை நினைத்து என் வயிறெரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை – என்று ஆண்டாள் அருளிச்செய்தார். ஆகையால் அபராதாதத்தினுடைய கொடுமை இப்படியிருக்குமென்று அஸ்மதாசார்யோக்தம்.

அந்த பட்டர் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சோழமண்டலத்திலே எழுந்தருளியிருக்கும் கடக்கத்துப்பிள்ளை உடையவரைப் பழுக்க ஸேவித்து, சோமாசியாண்டான் தாமும் மேல்நாட்டிலே எழுந்தருளியிருந்து  ஶ்ரீபாஷ்யம் நிர்வஹிக்கிறார் என்கிற விசேஷம் கேட்டு அங்கே எழுந்தருள, சோமாசியாண்டானும் ‘கடக்கத்துப் பிள்ளை எழுந்தருளப்பெற்றதே’ என்று மிகவும் ஆதரித்துத் தம்முடைய திருமாளிகையிலே கொண்டிருக்க, அப்பிள்ளையும் ஆண்டான் அருளிச்செய்கிற ஶ்ரீபாஷ்யம் முதலான பகவத் விஷயங்களைக் கேட்டுக் கொண்டு ஆண்டானை ஸேவித்துக் கொண்டு ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து ஶ்ரீபாஷ்யம் சாற்றினவாறே மீளவும் சோழமண்டலத்துக்கு எழுந்தருளுவதாக அப்பிள்ளை புறப்பட்டவளவிலே ஆண்டானும் எல்லையறுதி எழுந்தருளி அப்பிள்ளையை வழிவிட்டு மீண்டு எழுந்தருளுகிறபோது ‘தேவரீர் இங்கே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்தவாறே அடியேனுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருந்தது; இப்போது விஶ்லேஷத்தாலே பெருக்க வ்யாகுலமாயிராநின்றது. அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை ப்ரஸாதித்தருளவேணும்’ என்று அப்பிள்ளையை மிகவும் அநுவர்த்திக்க, அப்பிள்ளை அருளிச்செய்தபடி:- ‘சோமாசியாண்டான்! தேவரீர் ஜ்ஞாந வ்ருத்தருமாய், ஶ்ரீபாஷ்யம், திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகருமாய், எல்லாத்தாலும் பெரியவராயிருந்தீரேயாகிலும் சாற்றியிருக்கிற திருப்பரிவட்டத்தலையிலே பாகவதாபசாரநிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும்’ என்று அருளிச்செய்தாரென்று அஸ்மதாசார்யோக்தம்.

‘ப்ராதுர்பாவைஸ்ஸுரநரஸமோ தேவதேவஸ்ததீயா: ஜாத்யா வ்ருத்தைரபி ச குணத: தாத்ருஶோநாத்ரகர்ஹா| கிந்து ஶ்ரீமத் புவநபவநத்ராணதோந்யேஷு வித்யாவ்ருத்தப்ராயோ பவதி விதவாகல்பகல்ப: ப்ரகர்ஷ:”, “அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்திசிந்தநம்| மாத்ருயோநி பரீக்ஷாயாஸ்துல்யமாஹுர்மநீஷிண:”, “அர்ச்சாயாமேவ மாம் பஶ்யந்மத்பக்தேஷுசமாம் த்ருஹந்| விஷதக்தைரக்நிதக்தைராயுதைர்ஷந்தி மாமஸௌ”, “யா ப்ரீதிர்மயி ஸம்வ்ருத்தா மத் பக்தேஷு ஸதாஸ்துதே| அவமாநக்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத்”, மத்பக்தம் ஶ்வபசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: | பத்மகோடிஶதேநாபி ந க்ஷமாமி கதாசந” என்றுமுண்டு. “சண்டாலமபி மத்பக்தம் நாவமந்யேத புத்திமாந்| அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகே நர:”, “அஶ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேயஶதாநி ச| நிஷ்க்ருதிர்நாஸ்தி நாஸ்த்யேவ வைஷ்ணவம் வேஷிணாம் ந்ருணாம்”, “ஶூத்ரம்வா பகவத் பக்தம் நிஷாதம் ஶ்வபசம் ததா| ஈக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் த்ருவம்”, “அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீநஜந்மந:| மத்பக்தாந் ஶ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஶ்சண்டாலதாம் வ்ரஜேத்”, “அபிசேத்ஸுதுராசாரோ பஜதே மாதநந்யபாக்| ஸாது ரேவ  ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸ்தோ ஹி ஸ:”, “ஸர்வைஶ்ச லக்ஷணைர்யுக்தோ நியுதஶ்ச ஸவகர்மஸு| யஸ்து பாகவதாந் த்வேஷ்டி ஸுதூரம் ப்ரச்யுதோ ஹி ஸ:” “அமரவோரங்கமாறும்” என்று தொடங்கி, “நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும்”, “ஈஶ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச்செய்வர்”, “அவமாநக்ரியா”, “பாகவதாபசாரந்தான் அநேகவிதம்; அதிலேயொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிரூபணம். இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம். அத்தை மாத்ருயோநி பரீக்ஷையோடொக்கும் என்று ஶாஸ்த்ரம் சொல்லும்”, “த்ரிஶங்குவைப்போலே கர்மசண்டாலனாய் மார்விலட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய்விடும்”, “ஜாதிசண்டாலனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாயிருக்க யோக்யதையுண்டு; அதுவுமில்லை இவனுக்கு ஆரூடபதிதனாகையாலே”.

“திருவுடைமன்னர், செழுமாமணிகள், நிலத்தேவர், பெருமக்கள், தெள்ளியார், பெருந்தவத்தர், உருவுடையார், இளையார், வல்லார், ஒத்துவல்லார், தக்கார், மிக்கார், வேதவிமலர், சிறுமாமனிசர், எம்பிரான்தன சின்னங்கள்” என்று நங்குலநாதரான ஆழ்வார்கள் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு இப்படித் திருநாமம் சாற்றுகையாலே கேவலம் தன்னோடக்க ஒரு மநுஷ்யன் என்று வைஷ்ணவனை நினைத்திருக்கையே பாகவதாபசாரம். “தஸ்யப்ரஹ்மவிதாகஸ:”, “நாஹம் விஶங்கே ஸுரராஜவஜ்ராநந த்ர்யக்ஷஶுலாந் ந யமஸ்ய தண்டாத்| நாக்ந்யர்க்கஸோமா நாலவித்தஹஸ்தாத் ஶங்கே ப்ருஶம் பாகவதாபசாராத்”. ப்ரஹ்மவிதோபமாநாத் “ஆயுஶ்ஶ்ரியம் யஶோ தர்மம் லோகாநாஶிஷ ஏவ ச| ஹந்தி ஶ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹததிக்ரம:”, “நிந்தந்தியே பகவதஶ்சரணாரவிந்த சிந்தாவதூத ஸகலாகிலகல்மஷௌகாந்| தேஷாம் யஶோதநஸுகாயுரபத்யபந்து மித்ராணி சஸ்திரதராண்யபி யாந்தி நாஶம்”, “அப்யர்ச்சயித்வா கோவிந்தம்  ததீயாந் நார்ச்சயந்தி  யே| ந தே விஷ்ணோ: ப்ரஸாதஸ்ய பாஜநம் டாம்பி கா ஜநா:”, ‘இழவுக்கவர்கள்பக்கல் அபசாரமே போரும்”, “வைஷ்ணவாநாம் பரீவாதம் யோ மஹாந் ஶ்ருணுதே நர:| ஶங்குபி ஸ்தஸ்ய நாராசை: குர்யாத் கர்ணஸ்ய பூரணம்”, “இவ்விடத்திலே வைநதேயவ்ருத்தாந்தத்தையும், பிள்ளைப்பிள்ளையாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது”. இப்படி ஆசார்யாபசாரமும், தத்பக்தாபசாரமும் அதிக்ரூரமென்று வேதஶாஸ்த்ரபுராணாதிகளும், அவற்றினுடைய அர்த்த தாத்பர்யங்களையும் யதாதர்ஶநம் பண்ணி ஸர்வஜ்ஞராயிருக்கும் நம் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் ஒருக்கால் சொன்னாப்போலே ஒன்பதின்கால் சொல்லிக் கையெடுத்து ஒருமிடறாகக் கூப்பிடுகையாலே ஆஸ்திகனாய், உஜ்ஜீவநபரனாய் இருக்குமவன் மறந்து ஒருகாலத்திலும், ஒரு தேஶத்திலும் , ஸ்வப்நாவஸ்தையிலும் தனக்கு வகுத்த ஶேஷிகளாய், ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகராயிருந்துள்ள இவ்விஷயங்களை கிஞ்சித்மாத்ரமும் நெகிழநினைக்கக் கடவனல்லன். நெகிழ நினைத்தானாகில் நிலம் பிளந்தால் இழையிடவொண்ணாதாப்போலவும், கடலுடைந்தால் அடைக்கவொண்ணாதாப் போலவும், மலைவிழுந்தால் தாங்கவொண்ணாதாப் போலவும் இது அப்ரதிக்ரியமாயிருப்பதொரு அநர்த்தம் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச் செய்தருளுவர். ஆகையாலே ஸதாசார்ய – தத்துல்ய- விஷயங்களை கிஞ்சிந்மாத்ரமும் நெகிழ நினைக்கலாகாதென்கிற அவஶ்யாநுஷ்டேயங்களை ப்ரதிபாதிக்கிறது மேல்.

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 4

 

 

ஆழ்வார்களும் பகவத் ராமாநுஜரும்

மணவாள மாமுநிகள், நம்பெருமாள் சாதித்தபடி இதுவே எம்பெருமானார் தரிசனம்

“எம்பெருமானார் தரிசனம் என்றே நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்”. ஸ்ரீவைஷ்ணவ உலகுக்கு வெளியிலும், இப்போது உலகெங்கிலும், பக்தி இயக்கம் தொடங்க வித்திட்டவர் சுவாமியே என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆகவே, த்ரமிடோபநிஷத்தின் பெருமையை இப்பேராசிரியரின் க்ரந்தங்களிலிருந்து அறியவேண்டியது அவஸ்யமாகிறது.

முற்பகுதிகளில் ஸ்வாமியை திவ்யப்ரபந்த ஆசிரியர்/மாணாக்கர், ஆழ்வாரின் பக்தர் , தமது சிஷ்யர்கள் பலரின்மூலம் அக்கருத்துகளைப் பரப்பியவர் என்கிற நோக்கில் பார்த்தோம்.

அடுத்து மேல் வரும் கட்டுரைகளில்  பகவத் பாஷ்யகாரரின் க்ராந்தங்களுக்கும் ஆழ்வார்களின் திருவாக்குகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பை உணர்வோம்.

சுவாமியின் க்ரந்தங்கள், அவரது வ்யாக்யைகளு க்கு ஒரு தனிப் பாணி உண்டு. எங்கெல்லாம் பரமாத்மாவைப் பற்றிய குறிப்பு வருகிறதோ,அங்கு சுவாமி ஆழ்வார்களை யே பின்பற்றி பெருமானின் தனி மேன்மை, பரம ஸ்வரூபம், உயர்வற உயர்நலன்கள் , திருக்கல்யாண குணங்கள், சுபாஸ்ரயமும் திவ்யமுமான இயல்புகள், மநோஹரமான திவ்ய ரூபம்,திவ்ய சேஷ்டி தங்கள்  ஆகியவற்றில் அமிழ்கிறார். சுவாமி ராமாநுஜர் ஒரே ஓரிடத்தில்கூட இவ்வாய்ப்பினை நழுவ விட்டதில்லை.எம்பெருமானின்​அநுபவத்தை அவர் தாம் இடைவிடாது உணர்ந்து, வாசிப்பவர்களுக்கும்  கேட்பவர்களுக்கும் மனதில் அந்தப் பேரானந்தத்தை அவர் அருளுகிறார். ஆழ்வார்களின் பக்திப் பள்ளியில் பயின்று தெரிய சுவாமி ராமானுஜரால் பரமாத்மானுபவம் ஏற்படும் ஒரு  வாய்ப்பையும் நழுவ விடமுடியாது.

இந்த ஆத்மாநுபவத்தை சுவைக்க விரும்புபவர்கள் குறைந்த பக்ஷம் ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், கத்யத்ரயம் ஆகியவற்றை சேவிக்க வேண்டும்.

 

மன்மனா பவ!

பகவத் கீதை ஒன்பதாம் அத்யாயத்தில் பகவான் கிருஷ்ணன் சொல்கிறார்:

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு

மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

இதன் எளிதான பொருளாவது:”உன் மனத்தை என்னிடம் நிலை நிறுத்து, என் பக்தனாய் இரு,என்னை உபாசி,என்னை வணங்கு , என்னை உயர்ந்த அடைக்கலமாக எய்து. உன் மனத்தை இப்படிப் பழக்கிக் கொண்டால் நீ என்னையே அடைவாய்”.

“மன்  மனா பவ” என்றால் உன் மனத்தை என் மீது நிலை நிறுத்து என்பதாகும்.இச்சொற்கள் மிக எளிதாக விளக்கப் படக் கூடியவை…எவ்வளவு எளிதென்றால், ஸ்ரீ மத்வாசார்யர் இதைத் தொடவுமில்லை. ஸ்ரீ சங்கராசார்யர் मयि वसुदेवो मन: यस्य तव स त्व मन्मना भव (மயி வசுதேவோ மன: யஸ்ய தவ ஸ தவ மன் மனா பவ) என்று வ்யாக்யாநித்தார்.இதில் நேரடிப் பொருள் நீங்கலாகத் தரப்படும் ஒரே கூடுதல் விசேஷார்த்தம் “என்னை” என்பதற்கு “வாசுதேவ”= உன் மனத்தை வாசுதேவன் ஆகிய என்னிடம் நிலை நிறுத்து என்பது.இந்தச் சொற்களுக்கு இந்தளவு எளிய விளக்கமே போதுமானதாய் இருக்க வேண்டும்.

சுவாமியின் பாஷ்யமோ என்னில், கல்நெஞ்சினரையும் கண்ணீர் விடச் செய்யும்…मन्मना भव – मयि सर्वेश्वरे निखिलहेयप्रत्यनीककल्याणैकताने सर्वज्ञे सत्यसङ्कल्पे निखिलजगदेककारणे परस्मिन् ब्रह्मणि पुरुषोत्तमे पुण्डरीकदलामलायतेक्षणे स्वच्छनीलजीमूतसंकाशे युगपदुदितदिनकरसहस्रसदृशतेजसि लावण्यामृतमहोदधौ उदारपीवरचतुर्बाहौ अत्युज्ज्वलपीताम्बरे अमलकिरीटमकरकुण्डलहारकेयूरकटकभूषिते अपारकारुण्यसौशील्यसौन्दर्यमाधुर्यगाम्भीर्यौदार्यवात्सल्यजलधौ अनालोचितविशेषाशेषलोकशरण्ये सर्वस्वामिनि तैलधारावदविच्छेदेन निविष्टमना भव! (மன்  மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக  கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி  லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனை எப்பொழுதும் தன்னையே நினத்திருக்கும்படியும், தன்  பக்தனாகும்படியும், தன்னை விரும்பி நேசித்து பக்தியுடன் தொழும்படியும் உபதேசிக்கிறான். இப்படிச் செய்வதன் மூலம் அர்ஜுனன் தந்து மிக உயர்ந்த இலக்கை அதாவது எம்பெருமானையே அடைவான் என்றும் கூறுகிறான்.  இவ்விடத்தில் ஓர் உரையாசிரியருக்கு இந்தச் சொற்களை அப்படியே சொல்வது தவிர வேறு என்ன ஆவச்யகதை உண்டு?ஸ்வாமி ராமானுஜரோ எனில் இவ்வெல்லைக் கோட்டைத் தாண்டி, ஈஸ்வரனின் எண்ணிறந்த அனந்த கல்யாண குணங்கள் அனைத்தையும் விவரிக்கிறார். எம்பெருமான் அர்ஜுனனை இயந்திர கதியில் சில சுவையற்ற செயல்களைச் செய்யவா சொல்கிறான்?அவன் இவனைத் தன்னை அன்போடு நேசிக்கவும், முழுவதாக மனத்தை அர்ப்பணிக்கவும் அன்றோ சொல்கிறான்?கண்ணன் யார்?அவன் ஒரு மாணாக்கனைச்  சில கார்யங்கள் செய்ய வற்புறுத்தும் ஒரு சாதாரண மனிதனா? அவன் தானே ஸ்வயம் தேவாதிதேவன், பரப்ரம்மம்,மிக உயர்ந்த மேன்மை படைத்த அழகிய மனங்கவரும் சிந்தித்தார் தம்மைப் பேரின்பத்தில் ஆழ்த்தும் நிகரில் பெரியோன்.அவன் எவர்க்கும் தலைவன், ஒப்பாரும்மிக்காரும் இல்லாத ஈஸ்வரேஸ்வரன் ஆகிலும் எவர்க்கும் எளியனாய் அருள் செய்பவன். எங்ஙனம் நோக்கினாலும், எம்பெருமானைத் தவிர அன்புக்கும் வந்தனைக்குக் உரியவர் யார் உளர்?

அர்ஜுனனுக்கும் இது தெளிவாகத் தெரியும். எனினும் ஸ்வாமி ராமாநுஜர் இவ்விஷயத்தை மிக விளக்கமாக விவரிக்க விரும்புகிறார். ஆழ்வார்கள் வழி வந்தவராதலால், ஸ்வாமி எம்பெருமான் மீது ஆராக் காதல் கொண்டு அவனை நேசிப்பவர், தம் மனம் முழுவதாக அவனைச் சார்ந்திருப்பவர். கூரத்தாழ்வான் இதையே   नित्य्म्च्युत पदाम्बुज व्युक्मरुक्म व्यमोह (நித்யமச்யுத பதாம்புஜயுகம௫க்ம வ்யாமோஹ) என்று அருளிச்செய்தார். ஆகவேதான் இந்தச் சொற்களைச் சொன்ன மாத்திரத்தில் மடை திறந்த வெள்ளம் போல் சுவாமியின் பக்திப்ரவாஹம் எம்பெருமானின் ஆழ்ந்த அனுபவமாக வெளிவருகிறது. இவ்வெளிப்பாடே  கேட்போர் , வாசிப்போர் மனங்களிலும் பக்தியுணர்வை உண்டாக்குகிறது, இதுவே எம்பெருமானின் திருவுள்ளமும்! ஏக காலத்தில் ஸ்வாமி ஓர் அசாதாரண வ்யாக்யாதா, கடைத்தேற்றும் ஆச்சார்யர், ஆழ்ந்த பக்தர் எனப் பல பரிமாணங்களை நமக்கு மிக இலகுவாகக் காட்டுகிறார். ஆழ்வார்களின் ஈரச் சொற்களில் நனைந்த ஆசார்யர் எம்பெருமானின் சொற்களைக் கேட்கும்போது அவற்றுக்கு ஏற்படும் பரிமாணங்கள் அசாத்தியமானவை.

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை  வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும் விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம், அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் , கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்  குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய் சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

இந்த விளக்கத்தினால் சுவாமி ராமாநுஜர் பக்தி செய்ய வேண்டியதன் காரணங்களை மிக அழகாக எடுத்துக் காட்டிவிட்டார். அவனது மனோஹர திவ்ய ரூபம், அவனது பெருமேன்மை அவனது ஆனந்தமய திருக் கல்யாண குணங்கள் ,அடியார்களின்  நெஞ்சை ஈர்க்கின்றன. அவன் அவர்களை உவகைப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தி கிருஷ்ண திரிஷ்ணையில் ஆழ்ந்து அவனை நேசித்து வணங்கி அவனுக்குக் கைங்கர்யம் செய்யும் ஆசை அவர்களுக்குக் கிளர்ந்தெழுகிறது. இந்தப் பங்க்தி களை சேவிக்கும்போதோ கேட்கும்போதோ அடியார் மனம் தானே கண்ணன் எம்பெருமானிடம் ஈடுபட்டு, அவனது கீதா மெய்மைப் பெருவார்த்தையில் பதிவர் எனும் சுவாமியின் திருவுள்ளம் நிறைவு பெறும்.

பக்திப் பெருஞ்செல்வமே சுவாமி ராமாநுஜர் ஆழ்வார்களிடமிருந்து பெற்ற பெரும் தனம் என்பது சொல்லவே வேண்டாவிரே. அமுதனாரும் இதைத்தானே

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன்  ….என்றும் போற்றினார்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/03/dramidopanishat-prabhava-sarvasvam-5/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீ ராமானுஜ வைபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே ஶடகோபாய நம:   ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முன்னுரை

மாமுனிகள் தன்னுடைய உபதேஶ ரத்தின மாலையில் “நம்பெருமாள் தானே நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் தரிஶனம் என்று பெயரிட்டு, இந்த ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் செய்த பேருபகாரத்தை எப்பொழுதும் நினைத்திருக்கும்படி செய்தார்” என்று அருளிச்செய்துள்ளார். எம்பெருமானார் இந்த ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தொடங்கியவரோ அல்லது ஸம்ப்ரதாயத்தின் ஓரே ஆசார்யரோ அன்று. ஆனால் இந்த ஸம்ப்ரதாயம் காலத்துக்கும் நிற்கும் படி அவர் நிலை நாட்டி வைத்ததால் மிகவும் கொண்டாடப்படுகிறார். ஒருவர் முயன்றால் எம்பெருமானின் பெருமையை உணர்ந்தும் பேசியும் விடலாம்.ஆனால் எம்பெருமானாரின் பெருமையோ எல்லையில்லாததால், ஒருவராலும் உணர்ந்தோ பேசியோ முடிக்கக் கூடியது அல்ல. ஆனால் நாமோ நம்முடைய பெருமை பெற்ற குரு பரம்பரையின் மூலம் எம்பெருமானாரின் ஸம்பந்தத்தைப் பெற்றுள்ளோம். அந்த பலத்தைக் கொண்டு எம்பெருமானாரின் பெருமைகளைச் சிறிது சிறிதாக அனுபவிப்போம்.

பிறப்பும் சிறு பிராயமும்

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி”, என்கிற ப்ரஸித்தமான ஶ்லோகத்தில் ஆதி ஶேஷன் யுகம்தோறும் அவதரிக்கும் க்ரமமும் கலி யுகத்தில் வரவிருக்கும் அவதாரமும் காட்டப்பட்டுளது. சரமோபாய நிர்ணயம் என்னும் க்ரந்தத்தில் ஸ்ரீ ராமானுஜரே ஆதி ஶேஷனின் கலியுக அவதாரம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் எம்பெருமானாரின் அவதாரம் எம்பெருமானின் அவதாரத்தைக் காட்டிலும் சிறந்தது என்று “மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே” என்கிற பாசுரத்தில் கூறுகிறார். மாமுநிகள் இத்தை “எங்கள் நாதனான ஸ்ரீமன் நாராயணன் இவ்வுலகில் பல அவதாரங்கள் செய்தாலும், உலகோர்கள் அவனை ஸ்வாமியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எம்பெருமானார் இவ்வுலகில் பிறந்தவுடன் (மற்றும் ஸ்ரீ பாஷ்யம் முதலியவைகளைக் கொண்டு விளக்கியவுடன்), உலகத்தார்கள் உண்மை அறிவு பெற்று எம்பெருமானுக்கு அடிமை என்று உணர்ந்தார்கள்” என்று விளக்கியுள்ளார்.

மாமுனிகள் தானும் எம்பெருமானாரின் அவதாரத்தை கொண்டாடும் வகையில் ஆர்த்தி ப்ரபந்தத்தில் “எனைப்போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ, உனைப்போல் பொறுக்க வல்லார் உண்டோ, அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவா, ஏழைக்கு இரங்காய் இனி” என்கிறார். இதன் பொருள் “என்னைப் போன்று தவறுகள் செய்பவர் யாரேனும் உண்டோ? உன்னைப் போன்று அத்தவறுகளைப் பொறுப்பவர் தான் உண்டோ? யதிகளுக்கு தலைவரான, அனைத்து உலகத்தில் இருப்பவரையும் உஜ்ஜீவிப்பிக்கப் பிறந்த ராமானுஜரே! எனக்கு உதவி செய்யும்” என்று ப்ரார்த்திப்பதாக அமைந்துள்ளது.

இவற்றிலிருந்து, பகவத் ராமானுஜர் எல்லா உலகத்தவருக்கும் உள்ள துன்பத்தைப் போக்கி, அவர்களைப் பரமபதத்தில் எம்பெருமானுக்கு எப்பொழுதும் தொண்டு செய்யும் நிலைக்கு உயர்த்தவே அவதரித்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

கேஶவ ஸோமயாஜியார் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இவர். இவரின் மாமாவான பெரிய திருமலை நம்பி, இவருக்கு “இளையாழ்வார்” என்ற திருநாமமிட்டு, தாப ஸம்ஸ்காரம் செய்து வைத்து இவரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈடுபடுத்தினார்.

இளமையில், இவர் பேதாபேதம் (ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் ஒரே சமயத்தில் ஒற்றுமை மற்றும் வேற்றுமை உள்ளது என்று கூறுவது) என்னும் வேற்று ஸித்தாந்தத்தில் சிறந்து விளங்கிய யாதவப்ரகாஶர் என்கிற வித்வானிடத்தில் வேதாந்தக் கல்வி பயின்றார். ஒரு கேள்வி எழலாம் – ஏன் இவர் வேற்று ஸித்தாந்த வித்வானிடத்தில் பயில வேண்டும்? பெரியோர்கள் இவ்வாறு ஸமாதானம் அளிப்பர் – ஒரு ஸித்தாந்தத்தை வாதில் வெல்வதற்கு முதலில் அதை முழுமையாகக் கற்றறிய வேண்டும். இவரும் அவ்வாறே, பூர்வபக்ஷத்தை நன்றாகக் கற்றறிந்து, பின்பு விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இந்தக் கொள்கையைப் பெரியவாச்சான் பிள்ளை தன்னுடைய ஆசார்யனான நம்பிள்ளையைப் பெரிய திருமொழி 5.8.7 பாசுர வ்யாக்யானத்தில் “அந்தணன் ஒருவன்” என்பதை விளக்குமிடத்தில் கொண்டாடும் விதத்தைக் கொண்டு அறியலாம். அவர் கூறுவது “முற்பட த்வயத்தைக் கேட்டு, இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரத்க்ஷேபத்துக்குடலாக ந்யாயமீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச்செயலிலேயாம்படி பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிரே ஒருவன் என்பது” (முதலில் த்வயத்தை ஆசார்யன் மூலம் அறிந்து கொண்டு, பின்பு இதிஹாஸ புராணங்களை அறிந்து, ப்ரதிவாதிகளை வாதில் ஜயிக்க ந்யாயம் மீமாம்ஸை போன்றவற்றைக் கற்று, பின்பு ஆழ்வார்களின் அருளிச்செயலிலேயே பொழுதைப் போக்கும் நம்பிள்ளையே சிறந்த ‘ஒருவன்’ என்று கொண்டாடப்படுபவர்). இதிலிருந்து தங்களுடைய ஸித்தாந்த்தை நிலை நாட்டுவதற்கு, பூர்வபக்ஷத்தை (எதிராளிகளின் வாதத்தை) அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாஶரிடம் கல்வி பயிலும்பொழுது, இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மேலும், ஸ்ரீ ராமானுஜரின் சிறந்த ஞானத்தாலும், பிறருக்கு விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறமையாலும், அவரின் புகழ் வளரத் தொடங்கியது. இது கண்டு பொறுக்க முடியாத யாதவப்ரகாஶரின் ஶிஷ்யர்கள் அவரைக் காசி யாத்ரைக்கு அழைத்துச் சென்று அச்சமயத்தில் கொல்ல நினைத்தனர். ஆனால், (பிற்காலத்தில் எம்பார் என்று கொண்டாடப்பட இருக்கும்) கோவிந்தரின் ஸமயோஜித புத்தியால், அவர்களிடமிருந்து தப்பி, ஒரு வேடுவ தம்பதியின் உருவில் வந்த காஞ்சீபுரம் பெருந்தேவித் தாயார் பேரருளளான் எம்பெருமானின் துணையால் காட்டில் இருந்து தப்பி காஞ்சீபுரம் வந்தடைகிறார் ராமானுஜர்.

பஞ்ச ஸம்ஸ்கார வைபவம்

அங்கு வந்த பிறகு, ராமானுஜர் தேவப் பெருமாளுக்குத் திருவாலவட்டம் (விசிறி) கைங்கர்யம் செய்யும் அந்தரங்கரான பூவிருந்தவல்லியைச் சேர்ந்த திருக்கச்சி நம்பியைச் சந்திக்கிறார். திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் ப்ரிய ஶிஷ்யர்.தேவப் பெருமாள் நம்பியிடம் அவ்வப்பொழுது உரையாடும் அளவுக்கு மிகவும் அன்பு கொண்டவர். ராமானுஜர் நம்பியின் மேற்பார்வையில் தேவப் பெருமாளுக்குத் தினமும் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யம் செய்து வருகிறார். அச்சமயத்தில், ராமானுஜர் தஞ்சம்மாளை மணம்புரிந்து காஞ்சீபுரத்திலேயே வசித்து வருகிறார். அவருக்குச் சில சந்தேகங்கள் எழ, தேவப் பெருமாளிடம் அவற்றைக் கேட்டுத் தெளிவு படுத்துமாறு நம்பியிடம் (என்ன சந்தேகங்கள் என்று கூறாமல்) ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ராமானுஜரின் நிலையைத் தேவப் பெருமாளுக்கு உரைக்க, தேவப் பெருமாள் நம்பி மூலமாக ராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளுகிறார். அவையாவன:

 • நானே பர தெய்வம்
 • ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றல்ல வேறுபட்டவை
 • ப்ரபத்தியே என்னை அடைவதற்குத் தகுந்த வழி
 • அப்படிச் சரணடைந்தவர்கள் கடைசிக் காலத்தில் என்னை நினைக்க வேண்டாம் (நான் அவர்களை அப்பொழுது நினைப்பேன்)
 • அப்படிச் சரணடைந்தவர்கள் இந்த உடம்பின் முடிவிலேயே முக்தி அடைவர்கள்
 • பெரிய நம்பியை ஆசார்யனாகப் பற்று

இந்த நிகழ்ச்சி ராமானுஜரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

திருக்கச்சி நம்பி தேவப் பெருமாள் அளித்த ஆறு வார்த்தைகளை ராமானுஜரிடம் உரைத்து அவரின் எண்ணத்துடன் பொருந்தியுள்ளதா என்று வினவுகிறார். ராமானுஜரும் நம்பியை வணங்கி, அவை பொருந்தியுள்ளதாக ஆமோதிக்கிறார். நம்பி எம்பெருமான் மற்றும் ராமானுஜரின் திருவுள்ளங்கள் பொருந்தி உள்ளதைக்கண்டு மிகவும் ஆநந்திக்கிறார். ராமானுஜரும், உடனே பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீரங்கத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

பெரிய நம்பி நாதமுனிகளின் திருப்பேரனாரான ஆளவந்தாரின் முக்கிய சீடர்களில் ஒருவர். முன்னதாக, ஸம்ப்ரதாயத்தின் தலைமை ஆசார்யான ஆளவந்தார், காஞ்சீபுரத்திற்கு வந்தபோது,  ராமானுஜர் ஒரு சிறந்த ஆசாரியராவார் என்று கடாக்ஷித்தார். ராமானுஜரும் ஆளவந்தாரின் பெருமையை அறிந்திருந்ததால் அவரின் சீடராக விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் ராமானுஜர் சென்ற முறை ஆளவந்தாரைச் சந்திக்கச் ஸ்ரீரங்கம் சென்றபோது, காவிரிக்கரையை அடையும் சமயத்திலேயே ஆளவந்தார் திருநாடு எழுந்தருளிவிட்டார். ஆளவந்தார் அச்சமயத்தில் மூன்று குறைகளோடு இருந்தார் – அவை 1) வ்யாஸ பராஸர ரிஷிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும், 2) நம்மாழ்வாருக்கு நன்றி செலுத்த வேண்டும் 3) ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு விளக்கம் எழுத வேண்டும். மடங்கிய மூன்று விரல்களுடன் கூடிய ஆளவந்தாரின் சரம திருமேனியைச் சேவித்த ராமானுஜர், தான் அந்த மூன்று குறைகளையும் போக்குவதாக சபதம் செய்ய, மூன்று விரல்களும் உடனே விரிந்தன. பின்பு ராமானுஜர் வருத்தத்துடன் காஞ்சீபுரம் திரும்பி தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன் பின், ஸ்ரீரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பியிடம் ராமானுஜரை பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, தர்சன ப்ரவர்த்தகராக ஆக்குமாறு ப்ரார்த்தித்தனர். பெரிய நம்பியும் ராமானுஜரை தன்னுடைய சிஷ்யராக்கும் எண்ணத்துடன் காஞ்சீபுரத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

இருவரும், காஞ்சீபுரத்துக்கு அருகில் உள்ள மதுராந்தகம் என்னும் இடத்தில் சந்தித்தனர்.ராமானுஜர் ஏரிகாத்த பெருமாள் கோயிலுக்கு வந்தவுடன், பெரிய நம்பியை அவருடைய குடும்பத்துடன் சந்திக்கிறார். அவரை வணங்கி, தன்னை அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். பெரிய நம்பி காஞ்சீபுரத்துக்குச் சென்று அங்கே வைத்து பஞ்சஸம்ஸ்காரம் செய்யலாம் என்கிறார். ராமானுஜரோ “இவ்வுலகம் மிகவும் அநித்யம், முன்பே ஆளவந்தாரிடம் சீடராகும் வாய்ப்பை இழந்தேன், அதே போல மீண்டும் நடக்கக் கூடாது” என்கிறார். எனவே, நம்பியை அப்போதே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளுமாறு ப்ரார்த்திக்க நம்பியும் அவ்வாறே செய்தார். இவ்வாறு, ராமானுஜர் ஶாஸ்த்ரத்தில் கூறியபடி ஒரு ஆசார்யனிடத்தில் க்ரமமாக சரணடைய வேண்டியதின் முக்கியத்துவத்தைத் தானே அனுஷ்டித்துக் காட்டினார். பின்பு, அங்கிருந்து அனைவரும் காஞ்சீபுரம் சென்றடைய, பெரிய நம்பி தன்னுடைய குடும்பத்துடன் சில காலம் அங்கு தங்குவதாகத் தீர்மானிக்கிறார்.

காஞ்சீபுரத்தில் பெரிய நம்பி திருக்கச்சி நம்பியால் வரவேற்கப்பெற்று தேவப் பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு, ராமானுஜர் பெரிய நம்பிக்குத் தன் திருமாளிகையின் ஒரு பகுதியைத் தங்குவதற்குக் கொடுத்தார். நம்பியும் தன் குடும்பத்துடன் அங்கே ஆறு மாதங்கள் தங்கி இருந்து ராமானுஜருக்கு திவ்ய ப்ரபந்தம் ரஹஸ்யார்த்தங்கள் முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தார்.

ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரம்

ஒரு முறை, ராமானுஜரின் திருமாளிகைக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பசியுடன் வர, ராமானுஜர் தன் மனைவியிடம் அவருக்கு உணவு அளிக்கும்படிக் கூற, அவரின் மனைவியோ உணவு இல்லை என்று மறுக்கிறார். அந்த ஸ்ரீவைஷ்ணவர் வருத்தத்துடன் செல்ல, ராமானுஜர் மடப்பள்ளி உள்ளே சென்று ப்ரஸாதம் இருப்பதைக் காண்கின்றார். மிகவும் கோபம் கொண்ட அவர், அக்கோபத்தை தன் மனைவியிடம் வெளிப்படுத்தினார். முன்பு கூட, ராமானுஜரின் மனைவியான தஞ்சம்மாள் திருக்கச்சி நம்பியிடம் முறை தவறி நடந்தார். ஒரு முறை திருக்கச்சி நம்பியை தன் திருமாளிகைக்கு அழைத்து, உணவிட்டு அவ்வுணவின் மிச்சத்தை தான் உண்ணவேண்டும் என்று விரும்பினார் ராமானுஜர். ஆனால் அவர் மனைவியோ, நம்பியின் பெருமை மற்றும் ராமானுஜரின் ஆசையையும் புரிந்து கொள்ளாமல் நம்பி வந்தவுடன் அவருக்கு உணவிட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து விடுகிறார். இறுதியான ஒரு நிகழ்வு – ஒரு முறை ராமனுஜரின் மனைவிக்கும் பெரிய நம்பியின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் ஒரு பிணக்கு ஏற்பட்டது. மிகவும் வருத்தமுற்ற பெரிய நம்பி, ராமானுஜரிடம் சொல்லிக்கொள்ளாமல் தன் குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்துக்குச் சென்று விட்டார். இதை அறிந்த ராமானுஜர் மிகவும் உடைந்து போனார்.

அவர் பகவத் விஷயத்திலேயே தன் பொழுதை முழுமையாகப் போக்க நினைத்து, முற்றும் துறந்த நிலையான ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரம் செய்வதாக முடிவெடுத்தார். அவர் உடனே காஞ்சீபுரம் தேவப் பெருமாள் ஸன்னிதியில் உள்ள அனந்த ஸரஸ்ஸில் சென்று தீர்த்தமாடி தேவப் பெருமாள் முன்பு சென்று அவரையே ஆசார்யனாகக் கொண்டு தனக்கு ஸந்யாஸிகளுக்கு ஏற்றதான த்ரிதண்ட காஷாயங்களை அளிக்குமாறு ப்ரார்த்தித்தார். தேவப் பெருமாளும் ராமானுஜரின் திருவுள்ளத்தை ஆமோதித்து அவருக்கு ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரத்தைச் செய்து வைத்து, “ராமானுஜ முனி” என்ற பெயரையும் அளித்து அவருக்கு ஒரு மடத்தையும் அளித்தார். இதைக் கேள்வியுற்ற முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வான் உடனே காஞ்சீபுரம் வந்தடைந்து அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொண்டு அவருக்கு இடை விடாது கைங்கர்யம் செய்யத் தொடங்கினர். யாதவப்ரகாஶரும் அவரின் தாயாரின் அறிவுரையை ஏற்று ராமானுஜரின் ஶிஷ்யரானார். இவ்வாறு ராமானுஜர் ராமானுஜ முனியாகி ஸந்யாஸ ஆஶ்ரமத்தை சிறந்த முறையில் நடத்திப் போனார்.

ராமானுஜர் யதிராஜர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்பட்டார்; மிகுந்த பெருந்தன்மையுடன் யாதவப்ரகாஶரைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டு, அவரை ஸந்யாஸ ஆஶ்ரமத்தில் ஈடுபடுத்தி, கோவிந்த ஜீயர் என்று அவருக்குப் பெயரிடுகிறார்.  மேலும், அவரைக் கொண்டே ஸ்ரீவைஷ்ணவ ஸந்யாஸிகளின் நடத்தையை விளக்கும் “யதி தர்ம ஸமுச்சயம்” என்ற ப்ராமாணிகமான மற்றும் விரிவான க்ரந்தத்தை எழுதச் செய்கிறார். இந்நிகழ்ச்சி மூலம் ராமானுஜர் தன்னை முன்பு கொல்லவே முயன்ற யாதவப்ரகாஶரைத் தான் ஏற்றுக்கொண்டதோடு அவரைச் சிறந்த கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தினார்.

காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு, கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் ஶாஸ்த்ர உபதேஶம் செய்துகொண்டிருந்தார்.

ஸ்ரீரங்கம் வருதல்

ஸ்ரீரங்கநாதர் ஸம்ப்ரதாயத்தைச் சிறந்த முறையில் வளர்க்கும் பொருட்டு ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்து வர விரும்பி  தேவப்பெருமாளுக்கு ஸ்ரீமுகம் அனுப்புகிறார். தேவப்பெருமாளோ அதற்கு செவி சாய்க்க மறுக்கிறார். ஸ்ரீரங்கநாதர் ஸமயோஜிதமாக திருவரங்கப் பெருமாள் அரையரைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி, அவரின் திவ்ய கானத்தைக் கொண்டு தேவப்பெருமாளைக் கவர்ந்து ராமானுஜரைப் பரிசாகப் பெற்று வருமாறு நியமிக்கிறார். அரையர் காஞ்சிபுரம் அடைந்து, திருக்கச்சி நம்பி புருஷகாரத்துடன் தேவப்பெருமாளை அணுகி, அவரின் திருமுன்பே பண்ணிசைத்துப் பாட, எம்பெருமான் அந்த கானத்தில் மிகவும் மயங்கி “நீர் விரும்பியதைக் கேட்டு பெற்றுப் போம்” என்கிறார். உடனே, அரையர் எம்பெருமானிடம் ராமானுஜரைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்புமாறு ப்ரார்த்திக்கிறார். அது கேட்டு ராமானுஜரின் பிரிவை உணர்ந்த தேவப்பெருமாள் மிகவும் வருந்தினார் – ஆயினும் தான் கொடுத்த வார்த்தைக்காக ராமானுஜரை அரையருடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினார்.

ஸ்ரீரங்கம் அடைந்தவுடன், அரையரும் யதிராஜரும் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இருவரும் பெரிய பெருமாள் ஸந்நிதிக்குச் செல்ல, பெரிய பெருமாளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். அவர், ராமானுஜருக்கு “உடையவர்” (பெருமானின் நித்ய விபூதி மற்றும் லீலா விபூதிக்கு ஸ்வாமி) என்கிற பட்டத்தை அளித்து, அவர் தங்குவதற்கு ஒரு மடத்தையும் அளித்து, அவருக்குக் கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்யும்படி ஆணையும் பிறப்பித்தார். மேலும், அவர், ராமானுஜருடன் தொடர்புள்ள அனைவருக்கும் மோக்ஷம் உறுதி என்று அறுதியிட்டார். உடையவரும், பெரிய நம்பியிடம் தன்னுடைய உபகார ஸ்ம்ருதியை வெளியிட்டார். பெரிய நம்பியும் ஸம்ப்ரதாயத்திற்கு நன்மை விளைவதைக் கண்டு பேரின்பம் அடைந்தார். உடையவரும் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து கோயில் செயல்பாடுகளைச் சிறந்த முறையில் நேர்படுத்தத் தொடங்கினார்.

ஸ்ரீ ராமானுஜர் இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் இருந்தவாறு கோயில் காரியங்களைச் சீர் செய்து வந்தார். ஶிவ பக்தராய் மாறி காளஹஸ்தியில் இருந்த தன்னுடைய சிறிய தாயார் குமாரரான கோவிந்தரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்டு, திருமலை நம்பியிடம் அவருக்கு நல்லுபதேஶம் செய்து நம் ஸம்ப்ரதாயத்திற்கு ஆக்கும்படி ப்ரார்த்தித்தார் [இந்த கோவிந்தரே யாதவ ப்ரகாஶருடன் யாத்ரை சென்றபோது ராமானுஜரின் உயிரைக் காத்தவர்). பெரிய திருமலை நம்பி காளஹஸ்தி சென்று சிறந்த ஶிவ பக்தராக மாறி சேவை செய்து வந்த கோவிந்தரை வழி மறித்தார். அவர் ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் மற்றும் ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு ஸ்ரீமந்நாராயணின் பரத்வத்தை கோவிந்தருக்கு விளக்கினார். சில முறை அந்த உபதேஶங்களைக் கேட்டு, கோவிந்தரின் மனம் தெளிவு பெற்று, ருத்ரனிடத்தில் இருந்த பிடிப்பு நீங்கி, பெரிய திருமலை நம்பியின் திருவடியில் வந்து ஆதரத்துடன் விழுந்தார். நம்பியும், கோவிந்தரைப் பேரன்புடன் ஏற்றுக் கொண்டு, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து தன்னுடன் அழைத்து வந்தார்.  கோவிந்தரும் நம்பியுடன் திருமலையில் தங்கி இருந்து, அறிய வேண்டிய அர்த்தங்களைக் கற்றுத் தேர்ந்து, நம்பிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இறுதியில், எம்பெருமானாருடன் நிரந்தரமாக வாழ ஸ்ரீரங்கத்துக்கே வந்து சேர்கிறார் (மேல் வரும் சரித்திரங்களில் அதைக் காண்போம்).

இவர் ஆசார்யர்கள்

ராமானுஜர் பின்பு பெரிய நம்பி திருமாளிகைக்குச் சென்று அவரிடம் ஸாரார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ஆனந்தத்துடன், மிகச் சிறந்ததான த்வய மஹா மந்த்ரத்தின் திவ்யமான அர்த்தங்களை ராமானுஜருக்கு விளக்குகிறார்.  மேலும் அவர் ராமானுஜரிடம் “இதில் அறிய வேண்டுவது மேலும் உள்ளது; ஆளவந்தாரின் ப்ரிய ஶிஷ்யரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்று அவற்றைக் கற்று வரவும்” என்று ஆணை இடுகிறார்.

ராமானுஜர் உடனே திருக்கோஷ்டியூர் திவ்ய தேசத்துக்குப் புறப்பட்டார். ஊர் எல்லையை அடைந்ததும், அங்கிருக்கும் சிலரிடம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகை எங்கு உள்ளது என்று வினவினார். அங்கிருந்தவர்கள் நம்பியின் திருமாளிகை இருக்கும் திசையைக் காட்ட, தண்டனிட்டுக்கொண்டே அவர் திருமாளிகையைச் சென்று அடைந்தார். இதைக் கண்ட ஊர் மக்களும் நம்பியின் பெருமைகளை அறிந்து ஆச்சர்யம் அடைந்தனர். ராமானுஜரும் நம்பியைக் கண்டவுடன் அவர் திருவடியில் விழுந்து ரஹஸ்யார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். ஆனால் நம்பியோ அவருக்குக் கற்றுக் கொடுப்பதில் சிறிதும் ஈடுபாடு காட்டாமல் இருக்க, ராமானுஜர் வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.

ராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் ரஹஸ்யார்த்தங்கள் கேட்க மிகவும் பாரிப்புடன் இருக்கிறார். நம்பி ஒருமுறை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி இருந்து, பின் திருக்கோஷ்டியூர் திரும்பும் பொழுது, நம்பெருமாள் ராமானுஜருக்கு ரஹஸ்யார்த்தங்கள் கற்றுக் கொடுக்குமாறு நம்பிக்கு ஆணையிடுகிறார். நம்பி நம்பெருமாளிடம் ஶாஸ்த்ரத்தில் முயன்று சேவை செய்யாதவர்களுக்கு இவ்வர்த்தங்களை உபதேஶிக்கக் கூடாது என்று உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். நம்பெருமாளோ ராமானுஜரிடம் ஶிஷ்ய லக்ஷணப் பூர்த்தி உள்ளதால் அவருக்குக் கற்றுக் கொடுப்பது பொருந்தும் என்று ஸமாதானம் சொல்கிறார். நம்பியும் அதற்கு இசைந்து ராமானுஜரைத் திருக்கோஷ்டியூருக்கு வந்து விஷயங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ராமானுஜரும் திருக்கோஷ்டியூருக்குச் செல்ல, நம்பியோ மற்றொரு ஸமயம் வந்து கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். இவ்வாறு பதினெட்டு முறை நடக்கிறது. ராமானுஜர், இந்த நிலை பொறுக்காமல், நம்பியின் ஶிஷ்யர் ஒருவர் மூலமாக தன்னுடைய ஆர்த்தியை நம்பிக்கு வெளியிடுகிறார். இறுதியாக நம்பியின் இசைவினோடு, ராமானுஜர் கீதா சரம ஶ்லோகத்தின் அர்த்தத்தைக் கேட்டு அறிகிறார். நம்பி ராமானுஜரிடம் இவ்வர்த்தங்களை தகுதியற்றவருக்கு வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஆனால் ராமானுஜரோ ஆசையுடையோர்க்கெல்லாம் அவ்வர்த்தங்களை அறிவிக்கிறார்.  அதைக் கேட்ட நம்பி கோபமடைந்து ராமானுஜரை வருமாறு ஆணை இடுகிறார். ராமானுஜர் நம்பியிடம் இவ்வர்த்தங்களை அறிந்தவர்கள் உண்மை ஞானம் பெற்று உஜ்ஜீவனம் அடைவர்கள் என்பதை விளக்குகிறார்.  ராமானுஜரின் பரந்த உள்ளத்தை உணர்ந்த நம்பி, அவரை “எம்பெருமானார்” (எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிலும் மேம்பட்டவர்) என்று கொண்டாடுகிறார். பின்பு, நம் ஸம்ப்ரதாயமும் “எம்பெருமானார் தரிஶனம்” என்றே பேர் பெற்று விளங்கியது. பின்பு, எம்பெருமானார் இந்த ரஹஸ்ய அர்த்தங்களை கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் அவர்கள் ப்ராத்தனைக்கு இணங்க விளக்குகிறார்.

பின்பு, திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கற்றுக் கொடுக்குமாறு திருமாலை ஆண்டானிடம் பணித்தார். எம்பெருமானாரும் அறிந்துகொள்ள வேண்டிய அர்த்தங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். சில சமயங்களில் ஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் சில பாசுர அர்த்தங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. திருவாய்மொழி 2.3.3. “அறியாக் காலத்துள்ளே” பாசுர விளக்கத்தின் போது, எம்பெருமானார் மாற்றுக் கருத்தைச் சொல்ல, ஆண்டான் கோபித்துக் கொண்டு காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார். திருக்கோஷ்டியூர் நம்பி இது பற்றிக் கேள்விப்பட்டு உடனே திருவரங்கத்துக்குச் செல்கிறார். அவர் ஆண்டானிடம் எம்பெருமானாரின் பெருமைகளை எடுத்துரைத்து எந்த நிலைமையிலும் காலக்ஷேபத்தை நிறுத்தாமல் நடத்துமாறு கூறுகிறார். ஆண்டானும் அதற்கு இசைந்து காலக்ஷேபத்தைத் தொடருகிறார். ஆனால், மீண்டும் ஒரு முறை கருத்து வேறுபாடு வர, எம்பெருமானார் “ஆளவந்தார் இவ்வாறு இதை விளக்க மாட்டார்” என்று கூற, ஆண்டானும் “நீரோ ஆளவந்தாரைச் சந்தித்ததே இல்லை. இவ்வாறு இருக்க இது எப்படி உமக்குத் தெரியும்” என்று வினவ, எம்பெருமானார் “அடியேன் ஆளவந்தாருக்கு ஏகலவ்யனைப் போலே” என்றார். அது கேட்ட ஆண்டான் எம்பெருமானாரைப் பற்றி திருக்கோஷ்டியூர் நம்பி விளக்கியது பொருத்தமாக இருக்கவே, எம்பெருமானார் ஒரு அவதார விஶேஷம் என்று உணர்ந்து, ஆளவந்தாரிடம் கேட்காமல் விட்டுப் போன அர்த்தங்களை எம்பெருமானாரிடம் இருந்து கேட்டு அறியலாம் என்ற எண்ணத்துடன், அவரை மிகவும் ஆதரித்துப் போந்தார்.

இவ்வாறு திருவாய்மொழி காலக்ஷேபம் முடிந்தபின், எம்பெருமானார் பெரிய நம்பியிடம் செல்ல, நம்பியும், எம்பெருமானாரைத் திருவரங்கப் பெருமாள் அரையரிடம் சென்று சில ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறியுமாறு பணிக்கிறார். எம்பெருமானாரும் அரையரிடம் சென்று, 6 மாதங்கள் அவருக்குப் பாலமுது செய்தல் மற்றும் மஞ்சள் காப்பு செய்து தருதல் ஆகிய கைங்கர்யங்களைப் பணிவுடன் செய்கிறார். ஒரு முறை எம்பெருமானாரால் ஸமர்ப்பிக்கப்பட்ட மஞ்சள் காப்பு தரமாக இல்லாததால் அரையர் தன் திருமுகத்தைத் திருப்பி வைத்துக் கொள்கிறார். உடனே எம்பெருமானார் மீண்டும் ஒரு முறை மஞ்சள் காப்பு புதிதாகத் தயார் செய்து அரையரின் ஆனந்தத்திற்காக ஸமர்ப்பிக்கிறார். மிகவும் ஆனந்தித்த அரையர், ரஹஸ்யார்த்தமான “சரமோபாயம்” (இறுதியான வழி) – ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உபதேஶிக்கிறார்.

எதற்காக எம்பெருமானார் பல ஆசார்யர்களிடம் பயில வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஒரு ராஜா தன்னுடைய பல மந்திரிகளைக் கொண்டு ஒரு இளவரசனைத் தயார் செய்வது போல், ஆளவந்தார் மிகச் சிறந்த ஞானச் செல்வத்தை தன்னுடைய ஶிஷ்யர்களிடம் அளித்து அவற்றைத் தக்க சமயத்தில் எம்பெருமானாருக்கு கற்றுக் கொடுக்குமாறு ஆணையிட்டார். ஆளவந்தார் ராமானுஜரிடம் கொண்டிருந்த அன்பைக் கண்ட ஆளவந்தாரின் ஶிஷ்யர்களும், ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் கொண்டிருந்தனர். இதனாலேயே எம்பெருமானாருக்கு முன்பிருந்த ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தாலும் பின்புள்ளவர்கள் அவர் திருவடி சம்பந்தத்தாலும் மிக்க பெருமையை அடைந்தார்கள். எப்படி ஒரு ஹாரத்தின் நடு நாயகமான மாணிக்கக் கல் அந்த ஹாரத்தின் இரண்டு பக்கத்துக்கும் அழகு சேர்க்குமோ, அப்படியே எம்பெருமானாரும் தனக்கு முன்பிருந்த ஆசார்யர்களுக்கும் பின்பிருந்த ஆசார்யர்களுக்கும் பெருமை சேர்க்கிறார்.

கத்ய த்ரயம் சேவித்தல்

பின்பு, ஸ்ரீரங்கத்தில் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதன் திருமுன்பே கத்ய த்ரயத்தை அருளிச்செய்தார். அதன் பிறகு எம்பெருமானை க்ருஹங்களில் திருவாராதனம் செய்யும் முறையை விளக்கும் நித்ய க்ரந்தத்தையும் அருளிச்செய்தார்.

இச்சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் ஏழகம் (ஏழு வீடுகளில்) மாதுகரம் (பிக்ஷை) கொண்டு அமுது செய்து வந்தார். அவர் ஸ்ரீரங்கத்தில் செய்யும் சீர்திருத்தங்களை விரும்பாத சிலர், ஒரு பெண்ணின் மூலம் விஷமிட்ட அன்னத்தைக் கொடுக்குமாறு செய்தனர். அவளுக்கு இதில் உடன்பாடு இல்லாவிடினும், வேறு வழியின்றி, மிகுந்த மன வருத்தத்துடன் எம்பெருமானாருக்கு பிக்ஷை இட்டாள். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த எம்பெருமானார், அந்த அன்னத்தைக் காவிரியில் கரைத்து உபவாஸம் இருக்க ஆரம்பித்தார். விஷயம் அறிந்த திருக்கோஷ்டியூர் நம்பி உடன் ஸ்ரீரங்கத்துக்கு விரைந்தார். கடும் வெயிலில் எம்பெருமானார் அவரை வரவேற்கக் காவிரிக் கரைக்கு எழுந்தருளினார். எம்பெருமானார் நம்பியைக் கண்டவுடன், வெயிலையும் பொருட்படுத்தாமல் கீழே விழுந்து தண்டன் ஸமர்ப்பித்து நம்பி எழுந்திருக்கச் சொல்லும் வரை அப்படியே இருந்தார். நம்பி சிறிது நேரம் தாமதிக்க, எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பி ஆச்சான் எம்பெருமானாரை உடனே எடுத்து நிறுத்தி, நம்பியிடம் “இப்படிப்பட்ட ஆசார்யனை இந்த வெப்பத்தில் எப்படித் தவிக்கவிட விடுகிறீர்” என்று கடிந்து கொண்டார். நம்பியும் ஆச்சானிடம் “எம்பெருமானாரிடம் பரிவுள்ள ஒருவரைக் கண்டு கொண்டேன். என்னையும் மீறி அவரை எடுத்து நிறுத்தினீரே. இனி, நீரே அவருக்குத் தினமும் ப்ரஸாதம் செய்து கொடுக்கவும்” என்று கூறினார். இவ்வாறு, அனைவரும் எம்பெருமானாரிடம் தங்கள் அன்பையும் பரிவையும் காட்டினர்.

யஞ்ய மூர்த்தியை ஜயித்தல்

யஞ்ய மூர்த்தி என்னும் வித்வான், காசிக்குச் சென்று பல வித்வான்களை வாதத்தில் வென்று, ஸந்யாஸியாகி, பல விருதுகளுடனும் ஶிஷ்யர்களுடனும் இருந்தபோது ராமானுஜரின் பெருமை அறிந்து, ஸ்ரீரங்கத்துக்கு வந்து ராமானுஜரை வாதப் போருக்கு அழைத்தார். ராமானுஜரும் அதை ஏற்றுக் கொண்டார். யஞ்ய மூர்த்தி தான் தோற்றால் ராமானுஜரின் பாதுகைகளைத் தலை மேல் தாங்கி, அவருடைய திருநாமத்தைத் தான் சூட்டிக்கொண்டு அவருடைய ஸித்தாந்தத்தை ஏற்பதாகக் கூறினார். உடையவரோ தான் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் (க்ரந்தங்கள் எழுதுவது, விளக்குவது முதலியவை செய்யாமல் இருத்தல்) ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். பதினேழு நாட்களுக்கு இருவரும் மிகவும் தீவிரமாக வாதம் செய்தனர். பதினேழாவது நாளன்று யஞ்ய மூர்த்தியின் வாதம் ஓங்கி இருக்க, அவர் மிகுந்த மிடுக்குடன் சபையை விட்டுச் சென்றார். ராமானுஜர் மிகுந்த வருத்தத்துடன் தன்னுடைய திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் “மஹநீயர்களான ஆழ்வார் தொடக்கமாக ஆளவந்தார் வரை வளர்த்த இந்தத் தலை சிறந்த ஸம்ப்ரதாயம் இன்று என்னால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது; ஒரு மாயாவாதி இன்று இதை அழிக்கப் பார்க்கிறான்; இதுவே உன் திருவுள்ளமாகில், அப்படியே ஆகுக” என்று கூறி ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் சென்றார். இரவில், பெருமாள் அவரின் கனவில் தோன்றி ஆளவந்தாரின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு யஞ்ய மூர்த்தியை ஜெயிக்குமாறு உணர்த்தினார். விழித்தெழுந்த ராமானுஜர் வருத்தம் தீர்ந்து, தன்னுடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, மடம் திருவாராதனப் பெருமாளிடம் விடை கொண்டார். ராமானுஜரின் கம்பீரமான வரவைக்கண்ட யஞ்ய மூர்த்தி, வித்வானாகையாலே, ஒரு தெய்வீகச் செயல் நடந்திருப்பதை உணர்ந்து, அவரின் திருவடிகளிலே விழுந்து “நான் வாதில் தோற்றேன்” என்றார். ஆச்சர்யமடைந்த ராமானுஜர் “மேலே வாதம் செய்ய வேண்டாமோ” என்று வினவ, யஞ்ய மூர்த்தி “தேவரீரிடம் பெரிய பெருமாளே பேசின பின்பு, தேவரீர் பெரிய பெருமாளிடம் இருந்து வேறு பட்டவர் அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். இனி நான் வாய் திறப்பதற்குப் ப்ராப்தி இல்லை. ராமானுஜரோ ப்ரஹ்மத்தின் குணங்களை விளக்கிக் கூறி மாயாவாத ஸித்தாந்தக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தார். யஞ்ய மூர்த்தி உண்மையை உணர்ந்தவராய் தன்னுடைய (மாயாவாத ஸந்யாஸிகள் வைத்துக் கொள்ளும்) ஏகதண்டத்தை உடைத்தெறிந்து, ராமானுஜரைத் தனக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய த்ரிதண்ட ஸந்யாஸம் தருமாறு வேண்டுகிறார். பேரருளாளப் பெருமாளின் நினைவாகவும், யஞ்ய மூர்த்தியின் ஶபதமான “தோற்றால் ராமானுஜரின் திருநாமத்தை வைத்துக் கொள்வேன்” என்றதையும் நினைவில் கொண்டு ராமானுஜர் அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற திருநாமத்தைச் சூட்டினார். ராமானுஜரே அவருக்கு அருளிச்செயலையும் அதன் ஆழ்ந்த அர்த்தங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மிகுந்த ஈடுபாட்டுடன் எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தார்.

உடையவர் ஆழ்வான் ஆண்டான் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மற்றும் பலருக்கு ஸ்ரீரங்கத்தில் தொடர்ந்து உபதேஶங்களைச் செய்து வந்தார். பல வித்வான்களும் அவர் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஸ்ரீரங்கம் வந்தடைந்து அவரை ஆஶ்ரயித்தனர். அநந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி மற்றும் மருதூர் நம்பி ஆகியோர் உடையவரை ஆஶ்ரயிக்க வர, அவர் அவர்களை அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடம் ஆஶ்ரயிக்கும்படி ஆணையிடுகிறார். அவர்களும் அவ்வாறே செய்ய, அருளாளாப் பெருமாள் எம்பெருமானார் அவர்களை “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றிருக்குமாறு கூறுகிறார்.

திருமலை யாத்ரையும் கைங்கர்யங்களும்

பின்பு ஒரு ஸமயம், உடையவர் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்து வந்தார். திருவேங்கடமுடையான் விஷயமான “ஒழிவில் காலம்” பதிகத்தை விளாக்கும்போது “இங்கு எவரேனும் திருமலைக்குச் சென்று ஒரு நந்தவனம் அமைத்து, திருவேங்கடமுடையானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய முடியுமா” என்று கேட்க, அநந்தாழ்வான் உடனே எழுந்து தான் அதைச் செய்வதாகக் கூறினார். எம்பெருமானாரும் அவருக்கு க்ருபை பண்ண, அவர் திருமலைக்குச் சென்று, ஒரு நந்தவனத்தையும், குளத்தையும் செய்து, அந்த நந்தவனத்துக்கு “இராமானுசன்” என்று பெயரிட்டு, திருவேங்கடமுடையானுக்குக் கைங்கர்யம் செய்யத் தொடங்கினார்.

உடையவரும் ஒரு திவ்யதேச யாத்ரை செய்யத் திருவுள்ளமாகி, நம்பெருமாளிடம் அதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தவுடன், திருக்கோவலூர் மற்றும் காஞ்சீபுரம் திவ்ய தேச எம்பெருமான்களுக்கு மங்களாஶாஸனம் செய்து பின்பு திருமலையை நோக்கிச் சென்றார்.

உடையவர் திருமலை திருப்பதி நோக்கித் தன் ஶிஷ்யர்களுடன் செல்லத் தொடங்கினார். ஒரு சமயத்தில் வழி தெரியாமல் திகைத்து அங்கே இருந்த ஒரு விவசாயியிடம் வழி கேட்டார். அவனும் தெளிவாக வழி காட்ட, உடையவர் உணர்ச்சிப் பெருக்கினால் அவனைப் பரமபதத்திற்கு வழிகாட்டும் அமாநவனாக எண்ணி நன்றியுடன் தண்டனிட்டார். சில நாட்களில் திருப்பதியை அடைந்து திருமலை அடிவாரத்தில் ஆழ்வார்களைத் தொழுதார். அவர் அங்கேயே சில காலம் எழுந்தருளியிருந்து, அந்த நாட்டு ராஜாவை ஶிஷ்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களையும் அங்கே குடியேற்றினார். இந்த விஷயங்களைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மற்றும் பலரும் வந்து அவரை வரவேற்று, அவரைத் திருமலை ஏறி திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்யுமாறு வேண்டினர். அவரோ ஆழ்வார்கள் திருமலையைப் புனிதமாகக் கருதியதால் அதில் ஏறியதில்லை, ஆதலால் தானும் ஏற மாட்டேன் என்று முதலில் மறுத்தாலும், ஶிஷ்யர்களின் ப்ரார்த்தனையால், திருமலை அடிவாரம் சென்று, தீர்த்தமாடி, மிகவும் பக்தியுடன், எம்பெருமானின் ஸிம்மாஸனத்தில் ஏறுவது போலத் திருமலையில் ஏறினார்.

உடையவர் திருமலை சென்று அடைந்தவுடன், திருமலை நம்பி, திருவேங்கடமுடையான் ப்ரசாதங்களோடு வந்து வரவேற்றார். தன்னுடைய ஆசார்யர்களில் ஒருவரான திருமலை நம்பியே எதிர் கொண்டு அழைத்ததைக் கண்ட உடையவர் அவரிடம் “யாரேனும் சிறியவரை விட்டு அடியேனை வரவேற்றிருக்கலாமே” என்று கூற, நம்பியோ, “நான்கு வீதியிலும் சுற்றிப் பார்த்தும், என்னை விடத் தாழ்ந்தவர் தென்படவில்லை” என்று விடை அளித்தார். இதைக் கேட்ட உடையவரும் அவர் ஶிஷ்யர்களும் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர். பின்பு, ஜீயர்கள், ஏகாங்கிகள் கோயில் கைங்கர்யபரர்கள் என்று அனைவரும் வந்து உடையவரை வரவேற்றனர். பின்பு, உடையவர் கோயிலைப் ப்ரதக்ஷிணமாக வந்து ஸ்வாமி புஷ்கரணியில் தீர்த்தமாடி த்வாதஶ ஊர்த்வ புண்ட்ரங்கள் அணிந்து கொண்டு வராஹப் பெருமாளை வணங்கி  ப்ரதான ஸந்நிதியை அடைந்து ஸேனை முதலியாரை வணங்கி திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு இது நித்யஸூரிகள் வாழும் இடம் ஆதலால் இரவில் தங்கக் கூடாது என்று கூறி, திருமலை அடிவாரத்துக்குத் திரும்பத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் நம்பியும் மற்றவர்களும் திவ்ய தேசமாதலால் அவரை மூன்று நாட்கள் தங்குமாறு வேண்ட, அவரும் அதற்கு இசைந்து ப்ரஸாதம் ஸ்வீகரிக்காமல் திருவேங்கடமுடையானை அனுபவித்தே மூன்று நாட்களைக் கழித்தார். பின்பு திருவேங்கடமுடையானிடம் விடை பெற்றுக்கொள்ளப் ப்ரார்த்திக்க, அப்பொழுது எம்பெருமானும் அவரை நித்ய விபூதிக்கும் லீலா விபுதிக்கும் உடையவர் என்று முன்பு சொன்னதை வழி மொழிந்து அவரை வழி அனுப்புகிறார்.

பின்பு அவர் திருமலையில் இருந்து இறங்கி, திருப்பதியில் ஒரு வருட காலம் தங்கி இருந்தார். திருமலை நம்பியிடத்தில் ஒரு வருட காலமும் ஸ்ரீ ராமாயணத்தின் ஆழ்ந்த அர்த்தங்களைக் கற்று அறிகிறார்.

அதன் முடிவில் நம்பியிடம் ஸ்ரீரங்கம் திரும்ப நியமனம் கேட்கிறார். நம்பி உடையவருக்கு ஏதாவது பரிசளிக்க விரும்ப, உடையவர் நம்பியிடம் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் கோவிந்தப் பெருமாளைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைத்து நம் ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு உதவுமாறு கேட்கிறார். நம்பியும் மகிழ்ச்சியுடன் கோவிந்தப் பெருமாளை உடையவருடன் அனுப்பி வைக்க, உடையவரும் ஸ்ரீரங்கத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார்.

உடையவர் கோவிந்தப் பெருமாளுடன் கடிகாசலத்தை (சோளிங்கர்) அடைந்து அக்காரக் கனி எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு திருப்புட்குழி அடைந்து ஜடாயு மஹாராஜர், மரகதவல்லித் தாயார் மற்றும் விஜயராகவன் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு கச்சியைச் சுற்றியுள்ள பல திவ்ய தேசங்களைச் சேவித்து திருக்கச்சி நம்பி ஸந்நிதியை அடைந்தார். இது நடுவே, கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்ததால் வருத்தமுற்று உடல் வெளுத்தார். இதை உணர்ந்த உடையவர் அவரைத் திருப்பதி சென்று ஆசார்யரைச் சேவித்து வருமாறு கூறி சில ஸ்ரீவைஷ்ணவர்களையும் உடன் அனுப்புகிறார். தானோ திருக்கச்சி நம்பியுடன் கச்சியில் இருந்து தேவாதிராஜனைச் சேவித்து வருகிறார். கோவிந்தப் பெருமாள் திருமலை நம்பி திருமாளிகையை அடைந்து, அங்கே கதவுகள் சாற்றியிருந்ததால் வாயிலில் காத்திருந்தார். அங்கே இருந்தவர்கள் திருமலை நம்பியிடம் இவரின் வரவை அறிவிக்க, அவர் கதவைத் திறக்க மறுத்து உடையவரிடமே சென்று அவரையே தஞ்சமாகக் கொண்டிருக்கும்படி கூறினார். தன்னுடைய ஆசார்யரினின் திருவுள்ளத்தை முழுதுமாக அறிந்த கோவிந்தப் பெருமாள் உடையவரிடம் வந்தடைந்தார். உடன் சென்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் அங்கே நடந்ததை விவரிக்கத் திருமலை நம்பியின் உபதேசத்தை அறிந்த உடையவர் மிகவும் மகிழ்ந்தார்.

ஸ்ரீரங்கம் திரும்புதல்

பின்பு, அவர்கள் அங்கிருந்து விடைபெற்று ஸ்ரீரங்கத்தை வந்தடைந்தனர். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்க, உடையவர் ஸேவா க்ரமத்தில் பெரிய பெருமாளைச் சென்றடைந்தார். பெரிய பெருமாள் அவரைப் பேரன்புடன் வரவேற்று, யாத்ரையைப் பற்றி விசாரித்து, தீர்த்தம் ஸ்ரீசடகோப மரியாதைகளை அளிக்கிறார். இதன் பின்பு, ஸ்ரீரங்கத்தில் உடையவர் கருணையுடன் தன்னுடைய அனுஷ்டானங்களுடன் இந்த உயர்ந்த ஸித்தாந்தத்தைக் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார்.

கோவிந்தப் பெருமாளும் ஆனந்தத்துடன் காலக்ஷேபங்களிலும் கைங்கர்யங்களிலும் பங்கு பெற்று வந்தார். ஒரு முறை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் கோவிந்தப் பெருமாளைக் கொண்டாட அவரும் அதை ஆனந்தத்துடன் ஆமோதித்தார். இதைக் கண்ட உடையவர் அவரிடம் “நம்மை ஒருவர் கொண்டாடும்போது நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. நாம் அவர்களிடம் அதற்குத் தகுதி அற்றவர் என்று தாழ்மையுடன் கூறிக் கொள்ள வேண்டும்” என்றார். அதைக் கேட்ட கோவிந்தப் பெருமாள் “நான் காளஹஸ்தியில் நீசனாக இருந்தேன். இன்று என்னை ஒருவர் புகழ்கிறார் என்றால் அது தேவரீருடைய பெரிய கருணையால் என்னைத் திருத்திப் பணி கொண்டு இந்நிலைக்கு உயர்த்தியதாலேயே. ஆகையால் எல்லாப் பெருமைகளும் தேவரீருக்கே” என்றார். இதைக் கேட்ட எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளின் சிறந்த நிஷ்டையை அங்கீகரித்தார். அவர் உடனே கோவிந்தப் பெருமாளிடம் “இப்படிப்பட்ட நற்குணங்களை எமக்கும் தந்தால் ஆகாதோ” என்று கூறி அவரை அணைத்துக் கொண்டார். கோவிந்தப் பெருமாளும் உலக இன்பங்களில் ஈடுபாடு அற்று இருந்ததால் எம்பெருமானார் அவரை ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிடுகிறார். கோவிந்தப் பெருமாளும் ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ள, எம்பெருமானாரும் அவருக்கு எம்பார் என்று பெயரிட்டார்.

பின்பு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஸாரமான அர்த்தங்களைக் காட்டும் ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் அருளிச் செய்கிறார்.

காஷ்மீர யாத்ரையும் ஸ்ரீ பாஷ்யமும்

வேதாந்தக் கொள்கைகளை நிர்ணயம் செய்யும் நோக்குடன், எம்பெருமானார் ஆழ்வான் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களோடு ப்ரஹ்ம ஸூத்ரத்துக்குப் பொருள் விரிக்கும் க்ரந்தமான போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் பெற காஷ்மீர் செல்லத் தொடங்கினார். அந்த க்ரந்தத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீரங்கத்தை நோக்கிச் சென்றார். வரும் வழியில், காஷ்மீரத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை அபஹரித்துச் சென்றார்கள். எம்பெருமானார் முழுதும் அந்த ஸ்ரீ கோஶத்தைப் படிக்காததால் மிகவும் வருந்த, ஆழ்வான் அவரைத் தேற்றி, தாம் அதை எம்பெருமானார் ஓய்வெடுக்கும்போது முழுவதுமாகப்  படித்து விட்டதாகக் கூறினார். ஸ்ரீரங்கம் திரும்பியவுடன் எம்பெருமானார் தாம் சொல்லச் சொல்ல ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஒரு வ்யாக்யானம் எழுதுமாறு ஆழ்வானை நியமிக்கிறார். அவர் ஆழ்வானிடம் “நமக்கும் உமக்கும் கருத்து பேதங்கள் இருந்தால் நீர் எழுதுவதை அப்போதே நிறுத்தலாம்” என்றார். இவ்வாறு ஒரு முறை ஆத்மாவைப் பற்றி விளக்கும்போது, உடையவர் ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சொல்ல ஆழ்வானோ ஶேஷத்வமே முக்கியம் என்றிருப்பவராதலால் எழுதுவதை நிறுத்தி விடுகிறார். எம்பெருமானார் கோபமுற்று ஆழ்வானைத் தாம் சொல்லுவதை எழுதும்படி ஆணையிட, ஆழ்வான் பின்பும் எழுத மறுக்க எம்பெருமானார் மிகுந்த கோபத்தை அடைந்தார். அருகில் இருந்தவர்கள் “எம்பெருமானாரின் இந்தச் செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்” என்று வினவ, ஆழ்வானோ “அவர் சொத்தை உடையவர், நாமோ சொத்து. அவர் என்னை எவ்வாறு வேண்டுமானாலும் நடத்தலாம்” என்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு எம்பெருமானார் யோஜித்துத் தன்னுடைய தவறை உணர்ந்து ஆழ்வானிடம் மன்னிப்புக் கோரி, ஸ்ரீ பாஷ்யத்தை மீண்டும் தொடருகிறார். இவ்வாறே எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதா பாஷ்யம் போன்ற க்ரந்தங்களை அருளிச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்றினார்.

திவ்ய தேஶ யாத்ரை

ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் சென்று “தேவரீர் பிற மதங்களை ஜயித்து நம் ஸித்தாந்தத்தை நன்றாக நிலை நிறுத்திவிட்டீர். இனி திவ்ய தேஶங்களுக்கு திக்விஜயம் செய்து மங்களாஶாஸனம் செய்யவும்” என்று ப்ரார்த்தித்தனர். அதை ஆமோதித்த உடையவர் அவர்களுடன் நம்பெருமாளிடம் சென்று யாத்திரைக்கு அனுமதி கேட்டு நின்றார். நம்பெருமாளும் அதற்கு இசைந்தார்.

உடையவரும் பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தன்னுடைய யாத்திரையைத் தொடங்கி, பாரத தேஶத்தில் உள்ள பல திவ்ய தேஶங்களையும் க்ஷேத்ரங்களையும் தரிசித்தார். முதலில் சோழ நாட்டு திவ்ய தேஶங்களில் தொடங்கி, திருக்குடந்தை மற்றும் பல திவ்ய தேஶங்களை மங்களாஶாஸனம் செய்தார். பின்பு திருமாலிருஞ்சோலைக்கும் அதன் அருகில் இருக்கும் கோயில்களுக்கும் சென்று, திருப்புல்லாணியை அடைந்து ஸேது தர்ஶநமும் செய்து, ஆழ்வார்திருநகரி சென்றடைந்தார். அங்கே நம்மாழ்வாருக்கும் பொலிந்து நின்ற பிரானுக்கும் மங்களாஶாஸனம் செய்து நிற்க, நம்மாழ்வார் இவரைக் கண்டு மிகவும் உகந்து அனைத்து மரியாதைகளும் அளித்தார். பின்பு நவ திருப்பதிகளையும் மங்களாஶாஸனம் செய்தார். வழி நெடுகிலும் பிற மத வித்வான்களை ஜயித்து நம் விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.

அவர் அங்கிருந்து திருக்குறுங்குடியை வந்தடைந்தார். நம்பியும் உடையவரை வரவேற்று அர்ச்சகர் மூலம் “நான் எத்தனையோ அவதாரங்கள் செய்தும் ஒரு சில ஶிஷ்யர்களே தேற, நீர் எவ்வாறு இத்தனை ஶிஷ்யர்களை உருவாக்கியுள்ளீர்” என்று கேட்டான். உடையவரோ அதற்கு “கேட்கும் க்ரமத்தில் கேட்டாலே சொல்ல முடியும்” என்றார். நம்பியும் அவருக்கு ஒரு ஆஸனத்தை அளித்து, தான் தன்னிடத்தை விட்டு இரங்கிப்  பணிவுடன் நின்றான். உடையவர் அந்த ஆஸனத்தில் தன் ஆசார்யனான பெரிய நம்பி இருப்பதாகப்  பாவித்து அதன்  அருகில் தான் அமர்ந்து, த்வய மஹா மந்த்ரத்தின் பெருமையை எடுத்துரைத்து, அதனாலேயே இந்த வழியில் பலரை ஈடுபடுத்துவதாக விளக்கினார். நம்பியும் அகமகிழ்ந்து ராமானுஜரை ஆசார்யனாக  ஏற்க, ராமானுஜரும் அவனுக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்ற திருநாமத்தைச் சாற்றினார்.

பின்பு, உடையவர் திருவண்பரிஸாரம், திருவாட்டாறு மற்றும் திருவனந்தபுரம் திவ்ய தேஶங்களுக்குச் சென்றார். திருவனந்தபுரத்தில் ஒரு மடத்தை ஏற்படுத்தி, அங்கிருந்த இதர மத வித்வான்களையும் ஜயித்தார். மற்ற மலை நாட்டு திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் செய்து மேற்குக் கடற்கரை மார்க்கமாகச் சென்று உத்தர பாரத தேஶத்தை அடைந்தார். அங்கு மதுரா, சாளக்ராமம், த்வாரகா, அயோத்யா, பத்ரிகாஶ்ரமம், நைமிசாரண்யம், புஷ்கரம் போன்ற ஸ்தலங்களில் மங்களாஶாஸனம் செய்து, கோகுலம், கோவர்தனம், வ்ருந்தாவனம் போன்ற திவ்ய ஸ்தலங்களுக்கும் சென்று, பல இதர மத வித்வான்களை வாதிட்டு வென்றார்.

அங்கிருந்து அவர் காஷ்மீர தேஶத்தை அடைந்து ஸரஸ்வதீ தேவியின் தலைமையில் இருந்த ஸரஸ்வதீ பண்டாரத்தை அடைந்தார். ஸரஸ்வதீ தேவி தானே உடையவரை எதிர் கொண்டு வரவேற்று சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் “தஸ்ய யதா கப்யாஸம்” ஶ்ருதியின் அர்த்தத்தை விளக்குமாறு வேண்டினாள் (முன்பு இந்த ஶ்லோகமே ராமானுஜருக்கும் யாதவ ப்ரகாஶருக்கும் வேற்றுமை வளரக் காரணமாயிருந்தது). உடையவரும் அதன் அர்த்தத்தை உள்ளபடி எடுத்துரைக்க, அவள் பெரிதும் மகிழ்ந்து, உடையவரின் ப்ரஹ்ம ஸூத்ர உரையான ஸ்ரீபாஷ்யத்தைத் தன் தலை மேல் தாங்கி, அவரைக் கொண்டாடினாள். அவள் உடையவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்ற விருதத்தை அளித்து ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் அளித்தாள். உடையவர் அவளிடம் “ஏன் இத்தனை மகிழ்ச்சி?” என்று வினவ, அவளும், முன்பு ஶங்கரர் வந்த பொழுது, இதே ஶ்ருதிக்கு விளக்கம் கேட்ட பொழுது, அவர் சரியாக விளக்காதாதை, இப்பொழுது தேவரீர் விளக்கியதால் தான் ஆனந்தப் படுவதாகக் கூறினாள். இது கண்டு அங்கிருந்த வித்வான்கள் வாதப் போருக்கு வர, அவர்கள் அனைவரையும் வாதில் வென்று, ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இது கண்ட அவ்வூர் ராஜா மிகவும் ஆச்சர்யப்பட்டு, உடையவர் ஶிஷ்யனானான். தோற்ற வித்வான்கள் மிகவும் ஆத்திரப்பட்டு, ஸூந்யம் வைத்து உடையவரைக் கொல்ல முயல, அது அவர்களையே கெடுக்கத் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தனர். ராஜா உடையவரிடம் அவர்களைக் காக்குமாறு ப்ரார்த்திக்க, அவர்கள் அனைவரும் கோபம் தணிந்து, பின்பு உடையவர் ஶிஷ்யர்களாகவும் ஆயினர்.

பின்பு, புருஷோத்தம க்ஷேத்ரத்தை (ஜகந்நாத புரியின் இருப்பிடம்) அடைந்து, ஜகந்நாதனுக்கு மங்களாஶாஸனம் செய்தார். மாயாவாதிகளை ஜயித்து, ஒரு மடத்தையும் நிறுவினார். அங்கிருந்து ஸ்ரீ கூர்மம், ஸிம்ஹாத்ரி, அஹோபிலம் திவ்ய தேஶங்களுக்குச் சென்ரார்.

இறுதியாக அவர் திருவேங்கடத்தை அடைந்தார். அச்சமயத்தில் ஒரு சில ஶைவர்கள் திருவேங்கடமுடையான் (ஸ்ரீனிவாஸன் எம்பெருமான்) ருத்ரன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது உடையவர் “நீங்கள் உங்கள் தேவதையின் ஆயுதங்களை வைத்துச் செல்லுங்கள், நாமும் நம் தேவதையின் ஆயுதங்களான சங்கு மற்றும் சக்கரத்தை வைத்துச் செல்லுவோம். எந்த தேவதையோ அதன் ஆயுதங்களைத் தானே எடுக்கும். இங்கிருக்கும் தெய்வமே முடிவெடுக்க வேண்டும்” என்று கூறி, அனைவரையும் கர்ப்ப க்ருஹத்தில் இருந்து வெளியேற்றித் திருக்காப்பு சேர்த்தனர்.எம்பெருமான் ஶங்க சக்கரங்களோடு சேவை ஸாதித்தான். அதன் பிறகு உடையவர் மலை இறங்கி அங்கிருந்து தன் யாத்திரையைத் தொடர்ந்தார்.

பிறகு, உடையவர் காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் அங்கிருக்கும் பல திவ்ய தேஶங்களுக்குச் சென்று மங்களாஶாஸனம் செய்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு மதுராந்தகத்தை அடைந்து தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பல மாயாவாத வித்வான்களை வாதிட்டு வென்றார். பின்பு திருவஹிந்த்ரபுரம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கும் சென்றார்.

இவ்வாறு, உடையவர் பல திவ்ய தேஶங்களுக்குச் சென்று தன் யாத்திரையை முடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பினார். அவர் பெரிய பெருமாளிடம் சென்று அமலனாதிபிரான் ஸேவித்து மங்களாஶாஸனம் செய்ய, பெரிய பெருமாள் அவர் சௌகர்யத்தை விசாரித்தார். உடையவரும் “எங்கிருந்தாலும் தேவரீரையே நினைத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு என்ன வருத்தம் வந்துவிடும்?” என்றார். அதன் பின்பு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு, தன் நித்யானுஷ்டானங்களைச் செய்து போனார்.

பட்டர்களின் பிறப்பு

இச்சமயத்தில், ஸ்ரீரங்கத்தில், மழை காரணமாக கூரத்தாழ்வான் தன்னுடைய உஞ்சவ்ருத்திக்குச் செல்ல முடியவில்லை. தன்னுடைய மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ப்ரஸாதம் உட்கொள்ளாமல் இருந்தார். இரவில், நம்பெருமாள் அரவணை அமுது செய்யும் காலத்தை உணர்த்தும் கோயில் மணியோசை கேட்டது. அதைக் கேட்ட ஆழ்வானின் தர்மபத்தினி ஆண்டாள், தன்னுடைய கணவரின் நிலையை நினைந்து மனம் வருந்தி, நம்பெருமாளிடம் “உம்முடைய பக்தர் இங்கே உணவில்லாமல் இருக்க, நீர் மட்டும் நன்றாக அமுது செய்வதென்?” என்று வினவ, அவளின் நிலை உணர்ந்த நம்பெருமாள், தன்னுடைய கைங்கர்யபரர்கள் மூலம் ஆழ்வான் திருமாளிகைக்கு உடனே ப்ரஸாதம் கொடுத்து விடுகிறார். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆழ்வான் ஆண்டாளைப் பார்க்க, அவள் நடந்ததைச் சொன்னாள். எம்பெருமானிடம் இப்படி ப்ரார்த்தித்துப் பெறுவதை ஆழ்வான் விரும்பவில்லை. இருந்தாலும், இரண்டு திரள்களைக் கையில் வாங்கி, தான் சிறிது உண்டு, ஆண்டாளுக்கும் அந்தப் ப்ரஸாதத்தைக் கொடுத்தார். இந்த இரண்டு ப்ரஸாதத் திரள்களே ஆண்டாளுக்கு இரண்டு அழகிய குழந்தைகளை அளித்தன. பதினோறு நாட்கள் தீட்டுக் கழிந்து, பன்னிரண்டாம் நாள், எம்பெருமானார் எம்பார் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுடன், ஆழ்வான் திருமாளிகைக்குக் குழந்தைகளைக் கடாக்ஷிக்க ஆர்வத்துடன் எழுந்தருளினார். எம்பெருமானார் எம்பாரைக் குழந்தைகளைத் தன்னிடம் கொண்டு வருமாறு கூற, எம்பார் பட்டரைத் தன் கையில் கொண்டு வருகிறார். அப்பொழுது எம்பெருமானார் எம்பாரிடம் “இந்தக் குழந்தையிடம் தேஜஸ் நன்றாக விளங்குகிறது, ஒரு அழகிய பரிமளமும் தெரிகிறது. என்ன செய்தீர்?” என்ன, எம்பாரும் “த்வய மந்த்ரத்தை ரக்ஷையாக ஓதினேன்” என்றார். எம்பெருமானார் எம்பாரிடம் “என்னை முந்திக் கொண்டு விட்டீரே, சரி நீரே இக்குழந்தைக்கு ஆசார்யனாக இரும்” என்றார்.   எம்பெருமானார் அக்குழந்தைக்குப் பராஶர முனியின் நினைவாக “பராஶர பட்டர்” என்று பெயரிட்டு, ஆளவந்தாரிடம் செய்த இரண்டாவது ஶபதத்தை நிறைவேற்றினார். பின்பு, இவர் தலைமையில் எம்பார் அக்குழந்தைக்குச் ஸமாஶ்ரயணம் செய்தார். பின்பு, எம்பெருமானார் ஆழ்வானிடம் அக்குழந்தையை பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டிக்கு தத்துக் கொடுக்கச் சொல்ல, ஆழ்வானும் அவ்வாறே செய்தார். பட்டர் சிறு குழந்தையாக இருந்தபோது, பெரிய பிராட்டியாரே அவருக்குத் தாலாட்டுப் பாடி வளர்த்தார். மேலும் பெரிய பெருமாள் முன்பு போகம் வைக்கப் பட்டால், பட்டர் தவழ்ந்து சென்று அதிலிருந்து உண்டபின்னேயே எம்பெருமான் அதை ஆனந்தத்துடன் அமுது செய்வான். இவ்வாறு பட்டர் சிறு வயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கி, எம்பெருமானார் மற்றும் எம்பாருக்குப் பின்பு ஸம்ப்ரதாயத் தலைவர் ஆனார்.

எம்பாரின் பூர்வாஶ்ரமத் தம்பியான சிறிய கோவிந்தப் பெருமாளின் தர்மபத்தினி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, நம்மாழ்வாரின் நினைவாக, அக்குழந்தைக்கு “ஸ்ரீ பராங்குஶ நம்பி” என்று திருநாமமிட்டு, ஆளவந்தாரின் மூன்றாவது குறையையும் போக்கினார்.

முதலியாண்டான் எம்பெருமானாரிடம் மிகுந்த ஈடுபாட்டுடனும் எம்பெருமானாரும் அவரிடம் பேரன்புடனும் இருந்தார். ஒரு முறை எம்பெருமானார் பெரிய நம்பி திருக்குமாரத்தி அத்துழாய்க்கு வேலையாளாகச் செல்லும்படி ஆணையிட, உகந்து அவ்வாணையை ஏற்றார் ஆண்டான்.

ஆளவந்தாரின் சிறந்த ஶிஷ்யரான மாறனேர் நம்பியின் இறுதிச் சடங்குகளைப் பெரிய நம்பி செய்ய, உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பி ப்ராஹ்மணராகையாலும் மாறனேர் நம்பி பஞ்சமராகையாலும், அச்செயலை ஏற்கவில்லை. எம்பெருமானார் பெரிய நம்பியை வரவழைத்து விளக்கம் கேட்க, அவரும் மாறனேர் நம்பியின் பெருமையை எடுத்துரைத்துத் தன் செயல் சரியே என்பதை உணர்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த எம்பெருமானார், பெரிய நம்பியின் செயல் சரி என்பது தெரிந்தும், அவரிடமே அதற்கு விளக்கம் அறிய விரும்பியதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்.

திருநாராயணபுரம் யாத்ரை

இவ்வாறு அனைவரும் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரின் வாக்குப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வர, கொடியவனான சோழ ராஜா சைவ மதத்தில் ஈடுபட்டு, சிவனைப் பரதெய்வமாக நிலை நாட்ட விரும்பினான். அவன் அனைத்து வித்வான்களையும் வரவழைத்து சிவ பரத்வத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிட்டான். அச்சபையில் இருந்த ஆழ்வானின் ஶிஷ்யனான நாலூரான் “பலர் ஏற்று என்ன பயன்? எம்பெருமானாரும் ஆழ்வானும் ஏற்றுக் கொண்டாலே அது உண்மையாக நிலைநிற்கும்” என்று கூற, அதை கேட்ட ராஜா தன் சேவகர்களை ராமானுஜரின் மடத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரக் கூறினான். அச்சமயம் எம்பெருமானார் தீர்த்தமாடச் சென்றிருக்க, அங்கிருந்த ஆழ்வான், ராஜாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, தானே எம்பெருமானாரின் த்ரிதண்ட காஷாயங்களை சாற்றிக் கொண்டு, ராஜாவின் சேவகர்களுடன் சென்றார். மடத்துக்குத் திரும்பிய எம்பெருமானார் இவ்விஷயம் கேள்விப்பட்டு, ஆபத்தை உணர்ந்து, ஆழ்வானின் வெள்ளை ஆடைகளை அணிந்து கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களுடன் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்றார். இதை அறிந்த சில சேவகர்கள் அவர்களைத் தொடர்ந்து செல்ல, எம்பெருமானார் மணலைக் கையில் எடுத்து மந்திரித்துத் தன் ஶிஷ்யர்களிடம் கொடுக்க, அவர்கள் அதை வழியில் தூவிச் சென்றனர். அந்த மணலை மிதித்த சேவகர்கள் கடும் வலிக்கு உள்ளாகி, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.

எம்பெருமானார் மேற்கே பாதுகாப்பான இடமாகக் கருதப் பட்ட திருநாராயணபுரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். காட்டு வழியில், அவரின் ஶிஷ்யரான நல்லான் சக்ரவர்த்தியால் திருத்தப்பட்ட சில வேடர்களைச் சந்தித்தார். ஆறு நாட்கள் தொடர்ந்து நடந்ததால் மிகவும் களைப்புற்றிருந்ததால் மிகவும் பசியுடன் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்களை அவ்வேடர்கள் வரவேற்று, எம்பெருமானாரின் க்ஷேமத்தை வினவினர். எம்பெருமானாரை ஸ்ரீவைஷ்ணவர்கள் வேடர்களுக்குக் காட்டிக் கொடுக்க, அவ்வேடர்கள் மிகவும் ஆநந்தப்பட்டு, தேனும் தினை மாவும் ஸமர்ப்பிக்க, எம்பெருமானார் தவிர மற்ற அனைவரும் அதை ஏற்று உண்டனர். வேடர்கள் அருகில் இருந்த க்ராமத்தில் சென்று அவர்களை ஒரு ப்ராஹ்மண இல்லத்தில் விட்டு, சமைப்பதற்குத் தேவையான பதார்த்தங்களையும் கொடுத்தனர்.

அந்த இல்லத்தில் ப்ராஹ்மணரின் (கொங்கிலாச்சான்) தர்ம பத்தினி, எல்லோரையும் வணங்கி, தான் தயார் செய்யும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார். ஸ்ரீவைஷ்ணவர்களோ, தாங்கள் எல்லோரிடமும் உணவு ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்க, அவளும் உடனே தானும் எம்பெருமானாரின் ஶிஷ்யை என்றும், ஸ்ரீரங்கத்தில் சில காலம் முன்பு வசித்த போது எம்பெருமானார் தன்னைச் ஶிஷ்யையாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறினாள். அவள் கூறியது – முன்பு ஒரு காலத்தில், நன் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, ராஜாக்களும் மந்திரிகளும் எம்பெருமானாரிடம் வந்து ஆசி வாங்கிச் செல்வர். ஆனல் அவரோ தினமும் பிக்ஷைக்கு வருவார். ஒரு நாள் அவரிடம் “ஏன் இந்த நிலை?” என்று கேட்க அவரும் “நான் அவர்களுக்கு பகவானைப் பற்றிய விஷயங்களை உணர்த்துவதால் அவர்கள் என்னிடம் வருகின்றனர்” என்றார்.நான் அவரிடம் எனக்கும் அதே விஷயங்களை உபதேசிக்குமாறு கேட்க, அவர் என்னைத் தன் ஶிஷ்யையாக ஏற்றுக் கொண்டு உபதேசித்தார். நாங்கள் எங்கள் ஊருக்குத் திரும்பும் காலத்தில் அவர் ஆசிகளைக் கேட்க, அவரும் தன் திருப்பாதுகைகளை எனக்கு அளித்தார். பின்பு நாங்கள் இங்கே வந்து விட்டோம். இதைக் கேட்ட எம்பெருமானார் தான் யார் என்பதை கூறாமல், ஸ்ரீவைஷ்ணவர்களை அவள் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதற்கு முன், ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவள் செய்வதைப் பார்க்குமாறு கூறினார். அவள் தளிகை சமைத்து முடித்து, தன் பூஜை அறைக்குச் சென்று, அங்கிருந்த ஸன்னிதிக்கு முன்பு இருந்து த்யானித்தாள். அந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒரு விக்ரஹம் போன்று இருந்த ஒரு வஸ்து இருப்பதைக் கண்டார். அவர் எம்பெருமானாரிடம் அவர் கண்டதைக் கூறினார். எம்பெருமானார் அவளிடம் “நீ உள்ளே என்ன செய்தாய்” என்று கேட்க அவள் “எம்பெருமானார் அளித்த திருப்பாதுகைகளை வணங்கி உணவை அவற்றுக்கு நைவேத்யம் செய்தேன்” என்றாள்.அவர் அவளிடம் அவற்றை வெளியே எடுத்து வரச் சொல்ல அவளும் அவ்வாறே செய்தாள். அவர் அது தன்னுடையது என்பதை உடனே உணர்ந்து கொண்டார். அவளிடம் “இங்கு எம்பெருமானார் இருப்பது உனக்குத் தெரிகிறதா” என்று கேட்க, அவளும் விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து எல்லோருடைய திருவடிகளையும் கண்டாள். எம்பெருமானாரின் திருவடிகளைக் கண்டு ஆநந்தத்துடன் “இவை எம்பெருமானாரின் திருவடிகள் போல உள்ளன, ஆனால் நீரோ வெள்ளை சாற்றிக் கொண்டிருப்பதால், என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை” என்றாள். எம்பெருமானார் தான் யார் என்பதை அவளுக்கு உணர்த்தி, அவளுக்குத் தான் செய்த உபதேசங்களைக் கூறுமாறு கூறினார். அவளும் அவற்றை மகிழ்ச்சியுடன் சொல்ல, எம்பெருமானார் அனைவரையும் ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார். ஒரு பகவத் விக்ரஹத்துக்கு நைவேத்யம் செய்யப்படாததால் தான் அந்த ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்ளவில்லை. பின்பு அவள் பழங்கள், பால் மற்றும் சர்க்கரையை அவரிடம் ஸமர்ப்பிக்க அவரும் தன் பெருமாளுக்கு அவற்றைப் படைத்து, பின்பு தானும் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவைஷ்ணவர்களின் ஶேஷப்ரஸாதத்தைத் தன் கணவருக்குக் கொடுத்துத் தான் மட்டும் உண்ணாமல் இருக்கிறாள். அதைக் கண்டு ஏன் என்று அவர் வினவ, “நீர் முன்பு எம்பெருமானாரை ஆசார்யனாக ஏற்கவில்லை. இன்று அவரே நம் இல்லம் தேடி வந்துள்ளார். நீர் அவரை ஆசார்யனாக ஏற்பேன் என்று சம்மதித்தால் மட்டுமே நான் உண்பேன்” என்ன அவரும் அதை ஏற்க, அவளும் ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்கிறாள். காலையில், அவர் எம்பெருமானாரிடம் சென்று சரணடைய எம்பெருமானாரும் அவருக்கு உபதேசங்கள் செய்து அவரைச் ஶிஷ்யராக ஏற்கிறார். பின்பு, எம்பெருமானார் காஷாய த்ரிதண்டத்தைச் ஸம்பாதித்து, சில நாட்கள் அங்கேயே இருந்து, மீண்டும் மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்கினார்.

அங்கிருந்து பௌத்த ஜைனர்கள் நிறைந்த ஸாளக்ராமம் வந்தடைந்தார். அவர்கள் இவரை கணிசியாமல் இருக்க, முதலியாண்டானை அவரின் திருவடிகளை ஊரில் உள்ள கேணியில் விளக்கச் சொல்ல, அவரும் அப்படியே செய்ய, புனிதமான அந்த தீர்த்தத்தை உட்கொண்ட அனைவரும் எம்பெருமானாரிடம் ஈடுபாடு கொண்டனர். அதே ஸமயத்தில் அந்த ஊரில் இருந்த வடுக நம்பி எம்பெருமானாரை எல்லாமாக ஏற்றுக் கொண்டு, ஆசார்ய பக்திக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கினார். எம்பெருமானார் அங்கிருந்து தொண்டனூர் சென்றடைந்து, விடல தேவ ராயன் என்கிற ராஜாவின் பேய் பிடித்த மகளை குணமாக்குகிறார். ராஜாவும் அவனின் குடும்பமும் எம்பெருமானார் ஶிஷ்யர்களாக, எம்பெருமானார் அந்த ராஜாவுக்கு விஷ்ணு வர்தந ராயன் என்று பெயரிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட 12000 ஜைன வித்வான்கள் எம்பெருமானாரிடம் வாதிட வர, எம்பெருமானார் தனக்கும் அவர்களுக்கும் நடுவே திரையிட்டு தான் திரைக்குப் பின்னிருந்து ஒரே சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் வாதிடுகிறார். திரைக்குப் பின்னால், தன்னுடை நிஜ ரூபமான ஆயிரம் தலை கொண்ட ஆதிஶேஷ வடிவை எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் ஒரே ஸமயத்தில் விடை கொடுக்கிறார். அவரிடம் தோற்ற பலரும் அவரின் ஶிஷ்யர்களாக தன்னுடைய மேன்மையை அவர்களுக்கு வெளியிடுகிறார். ராஜாவும் எம்பெருமானாரைக் கொண்டாடுகிறான்.

இவ்வாறு தொண்டனூரில் வாழ்ந்து வந்த காலத்தில், அவரிடம் இருந்த திருமண் முடிந்து போக, அவர் வருத்தமுடன் இருந்தார். திருநாராயணபுரத்து எம்பெருமான் அவர் கனவில் வந்து “நாம் உமக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம், திருமண்ணும் இங்கேயே உள்ளது” என்று கூற, ராஜாவின் உதவியுடன் திருநாராயணபுரம் அடைந்து, திருநாராயணபுரத்து எம்பெருமானைச் சேவிக்க முற்பட, அங்கே கோயில் இல்லாமல் இருப்பது கண்டு மிகவும் வருத்தமுற்றார். பின்பு திருமேனி சோர்வுற்று சிறிது கண்ணயர, கனவில் எம்பெருமான் தான் இருக்கும் இடைத்தைக் காட்டிக் கொடுக்க, எம்பெருமானார் எம்பெருமானை பூமியில் இருந்து வெளிக்கொணர்ந்தார். நம்மாழ்வார் பேரன்புடன் திருநாரணனைக் கொண்டாடியதால் திருவாய்மொழியில் “ஒரு நாயகமாய்” பதிகத்தை இந்த எம்பெருமானுக்கு என்று எம்பெருமானார் ஆக்கினார். திருமண் கிடைக்கப் பெற்று, பன்னிரு திருநாமங்கள் சாற்றிக்கொண்டார். பின்பு, ஊரைத் திருத்தி, கோயிலைப் புனர் நிர்மாணம் செய்து பல கைங்கர்யபரர்களையும் நியமித்தார்.

உத்ஸவ விக்ரஹம் இல்லாததால் உத்ஸவங்கள் கொண்டாட முடியாத நிலை இருந்தது. இது கண்டு வருத்தமுற்ற எம்பெருமானாரின் கனவில் மீண்டும் எம்பெருமான் தோன்றி, ராம ப்ரியன் என்கிற உத்ஸவர் தற்பொழுது தில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருப்பதைக் காட்டிக்கொடுக்க, எம்பெருமானாரும் தில்லி சென்று, ராஜாவிடம் இவ்விஷயத்தைக் கூற, ராஜாவும் தன் மகளின் அந்தப்புரத்துக்கு எம்பெருமானாரை அழைத்துச் சென்று காண்பித்தான். அந்தப்புரத்தில் ராமப்ரியன் விக்ரஹத்தை அதீத ப்ரீதியுடன் ராஜாவின் குமாரத்தி பேணிக்கொண்டிருந்தாள். எம்பெருமானார் அந்த விக்ரஹத்தைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தித்து “செல்லப்பிள்ளை இங்கே வாராய்” என்று கூற, எம்பெருமானும் உடனே துள்ளிக் குதித்து எம்பெருமானார் மடியில் வந்தமர்ந்தான். இதைக் கண்டு ஆச்சர்யமடைந்த ராஜா எம்பெருமானுக்கு பல திருவாபரணங்களைச் சமர்ப்பித்து எம்பெருமானாருடன் அனுப்பி வைத்தான். ராஜாவின் குமாரத்தியோ ராமப்ரியன் பிரிவு தாங்காமல் எம்பெருமானார் கோஷ்டியைத் தொடர்ந்து வர, திருநாராயணபுரத்து எல்லையில், எம்பெருமான் அவளைத் தன்னுள் (ஆண்டாளைச் செய்தது போல) அந்தர்கதம் ஆக்கிக்கொண்டான். எம்பெருமானாரும் அவளைத் துலுக்க நாச்சியார் என்று பெயரிட்டு எம்பெருமான் திருவடியிலேயே ப்ரதிஷ்டை செய்தார். பின்னர், உத்ஸவரை ஸந்நிதியில் புனர் ப்ரதிஷ்டை செய்து அனேக உத்ஸவங்களை நடத்திப் போனார்.

ஸ்ரீரங்கம் திரும்புதல்

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டு காலம் திருநாராயணபுரத்தில் இருந்து கொண்டு பல கைங்கர்யங்கள் செய்தும் பல ஸ்ரீவைஷ்ணவர்களை உருவாக்கியும் தன் காலத்தை ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு ஏற்றவாறு கழித்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து மாருதி சிறியாண்டான் மூலமாக ஶைவ ராஜா மாண்டான் என்ற செய்தி கேட்டு மிகவும் ஆனந்தித்து ஸ்ரீரங்கம் புறப்பட முற்பட்டார். அங்கிருந்த அவரின் ஶிஷ்யர்கள் இவ்விஷயம் கேட்டு எம்பெருமானாரைப் பிரிந்து எப்படி இருக்க முடியும் என்ற கவலைக்கடலில் மூழ்கினர். எம்பெருமானார் அவர்களைத் தேற்றி, அவர்கள் விருப்பத்துக்கு இணங்க தனக்கு ஒரு திருமேனியை ஏற்படுத்த ஒப்புக் கொண்டார். இத்திருமேனியே “தமருகந்த திருமேனி” என்று ப்ரஸித்தமாகக் கொண்டாடப்படுகிறது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு பயண கதியில் ஸ்ரீரங்கம் வந்தடைந்து பெரிய பெருமாளுக்கும் பெரிய பிராட்டிக்கும் மங்களாஶாஸனம் செய்துகொண்டு நம் ஸம்ப்ரதாயத்தையும் செவ்வனே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்.

ஸ்ரீரங்கம் எழுந்தருளிய உடையவர் பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்து, ஸன்னிதி ப்ரதக்ஷிணம் செய்து புத்துணர்வு பெற்று, தன்னுடைய ஶிஷ்யர்களுடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் சென்றார். ஆழ்வான் பக்திப் பெருக்குடன் உடையவர் திருவடிகளில் விழுந்து அவர் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கிடக்க, உடையவர் அவரை ஆதரத்துடன் எடுத்து அணைத்துக் கொண்டு, ஆழ்வானின் கண்ணில்லாத கோலத்தைக் கண்டு மாளாத துன்பத்துடன் பேசாதிருந்தார். பின்பு கண்ணீருடன் தழுதழுத்த குரலில் ஆழ்வானிடம் “நம்முடைய தரிஶனத்துக்காக (ஸம்ப்ரதாயத்துக்காக) உம்முடைய தரிஶனத்தையே (கண்களையே) இழந்தீரே” என்று கூற, ஆழ்வானும் “இது என்னுடைய அபசாரத்தினாலேயே நடந்தது” என்று கூறினார். உடையவர் “அன்று! நீர் அபசாரப்படுவீரோ? இது என்னுடைய அபசாரமாகவே இருக்க வேண்டும்” என்று தேற்றினார். ஒருவாறு எல்லோரும் தேறி நிற்க, உடையவர் தன்னுடைய மடத்துக்குத் திரும்புகிறார்.

இச்சமயத்தில், சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் (தற்பொழுது சிதம்பரம் என்று அழைக்கப்படும்) திருச்சித்ரகூடம் ஶைவ ஸமயத்தைச் சேர்ந்த தீயவர்களால் அழிக்கப்பட்டது என்று கூறினர். உடையவரும், அந்த திவ்ய தேசத்து எம்பெருமானின் உத்ஸவ விக்ரஹம் திருப்பதிக்குப் பாதுகாப்பாக எழுந்தருளுப்பட்டது என்று அறிந்து உடனே திருப்பதி நோக்கி விரைந்தார். அங்கே திருச்சித்ரகூடத்தில் இருந்தது போன்றே ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு புதிதாக ஒரு மூல மூர்த்தியை ப்ரதிஷ்டை செய்வித்தார் (தற்காலத்தில் கீழ் திருப்பதியில் நாம் ஸேவிக்கும் கோவிந்தராஜப் பெருமாள் இவரே). பின்பு உடையவர் திருமலை மேல் சென்று திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்து, அங்கிருந்து காஞ்சீபுரம் சென்று தேவப் பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்து, ஸ்ரீரங்கம் வந்தடைந்து தொடர்ந்து ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்.

பின்பு, உடையவர் ஆழ்வானை அழைத்து “தேவப் பெருமாளைப் ஸ்தோத்ரம் செய்தால் அவர் வேண்டியது அருள்வார் என்று கூறி”, அவரை ஸ்தோத்ரம் செய்து அவருடைய கண் பார்வை திரும்பப் பெறப் ப்ரார்த்திக்குமாறு ஆணையிடுகிறார். ஆழ்வான் முதலில் தயங்கினாலும், உடையவரின் ஆணையை மீற முடியாமல் ஏற்றுக் கொண்டு, ஶ்ரீவரதராஜ ஸ்தவத்தை அருளிச்செய்து, அதன் இறுதியில் தன் உட்கண்களால் எம்பெருமானைக் காணும்படி ஆக வேண்டும் என்று ப்ரார்த்திக்க எம்பெருமானும் ஆனந்தத்துடன் அதை நிறைவேற்ற, இதை ஆழ்வான் உடையவரிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு த்ருப்தி அடையாத உடையவர் ஆழ்வானையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் வந்தடைந்து, தேவப் பெருமாள் திருமுன்பே ஆழ்வானை ஶ்ரீவரதராஜ ஸ்த்வம் ஸேவிக்குமாறு கூறுகிறார். அவ்வாறு ஸேவித்துக் கொண்டு இருக்கும் பொழுது வேறு காரியமாக வெளியே செல்ல, ஆழ்வான் ஸ்த்வத்தைச் ஸேவித்து முடிக்கிறார். தேவப் பெருமாளும் ஆழ்வானுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, ஆழ்வானும் “நாம் பெற்ற பலன் நாலூரானும் பெற வேண்டும்” என்று கேட்க தேவப் பெருமாளும் அதை ஏற்றுக்கொள்கிறார். அங்கே மீண்டும் எழுந்தருளிய உடையவர் நடந்த விஷயம் கேட்டுப் பெருமாளையும் ஆழ்வானையும் வெறுத்து, தன்னுடைய ஆசையை நிறைவேற்றாததற்காகக் கடிந்து கொண்டார். தேவப் பெருமாள் உடனே ஆழ்வானுக்குப் பெருமாளும் உடையவரும் தெரியும்படி அருளினார். அவ்வாறு அருளப்பட்ட ஆழ்வான், தேவப் பெருமாளின் அழகை அனுபவித்து உடையவரிடம் விண்ணப்பிக்க, உடையவரும் த்ருப்தி அடைந்தார்.

கோயில் அண்ணர்

ஒருமுறை உடையவர் நாச்சியார் திருமொழிக்குப் பொருள் விளக்கிக் கொண்டிருக்க, “நாறு நறும் பொழில்” பாசுரம் வர, அதில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகர் எம்பெருமானுக்கு நூறு தடா அக்கார அடிசிலும் நூறு தடா வெண்ணெயும் ஸமர்ப்பிக்க ஆசைப் படுவது கண்டு, உடனே புறப்பட்டு திருமாலிருஞ்சோலை வந்தடைந்து, எம்பெருமானுக்கு ஆண்டாள் விருப்பப்படி அக்கார அடிசிலும் வெண்ணெயும் ஸமர்ப்பித்தார். அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு மங்களாஶாஸனம் செய்தார். ஒரு அண்ணன் தன் தங்கைக்குப் பரிவுடன் செய்வது போன்ற உடையவரின் இந்தச் செயலால் மிகவும் மகிழ்வுற்ற ஆண்டாள், உடையவரை “நம் கோயில் அண்ணர்” (ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அண்ணன்) என்று அழைத்தார். அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார்திருநகரி சென்றடைந்து ஆழ்வார் மற்றும் ஆதிநாதருக்கு மங்களாஶாஸனம், பின்பு ஸ்ரீரங்கம் வந்தடைந்து தன்னுடைய காலக்ஷேபத்தைத் தொடர்ந்தார்.

இவர் ஶிஷ்யர்கள்

அவருக்குப் பல ஶிஷ்யர்கள் இருந்தனர். மேலும் அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளையும் ஆசார்யர்களாக நம் ஸம்ப்ரதாய வளர்ச்சிக்காகவும், கொள்கைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கவும், நியமித்தார். இந்தச் சமயத்தில், பல ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவருக்குக் கைங்கர்யம் செய்து வந்தனர்.

 • கூரத்தாழ்வான், முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான், பட்டர் போன்றோர் ஸ்ரீபாஷ்யத்தை ப்ரசாரம் செய்ய உதவினர்.
 • அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பெருமானாரின் எம்பெருமான்களுக்குத் திருவாராதனம் செய்து வந்தார்.
 • கிடாம்பிப் பெருமாளும் கிடாம்பி ஆச்சானும் திருமடைப்பள்ளியை நிர்வஹித்தனர்.
 • வடுக நம்பி உடையவருக்கு எண்ணெய்க்காப்பு ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தார்.
 • கோமடத்துச் சிறியாழ்வான் கலசப் பானையும் திருவடிஜோடுகளையும் எடுப்பார்.
 • பிள்ளை உறங்கா வில்லி தாஸர் கருவூலத்தை நோக்கினார்.
 • அம்மங்கி பால் காய்ச்சுவார்; உக்கலாழ்வான் ப்ரஸாதம் எடுப்பார்.
 • உக்கலம்மாள் திருவாலவட்டக் கைங்கர்யம் செய்வார்.
 • மாருதிப் பெரியாண்டான் உடையவரின் திருக்கைச் செம்பு பிடிப்பார்.
 • மாருதிச் சிறியாண்டான் மடத்துக்குத் தேவையான மளிகை, காய்கறிகள் ஏற்பாடு செய்வார்.
 • தூய முனி வேழம் தீர்த்த கைங்கர்யம் செய்வார்.
 • திருவரங்கமாளிகையார் ஶ்ரீபண்டாரம் நிர்வஹிப்பார்.
 • பிள்ளை உறங்கா வில்லி தாஸரின் மருமக்களான வண்டரும் செண்டரும் ராஜ சேவை செய்து ஆயிரம் பொன் சம்பாதித்து மடத்துக்குச் சமர்ப்பிப்பர்.
 • இராமானுஜ வேளைக்காரர் உடையவருக்கு மெய்க்காவலாக இருப்பார்.
 • அகளங்க நாட்டாழ்வான் பிற மத வித்வான்களுடன் தர்க்கிப்பார்.

பலரால் வெளியிடப்பட்ட இவர் பெருமைகள்

உடையவரின் பெருமை பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான், பேரருளாளன், திருநாராயணப் பெருமாள், அழகர், திருக்குறுங்குடி நம்பி, நம்மாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், உடையவருடைய பல  ஶிஷ்யர்கள், ப்ரஹ்ம ராக்ஷஸு மற்றும் ஊமை முதலானோர்களால் வெளியிடப்பட்டது.

அவற்றைச் சிறிது இங்கே பார்ப்போம்.

 • பெரிய பெருமாள் (ஸ்ரீரங்கம்) தன்னுடைய நித்ய விபூதியையும் லீலா விபுதியையும் உடையவருக்கு அளித்து உடையவரின் ஸம்பந்திகளுக்கும் அவற்றை அவர் இஷ்டப்படி வினியோகம் செய்யும்படி அருளினார்.
 • திருவேங்கடமுடையான் (திருமலா திருப்பதி)பெரிய பெருமள் எம்பெருமானாருக்கு அளித்த “உடையவர்” என்ற விருதை அங்கீகரித்தார். மேலும் அவர் உடையவரின் விருப்பத்தின் பேரில், தும்பையூர்க் கொண்டி என்னும் தயிர்க்காரிக்கு மோக்ஷம் அளித்தார்.
 • பேரருளாளன் (காஞ்சீபுரம்) உடையவர் யஞ்ய மூர்த்தியை வாதத்தில் ஜயிப்பதற்கு உதவினார். மேலும் முன்பு வேறு ஸித்தாந்த்தத்தைச் சேர்ந்திருந்து சிறு வயதில் உடையவருக்கு ஸாமான்ய ஶாஸ்த்ரம் கற்றுக் கொடுத்த யாதவ ப்ரகாஶனை உடையவருக்கு ஶிஷ்யராகி அவரிடமே ஸந்யாஸாஶ்ரமம் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்.
 • திருநாராயணன் (மேலக்கோட்டை) உடையவரைக் கொண்டு தன்னுடைய திவ்ய க்ஷேத்ரத்தைப் புனர் நிர்மாணம் செய்யச்செய்து உடையவரின் செல்லப் பிள்ளையாகி, உடையவர் தன்னை எடுத்து அணைக்கும்படி அமைத்துக் கொண்டார்.
 • அழகர் (திருமாலிருஞ்சோலை) உடையவரின் பெருமையை இரண்டு முறை வெளியிட்டார் – பெரிய நம்பி திருவம்ஶத்தார் உடையவர் உடையாருக்குப் பெருமாள் அருளப்பாடிட்டு அழைக்க, தாங்கள் உடையவருக்கு ஆசார்ய வர்க்கம் என்றெண்ணி ஒதுங்கி நிற்க, அழகர், நீங்களும் உடையவர் உடையார் கோஷ்டியில் சேர்தலே நன்று என்றார். மேலும், கிடாம்பி ஆச்சானிடம் உடையவரின் ஶிஷ்யர்கள் அகதி இல்லை என்று நிர்ணயித்துக் காட்டினார்.
 • திருக்குறுங்குடி நம்பி உடையவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டு ப்ரஸித்தமாக ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்றே அழைக்கப்பட்டார்.
 • நம்மாழ்வார் ஸம்ஸாரத்தில் துன்பப்படும் ஆத்மாக்களைக் கண்டு வருந்தி பின்பு எம்பெருமானாரின் அவதாரத்தை உணர்ந்து ஆனந்தத்துடன் “பொலிக! பொலிக! பொலிக!” என்று பாடினார்.
 • ஸ்ரீமந் நாதமுனிகள் “நாம் உபதேசித்தால் சில ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடைவர் ஆனால் எம்பெருமானார் உபதேசித்தால் அனைவரும் உஜ்ஜீவனம் அடைவர், எப்படி வீர நாராயணபுரம் (வீராணம்) ஏரி எல்லோருக்கும் பயன்படுகிறதோ அது போல” என்றார்.
 • ஆளவந்தார் உடையவரைக் கண்டு “ஆம் முதல்வன்” என்று மொழிந்தார்.
 • பெரிய நம்பி எம்பெருமானாருக்கு ஆசார்யராக இருந்தும் அவரின் பெருமைகளைக் கண்டு அவருக்கு தண்டன் ஸமர்ப்பித்தார்
 • திருக்கோஷ்டியூர் நம்பி ஆசை உடையோர்க்கெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்த உடையவரின் பெரும் கருணையைக் கண்டு உடையவருக்கு “எம்பெருமானார்” (எம்பெருமானையும் விடப் பெரியவர்) என்ற விருதை அளித்தார்
 • திருமாலை ஆண்டான் உடையவருடன் சில கருத்து வேற்றுமைகள் கொண்டிருந்தார். ஆயினும், உடையவரின் பெருமைகளை உணர்ந்தபின் அவரை மிகவும் கொண்டாடி, தன் திருக்குமாரரையும் அவரிடமே ஶிஷ்யாராக ஆக்கினார்.
 • திருவரங்கப் பெருமாள் அரையர் மிகவும் ரஹஸ்யார்த்தமான “ஆசார்ய அபிமானம்” என்பதை உடையவருக்கு உபதேஶித்து, தன் திருக்குமாரரையும் அவரிடமே ஶிஷ்யாராக ஆக்கினார்.
 • உடையவரின் ஶிஷ்யர்கள் அவரின் திருவடித் தாமரைகளில் மிகுந்த விஶ்வாஸத்துடன் இருந்து, அவற்றையே தங்களுக்கு உபாயமாகவும் உபேயமாகவும் கொண்டிருந்தனர்.
 • அமுதனார் உடையவர் விஷயமாக இராமானுச நூற்றந்தாதியை ஸமர்ப்பிக்க, அது 4000 திவ்ய ப்ரபந்தத்திலும் சேர்க்கப்பட்டது.
 • ராஜகுமாரியின் உடம்பில் புகுந்திருந்த ப்ரஹ்ம ராக்ஷஸு யாதவ ப்ரகாஶனைக் கணிசியாமல் எம்பெருமானாரை நித்யஸூரிகளின் தலைவர் என்று காட்டிக் கொடுத்தது.
 • உடையவரால் அருளப்பட்ட ஒரு ஊமை சில வருடங்கள் காணாமல் போய்த் திரும்பி வந்து “உடையவர் விஷ்வக்ஸேனரே” என்று கூறி மறைந்தார்.
 • இவ்வாறு பல பெரியோர்கள் உடையவரின் பெருமையை வெளியிட்டனர்.

ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமாகப் பல ஆசார்யர்கள் இருக்க உடையவருக்கு என்ன தனிச் சிறப்பு எனில் எம்பெருமான் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், ஸ்ரீ ராமாவதாரமும் க்ருஷ்ணாவதரமும் அவர்களின் மற்றவர்களுக்குச் சரண் அளித்ததாலும் கீதோபதேஶம் செய்ததாலும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.

 • பல திவ்ய தேஶங்கள் இருந்தாலும், கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சீபுரம்) மற்றும் திருநாராயணபுரம் ஆகியவை ஆசர்யர்களுடன் இருந்த விசேஷ ஸம்பந்தத்தால் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.
 • பல ரிஷிகள் இருந்தாலும், வேத வ்யாஸ பகவான், பராஶர பகவான், சௌனக பகவான், ஶுக பகவான், நாரத பகவான் ஆகியோர் அவர்களின் வேத வேதாந்த புராண இதிஹாஸ வெளியீடுகளால் சிறந்தவர்களாக் கருதப்படுகின்றனர்.
 • பல ஆழ்வார்கள் இருந்தாலும் நம்மாழ்வார் அறிய வேண்டிய அர்த்தங்களையும், ஸித்தாந்த்தையும் தெளிவாக அறிவித்ததால் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார்.
 • இதே போல, உடையவர் இங்கே கூறியுள்ள அனைத்து விஷயங்களிலும் பங்கு பெற்றதாலும், நம் ஸித்தாந்தத்துக்கும் ஸம்ப்ரதாயத்துக்கும் சிறந்த அடித்தளம் அமைத்ததாலும் அவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டதாலும் மிகவும் கொண்டாடப்படுகிறார்.

சரம காலம்

உடையவரின் ஶிஷ்யர்கள் அவர்களின் ஆசார்ய ப்ரதிபத்தியாலும், எம்பெருமானார் நம்மாழ்வாரின் திருவடி நிலைகளாக இருந்ததாலும், ஆழ்வார் “பொலிக பொலிக பொலிக” என்று இவர் திருவவதாரத்தை முன்பே அறிவித்ததாலும் “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றே எப்பொழுதும் இருந்தனர். மேலும், உடையவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கொண்டே நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்ததால், ஆழ்வாரின் நேர் ஶிஷ்யராகவே கருதப்படுகிறார். ஆளவந்தாரும் இவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லையாயினும், ஆளவந்தாரின் திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்திருந்ததாலும் அவரின் ஆசைகளைத் தாம் பூர்த்தி செய்ததாலும், ஆளவந்தாருக்கும் நேர் ஶிஷ்யராகவே கருதப்படுகிறார்.

உடையவர் ஸ்ரீராமாயணத்தில் வரும் விபீஷண ஶரணாகதி சரித்ரத்தைக் கொண்டு ஶரணாகதி தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்த பொழுது, பிள்ளை உறங்கா வில்லி தாஸர் மிகவும் உள்ளம் கலங்கினார். அதைக் கண்ட உடையவர் தாஸரை “ஏன் வருந்துகிறீர்” என்று கேட்க தாஸரும் “அனைத்தையும் விட்டு ஸ்ரீ ராமனே ஶரணம் என்று வந்த விபீஷணனையே இவ்வளவு காக்க வைத்தால் நம் நிலை என்ன? நமக்கு மோக்ஷம் கிடைக்குமா?” என்று வினவினார். இதை கேட்ட உடையவர் தாஸரிடம் “கேளீர் பிள்ளாய்! எனக்கு மோக்ஷம் கிடைத்தால், உமக்கும் கிடைக்கும்; பெரிய நம்பிக்குக் கிடைத்தால், எனக்குக் கிடைக்கும்; ஆளவந்தாருக்குக் கிடைத்தால் பெரிய நம்பிக்குக் கிடைக்கும் …. இவ்வாறு நம்மாழ்வார் வரை சென்றால் அவர் திருவாய்மொழியின் இறுதியில் தான் மோக்ஷம் பெற்றதாக அறிவித்துள்ளதால், உமக்கும் கட்டாயம் கிடைக்கும்” என்று கூறி அவரைத் தேற்றினார்.

இராமானுச நூற்றந்தாதி ப்ரபந்தம் மூலம் அமுதனார் எம்பெருமானாரே மோக்ஷத்துக்கு உபாயம் என்றும் அவருக்கும் அவர் அடியவர்களுக்கும் சேவை செய்வதே நம் குறிக்கோள் என்றும் நிர்ணயித்துள்ளார்.

முதலியாண்டானின் திருக்குமாரர் கந்தாடையாண்டான் இப்படிப்பட்ட எம்பெருமானாரிடம் அவரின் ஒரு விக்ரஹத்தைப் நிர்மாணித்து அதை ஸ்ரீபெரும்பூதூரில் ப்ரதிஷ்டை செய்து அனைவரும் அவரைப் பிற்காலத்தில் சேவிக்குமாறு ஏற்பாடு செய்ய உத்தரவு கேட்க எம்பெருமானாரும் அனுமதி அளித்தார். ஒரு சிறந்த சிற்பியைக் கொண்டு ஒரு அழகிய விக்ரஹம் செய்யப்பட்டது. அந்த விக்ரஹம் எம்பெருமானாரின் திருவுள்ளத்துக்கு  மிகவும் ஏற்புடையதாக இருந்ததால் எம்பெருமானாரும் அதைத் தழுவிக் கொண்டார். அந்த விக்ரஹம் ஸ்ரீபெரும்பூதூரில் தை புஷ்யத்தன்று ப்ரதிஷ்டை செய்யப் பட்டது.

இவ்வாறு உடையவர் 120 வருடங்கள் இம்மண்ணுலகில் வாழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று நித்யஸூரிகளுடன் சேர்ந்திருக்க மிகுந்த ஆர்த்தி தலை எடுக்க, பெரிய பிராட்டி புருஷகாரத்துடன் பெரிய பெருமாளிடம் சென்று கத்ய த்ரயம் ஸேவித்துத் தன்னை இங்கிருந்து அங்கு அழைத்துக் கொள்ளுமாறு ப்ரார்த்தித்தார். பெரிய பெருமாளும் எம்பெருமானாருக்கு அன்றிலிருந்து ஏழாம் நாள் மோக்ஷம் கொடுப்பதாக வாக்களித்தார். எம்பெருமானார் பெருமாளிடம் “என்னுடைய ஸம்பந்த ஸம்பந்திகளுக்கும் எனக்குக் கிடைத்த பேறு கிடைக்க வேண்டும் ப்ரார்த்திக்க”, எம்பெருமானும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். உடையவர் பெரிய பெருமாளிடம் இருந்து விடை பெற்று, ராஜ நடையுடன் தன் மடத்தைச் சென்றடைந்தார். அவர் அடுத்த மூன்று நாட்களுக்குத் தன் ஶிஷ்யர்களுக்கு அரிய அர்த்தங்களை அறிவிக்க, அவர்கள் அதைக் கண்டு ஆச்சர்யப் பட, மேலும் மறைக்க முடியாது என்று உணர்ந்த உடையவர் “இன்றிலிருந்து நான்காம் நாள் பெரிய பெருமாள் அனுமதியின் பேரில் நாம் பரமபதத்துக்குச் செல்கிறோம்” என்று அருளிச்செய்ய, அங்கிருந்த ஶிஷ்யர்கள் கடல் கலங்கினாப் போலே திடித்து “நாமும் ப்ராணத் த்யாகம் செய்வோம்” என்று கூற, உடையவர் “அவ்வாறு செய்தால் உமக்கும் எனக்கும் இனி ஸம்பந்தம் இல்லை” என்று அருளித் தேற்றினார்.

இவ்வாறு மேலும் பல அரிய உபதேஶங்களைச் செய்து, தன்னுடைய ஶிஷ்யர்கள் பலருக்கும் ஓரோர் பொறுப்பை அளித்தார். அனைவரையும் கூரத்தாழ்வான் திருக்குமாரரான பட்டருக்கு அனுகூலமாக இருக்கும்படி ஆணையிட்டார். அனைவரிடமும் அபராத க்ஷாமணம் செய்து கொண்டு மீண்டும் தன் சரம உபதேஶங்களை அருளினார். முக்கியமாக மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் குணங்களைக் கொண்டாடும்படியும், ஸஹோதரர்கள் போலே கூடி உழைக்குமாறும் ஆணையிட்டார். உபாயாந்தரங்களில் கண் வையாமல், அனைத்துப் பொறுப்பகளையும் கைங்கர்யமாகச் செய்யுமாறு கூறினார். மேலும், ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் த்வேஷம் பாராட்டமலும் ஸம்ஸாரிகளைக் கொண்டாடாமல் இருக்கவும் ஆணையிட்டார்.

பின்பு, பட்டரைப் பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று, தீர்த்த மரியாதைகளை வாங்கிக் கொடுத்து, அனைவரிடமும் பட்டரே தர்ஶன நிர்வாஹம் செய்வார் என்றும், பட்டரிடம் “மேல்நாடு சென்று வேதாந்தியைத் திருத்தும் என்றும் ஆணையிட்டார். எம்பார் பெரியவராக இருந்ததால், தன்னுடைய ஶிஷ்யரான பட்டரை வழி நடத்திச் சென்றார்.

பரமபதம் செல்ல வேண்டிய நாள் அன்று, எம்பெருமானார் தன்னுடைய நித்யானுஷ்டான கர்மங்களான ஸ்நானம், பன்னிரு திருமண்கள் சாற்றிக்கொள்ளுதல், ஸந்த்யாவந்தனம் முதலியவை அனுஷ்டித்து மடத்துப் பெருமாள் திருவாராதனம் முடித்து, குருபரம்பரையை த்யானித்து, பத்மாஸனத்தில் அமர்ந்து, பரவாஸுதேவனில் தன் மனத்தை நிறுத்தி, ஆளவந்தாரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்து, சாய்ந்து கொண்டு, தன் கண்களை அகல விரித்து, தன் திருமுடியை எம்பார் மடியிலும், தன் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஆதிஶேஷ உருவத்தில் பரமபதத்தை நோக்கி எழுந்தருளினார். இதைக் கண்ட ஶிஷ்யர்கள் வேரற்ற மரம் போல் கீழே விழுந்து  கதறினர். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டனர். பெரிய பெருமாள் தன்னுடைய இழப்பையும் பரமபதநாதனின் லாபத்தையும் நினைத்து வருந்தி, சுருளமுதை விலக்கினான். பின்பு உத்தம நம்பி மூலம் தன்னுடைய அனைத்து பரிகரங்களையும் எம்பெருமானாருக்குக் கொடுத்து விடுகிறான். மடத்தில், எம்பெருமானாரின் விமல சரம திருமேனிக்கு ஸ்நாநம், பன்னிரு திருநாமம் சாற்றுதல், தீபம் தூபம் போன்ற உபசாரங்கள் ஸமர்ப்பிக்கப்பட்டன. அபிமான புத்ரரான பிள்ளான், சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்தார்.திருவரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகவும் உத்ஸாககத்துடன் வேதம், உபநிஷத், திவ்ய ப்ரபந்தம், வாத்யம், அரையர் ஸேவை போன்றவைகளை ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் எம்பெருமானார் சரம திருமேனியை எழுந்தருளிக் கொண்டு போகையில், பூவும் பொரியும் தூவிக்கொண்டு சென்றனர். பெரிய பெருமாளின் ஆணைப்படி, எம்பெருமானார் யதி ஸம்ஸ்கார விதியின் படி பூமிக்கடியில் பெருமாளின் வஸந்த மண்டபத்திலேயே திருப்பள்ளிப் படுத்தப் பட்டார். பெரிய பெருமாள் ஆணைப்படி, திருப்பள்ளிப்படுத்திய இடத்தின் மேலேயே முதலியாண்டான் எம்பெருமானாருக்கு ஒரு திருமேனியைப் ப்ரதிஷ்டை செய்தார்.

பின்பு, பல ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளியதைக் கேள்வியுற்று மிகவும் வருந்தினர். சிலர் எம்பெருமானாரின் பிரிவைத் தரிக்க முடியாமல் உயிரையும் விட்டனர். ஸ்ரீரங்கத்துக்கு வந்தவர்களோ பட்டர் அங்கு தர்ஶன நிர்வாஹம் செய்வது கண்டு தங்களைத் தேற்றிக் கொண்டனர்.

இவ்வாறு எம்பெருமானார் அனைவரின் உஜ்ஜீவனத்துக்காகவே இருந்த ஒரு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார். ஒருவர் எம்பெருமானின் பெருமைகளைச் சொன்னாலும் சொல்லலாம் எம்பெருமானாரின் பெருமைகளைச் சொல்லி முடிக்க முடியாது. எம்பெருமானாரின் வாழ்வையும் பெருமைகளையும் அவரின் ஆயிரமாவாது ஆண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அனுபவித்தோம். இந்த அனுபவம் நம் நெஞ்சில் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும். நாமும் நம் ஆழ்வார் ஆசார்யர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் ஒரு விஶ்வாஸமுள்ள ராமானுஜ தாஸராக வாழலாம்.

ஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேஶவ யஜ்வன: |
காந்திமத்யாம்
ப்ரஸூதாய யதிராஜாய மங்களம் ||

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே | 
ஸ்ரீரங்க வாஸினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் ||

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< குரு பரம்பரை

நம் குரு  பரம்பரையின் பெருமைகளை அநுபவித்தபின் திவ்ய ப்ரபந்தங்கள் திவ்ய தேசங்களின் ப்ரபாவம் அனுபவிக்கப் ப்ராப்தம்.

 

ஸ்ரீமன் நாராயணன், பரமபதத்தில் ஸ்ரீதேவி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), பூ தேவி, நீளாதேவி மற்றும் நித்ய ஸூரிகளுடன்

ஸகல கல்யாண குணகணங்கள் கூடிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தன் திவ்ய நிர்ஹேதுக க்ருபை அடியாகச் சில ஜீவாத்மாக்களை ஆழ்வார்களாக அனுக்ரஹித்துத் தன்பால் பக்தி பாரவச்யர்களாய்ப் பண்ணிப் போந்தான்.

நிரங்குச ஸ்வதந்த்ரனாக நித்யர்கள் மற்றும் முக்தர்களின் தலைவனுமாக இருந்தான் ஆகிலும் அவனுக்கும் ஒரு மன வருத்தம் இருந்தது. அவனது மன வருத்தம் யாதெனில், தன் மக்கள் லீலா விபூதியில் சிக்கித் துன்புற்று உழல்கிறார்களே என்பது பற்றியேயாம். இங்கே ஒரு கேள்வி எழும் – ஸர்வேச்வரனுக்குத் துன்பம் என்று உண்டு என்பது ஒரு தோஷமாகி விடுமே – அவன் ஸத்ய காமனாகவும் ஸத்ய ஸங்கல்பனாகவும் இருப்பதால் அவனே அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாமே என்பதே அக்கேள்வி.இதற்கு நம் ஆசார்யர்கள் அழகான விளக்கம் அளித்துள்ளார்கள் – அதாவது, எல்லா சக்திகளும் படைத்த ஒரு தந்தை எவ்வாறு தான் தன் ஒரு குழந்தையுடன் இருக்கும் போதும் தன்னைப் பிரிந்திருக்கும் மற்றொரு குழந்தைக்காக வருத்தப்படுவானோ, அது போலவே பகவானும் தன்னைப் பிரிந்திருக்கும் ஜீவாத்மாக்களுக்காக பல முயற்சிகளை எடுக்கிறான். இவ்வாறு அவன் வருந்துவதை ஒரு சிறந்த கல்யாண குணமாகவே கொண்டாடுகின்றனர்.  இவ்வாறு மயங்கித் துன்புற்று உழலும் ஜீவாத்மாக்களின் நன்மையைக் கருதியே எம்பெருமான் ஸ்ருஷ்டி காலத்தில் அவர்களுக்குக் கரையேறும் பொருட்டுக் கரண களேபரங்கள் தந்தும், சாஸ்த்ரங்கள் தந்தும் தன்னைக் காட்டியும், ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்  செய்தும் அவர்களுக்கு அநுஷ்டித்துக் காட்டியும் திருந்தாததால் தன் மேன்மையையும் ரக்ஷகத்வத்தையும் உணர்த்த அவர்களிலேயே சிலரைத் தேர்ந்து, மானைப் பயிற்ற மானைப் போலேயும், யானையைப் பிடிக்க யானையைப் போலேயும் ஜீவர்களை உத்தரிப்பிக்க ஜீவர்களையே உபாயமாகக் கொண்டான்.  அங்ஙனம் கொள்ளப் பட்டவர்களே ஆழ்வார்களும் ஆசார்யர்களும் ஆவர். இவர்கள் பாரத தேசத்தில் வெவ்வேறு திவ்ய தேசங்களில் அவதரித்தமையை வேத வ்யாசர் போன்ற ரிஷிகள் முன்கூட்டியே ஸ்ரீமத் பாகவதம்  போன்ற நூல்களில் தெரிவித்தனர் என்பதும் நாம் அறிந்ததே.

Azhwars

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப் பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய குணங்களைப் பாடுவது திவ்யப் ப்ரபந்தம்.இவை எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களைப் பாடுகின்றன. பாடியவர்கள் திவ்ய சூரிகள், பாட்டு திவ்ய ப்ரபந்தம், பாடப்பெற்ற திருவரங்கம் திருமலை காஞ்சீபுரம்,திருவல்லிக்கேணி ஆழ்வார் திருநகரி போன்ற தலங்கள் திவ்ய தேசங்கள். இவற்றில் ராம க்ருஷ்ணாத்யவதாரப் பெருமைகளும், பரம பதத்தில் உள்ள பரத்வப் பெருமையும், க்ஷீராப்தியிலுள்ள வ்யூஹப் பெருமையும் அவரவர் உள்ளே அந்தராத்மாவாய் இருந்து ரக்ஷிக்கும் அந்தர்யாமிப் பெருமையும் சேர்த்தே பாடப் பெற்றுள்ளன. இவற்றில் எல்லாவற்றையும்விட நம் கண் காண வந்து நம்மை ரக்ஷிக்கும் திவ்ய தேசத்து அர்ச்சா விக்ரஹங்களே நம் ஆழ்வார்களுக்குப் பெருவிருந்தானது, அதுவே நம் ஆசார்யர்களின் உயிர்நாடியாயும் இருந்தது.

திவ்ய ப்ரபந்தம் வேத/வேதாந்தச் செம்பொருளை எளிய இனிய தீந்தமிழில் நமக்குக் கொடுக்கிறது. ஆழ்வார்கள் இவற்றை அருளிச் செய்த பல நூற்றாண்டுகளுக்குப் பின், ஸ்ரீமன் நாதமுனிகள் தொடக்கமாக மணவாள மாமுனிகள் ஈறான நம் ஆசார்யர்கள் இவற்றில் தோய்ந்தும் ஆய்ந்தும் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தையும் ரக்ஷகத்வத்தையும் நமக்கு மிகத் தெளிவாகக் காட்ட இவைபோன்று வேறில்லை என்று அறுதியிட்டு நமக்காக இவற்றை ப்ரசாரம் செய்தும் வ்யாக்யானித்தும் நமக்குப் பேருபகாரம் செய்தனர். அவர்கள் தம் முழு வாழ்க்கையையும், வித்யாப்பியாசத்தையும் இச்செம்பொருள் பற்றிய சிந்தனையிலேயே செலவிட்டனர் எனில் மிகை அன்று.

azhwar-madhurakavi-nathamuni

நம்மாழ்வார், தம் இருபுறங்களிலும் மதுரகவிகள், நாத முநிகளுடன் (காஞ்சீபுரம்)

ஆழ்வார்களுக்குப் பின் திவ்ய ப்ரபந்தங்கள் ப்ரசாரமின்றி மறைந்துபோன ஓர் இருண்ட காலம் இருந்தது. அப்போது எம்பெருமான் திருவருளால் ஸ்ரீமன் நாதமுநிகள் தோன்றி, பல இன்னல்களுக்கிடையே ஆழ்வார் திருநகரியைத் தேடிக்கண்டுபிடித்து, அங்குச் சென்று மதுரகவி ஆழ்வார் க்ருபையால் நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து நாலாயிரம் பாசுரங்களையும் அவரிடமிருந்து அவற்றின் அர்த்தத்தோடேயே உபதேசமாகப் பெற்று, அவற்றை நாலாயிரம் பாசுரங்களையும் வகைப் படுத்தித் தொகுத்து, இவற்றைத் தமக்குபகரித்தருலிய மதுரகவிகளுக்கு க்ருதஜ்ஞதாநுசந்தானமாக நம்மாழ்வாரிடம் ஈச்வர விச்வாசம் கொண்டிருந்த அவரது “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பிரபந்தத்தை நாலாயிரத்தில் சேர்த்துத் தம் சிஷ்யர்களுக்குப் பண்ணோடு உபதேசித்தருளினார்.

 

Ramanuja_Sriperumbudur

ஸ்ரீ ராமாநுஜர்

ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ராமானுசருக்கு இவை யாவும் பூர்வாசார்யர்கள், முக்யமாக ஸ்ரீ யாமுநாசார்யர்  திருவுளப்படியே க்ரமேண அடைவே வந்து சேர்ந்தன. சமூகத்தின் எல்லாப் பகுதியினரும் இவற்றை அறிந்து உய்தி பெறவேண்டும் எனும் பெருங்கருணை கொண்ட மனத்தராய் இருந்ததால் திருவரங்கன் திருவருளால் இந்த ஸம்ப்ரதாயமும் எம்பெருமானார் தரிசனம் என்றே பேர் பெற்றது. அவரே திவ்யப் ப்ரபந்தத்தில் ஒரு பகுதியான திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதியில் இத்தகு மேன்மை மிக்க ஸம்ப்ரதாய ஸ்தாபனம் செய்தமையால் ப்ரபன்ன காயத்ரி என அனைவரும் தினமும் அனுசந்திக்கத் தக்க க்ரந்தத்தால் போற்றப்படுகிறார்.

nampillai-goshti1

நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி

இவ்வாசார்ய பரம்பரையில் எம்பெருமானார், எம்பார், பட்டர், நஞ்சீயர்க்குப் பின் வந்த மஹாசார்யர் நம்பிள்ளையேயாவார். இவர் தம் காலம் முழுவதும் ஸ்ரீ ரங்கத்தில் எழுந்தருளியிருந்து ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணம் செய்தவர். இவர் காலத்திலேயே திருவரங்கத்தில் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதன் வ்யாக்யானங்களுக்கும் இவரது அர்த்த புஷ்டியும் நயமும் சுவையும் மிக்க விரிவுரைகளால் மிகப் பெரும் மதிப்பும் கௌரவமும் கூடின. இவரது சிஷ்யர்கள் சம்பிரதாய இலக்கியத்துக்குப் பெரும் பணிகள் ஆற்றினர். நாலாயிரத்துக்கும் வியாக்யானம் அருளிய வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை இவரது சிஷ்யரே. இவரது திருவாய்மொழிப் பேருரையை ஏடு படுத்தி இன்றளவும் ஈடு முப்பத்தாறாயிரப் படி என நம்மனோர் அநுபவிக்கத் தந்த வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளையும் இவர் சிஷ்யரே.

pillailokacharya-goshti

பிள்ளைலோகாசார்யர் காலக்ஷேப கோஷ்டி

நம்பிள்ளைக்குப் பின், ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராகப் பிள்ளை லோகாசார்யர் எழுந்தருளியிருந்து அதற்கு முன்பில்லாதபடி ரஹஸ்ய க்ரந்தங்களை முழு நோக்கோடு அருளிச் செய்து, வேத/வேதாந்த/அருளிச் செயல்களில் பொதிந்து கிடக்கும் அர்த்த பஞ்சகம்/ரஹஸ்யத்ரய விவரணங்களை விசதமாகத் தம் அஷ்டாதச ரஹஸ்யங்கள் எனும் பதினெட்டுச் செம்பொருள் நூல்களால் பரப்பினார். இவர், நம்பிள்ளை சிஷ்யர் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக் குமாரர். இவரும் இவர் திருத் தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருமே நம்பிள்ளையின் திருவுளக் கருத்துகள் அனைத்தையும் தம் க்ரந்தங்களில் தெளிவுபடுத்தி ஸம்ப்ரதாயத்தைச் செழுமையும், வினாக்களுக்கப்பாற்பட்டதாயும் ஆக்கினர்.

srisailesa-thanian-small

மாமுநிகள் காலக்ஷேப கோஷ்டி…”ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தனியன் ஸமர்ப்பணம் ஆதல்

இறுதியாக, எம்பெருமானாரின் புனரவதாரமாகக் கருதப்படும் மணவாள மாமுநிகள் ஆழ்வார் திருநகரியில் அவதரித்து, தம் திருத்தகப்பனாரிடமும் திருவாய்மொழிப் பிள்ளையின் சிஷ்யராய் அவரிடமும் வேத/வேதாந்தங்கள்/அருளிச்செயல், ரஹஸ்யார்த்தங்கள் யாவும் கற்று, ஆசார்யரான பிள்ளையின் திருவாணைப்படித் திருவரங்கம் சென்று ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணத்திலேயே  அங்கேயே தம் வாழ்நாளைக் கழித்தார். ஓலைச் சுவடிகளில் கற்றும், கற்றவற்றை மிகக் கஷ்டப்பட்டுப் பின்புள்ளாருக்காக ஏடு படுத்தியும், இடை இடையே எல்லாத் திவ்ய தேசங்களுக்கும் சென்று சேவித்து, ஆங்காங்கே ஸந்நிதி முறைகளை நெறிப்படுத்தியும், ஓராண்டுக் காலம் தொடர்ந்து திருவரங்கன் திருமுன்பே திருவாய்மொழிப் பேருரை நிகழ்த்தி, அரங்கனாலேயே மன மகிழ்ச்சியினால் ஆசார்ய ப்ரதிபத்தி தோன்ற “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” எனும் தனியன் ஸமர்ப்பிக்கப் பட்டு இன்றளவும் எல்லா சந்நிதிகளிலும் திவ்ய பிரபந்த சேவைத் தொடக்க ச்லோகமாக நம்பெருமாள் நியமனப் படியே நடக்கும்படியான பெருமை இவர்க்கே அசாதாரணம். தொடர்ந்து அவதரித்த பல ஆசார்யர்கள் திவ்ய ப்ரபந்தங்களைக் கற்றும் அதன் படி வாழ்ந்தும் போனார்கள்.

எம்பெருமானின் திருவுள்ள உகப்பான சேதனர்களின் உஜ்ஜீவனத்துக்காக ஏற்பட்ட திவ்ய ப்ரபந்தங்களை நம் பூர்வர்கள் பல விதத்திலும் பாதுகாத்துப் போந்தார்கள். இவ்வாறாக, எம்பெருமானை அறிந்துகொள்ள அவனது நிர்ஹேதுக க்ருபையால் நமக்குக் கிடைத்துள்ள திவ்ய பிரபந்தத்தை நாம் கற்று அதன் செம்பொருளையும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்து அதன் படி வாழ்தலும் வேண்டும்.

ஆழ்வார்களையும் அவர்களின் திவ்யப்ரபந்தங்களின் பெருமையையும் ப்ராமாணிகத்வத்தையும் பற்றி அறிய இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைப் படிக்கவும்:

திவ்யப்ரபந்த பாசுரங்களின் அர்த்தங்களைப் பல மொழிகளில் அறிய  http://divyaprabandham.koyil.org பார்க்கவும்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/simple-guide-to-srivaishnavam-dhivya-prabandham-dhesam.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் –

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – பஞ்ச ஸம்ஸ்காரம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< முகவுரை

பெரிய நம்பிகள் ஸ்ரீ ராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தல்

நாம் ஸ்ரீவைஷ்ணவர் ஆவதெப்படி?

நம் பூர்வாசார்யர்கள் திருவுளப்படி நாம் ஸ்ரீவைஷ்ணவராவதற்கு ஒரு முறை/க்ரமம் உள்ளது. அதுவே “பஞ்ச ஸம்ஸ்காரம்” ஆகும், அதாவது நம் சம்ப்ரதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் படுவது.

ஸம்ஸ்காரம் எனில் தூய்மைப் படுத்தும் முறை. தகுதி அற்ற நிலையிலிருந்து தகுதி உள்ள நிலைக்கு மாற்றப் படுவது. இம்முறையில்தான் ஒருவர் முதலில் ஸ்ரீ வைஷ்ணவர் ஆகிறார். ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்தவன் ப்ரஹ்மோபதேசம் பெற்றுப் ப்ராஹ்மண நிலை எய்துவதுபோல்தான் இது. ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறந்தவன் இந்த முறையில் எளிதில் ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஆனால் இதில் ஒரு வியத்தகு செய்தி என்னெனில் ஸ்ரீவைஷ்ணவன் ஆதற்கு ஒருவன் ஸ்ரீவைஷ்ணவகுலத்தில் பிறந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில் ஸ்ரீ ஸ்ரீவைஷ்ணவத்வம் ஆத்ம ஸம்பந்தமானது, ப்ராஹ்மண்யம் சரீர ஸம்பந்தமான ஸம்ஸ்காரம். மோக்ஷ மார்க்கம் புகுந்து பிற தேவதாந்தர உபாஸனம் முதலியன விட்டு எம்பெருமானையே சரண் அடைய வழி செய்யும் பஞ்ச ஸம்ஸ்காரம் மொழி, ஜாதி, இனம், நாடு அனைத்தும் கடந்ததாகும்.

பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது ஸமாச்ரயணம் என்பது சாஸ்த்ரத்தில் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவர் ஆக நெறிப்படுத்தும் முறையாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ச்லோகம் இதை நன்கு விளக்குகிறது:
“தாபப் புண்ட்ர ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம:” என்பதில் ஐந்து நடவடிக்கைகளும் சொல்லப்படுகின்றன.

 • தாப: – உஷ்ணம் – சங்கமும் சக்ரமும் உஷ்ணப்படுத்தப்பட்டுத் தோள்களில் பொறிக்கப்படுவது; பாத்திரம் பண்டங்களில் பெயர் குறித்து இன்னார் உடைமை என்பதுபோலே இதனால் நாம் எம்பெருமானுக்கு உடைமை என்பது தெரிவிக்கப் படுகிறது.
 • புண்ட்ர – த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களை உடலில் குறிப்பிட்ட பாகங்களில் தரித்தல்;
 • நாம – தாஸ்ய நாமம் தரித்தல். ஆசார்யனால் வழங்கப்படும் தாஸ்ய நாமம், மதுரகவி தாசன் அல்லது இராமானுச தாசன் அல்லது ஸ்ரீ வைஷ்ணவ தாசன் என்பது போல
 • மந்த்ர – மந்த்ரோபதேசம். ஆசார்யரிடம் மந்த்ரோபதேசம் பெறுதல். மந்த்ரம் என்பது உச்சரிக்குக்கும் நம் துயர்களைப் போக்குவது. திருமந்தரம், த்வயம், சரமச்லோகம் இம்மூன்றும் நம் ஸம்ஸாரத் துயரங்களைப் போக்குவன.
 • யாக – இல்லத்தில் தினமும் எம்பெருமானைத் தொழத் திருவாராதனக் கிரமத்தை அறிதல்.

அடிப்படைத் தகுதிகள்

எம்பெருமானைச் சரண் புகுமுன் நமக்கு வேண்டிய அடிப்படைத் தகுதிகள் இரண்டுளதாம். அவை:

 • ஆகிஞ்சந்யம் – அடியேனுக்கு ஒரு நிறையும், தகுதியும் இல்லை, முற்றிலும் இயலாதவனாக ஒரு நிறைவும் இல்லாதவனாக உள்ளேன் எனும் பணிவு
 • அநந்ய கதித்வம் – எம்பெருமானைத் தவிர வேறு ஒரு புகலும் இல்லை, அவனே கரையேற்றிக் காப்பாற்றுவான் எனும் உறுதி

பஞ்ச ஸம்ஸ்காரத்தின் லக்ஷ்யங்கள்

சாஸ்த்ரம் “தத்வ ஞாநான் மோக்ஷ:” – ப்ரஹ்ம தத்வத்தைப் பற்றிய அறிவினால் மோக்ஷம் என்கிறது. ஆகவே உரிய ஓர் ஆசார்யர் மூலமாக அர்த்த பஞ்சக ஞாநம் பெற வேண்டுவது ஆவச்யகதை ஆகிறது. இம்மந்த்ரத்தின் உட்பொருளான 1. ப்ரஹ்மம – எம்பெருமான், இறைவன்; 2. ஜீவன் – ஜீவாத்மா; 3. உபாயம் – இவ்விறைவனை அடையும் வழி; 4. உபேயம் – உறுதிப் பொருள், கைங்கர்ய ப்ராப்தி; 5. விரோத – இவ்வுறுதிப் பொருளை அடைவதில் உள்ள தடைகள் என்னும் இவ்வைந்து விஷயங்களே அர்த்த பஞ்சகத்தை உணர்த்தும் மந்த்ரங்களின் உட்பொருளாம். நித்ய விபூதியில் எப்போதும் கைங்கர்யம் செய்ய விழைந்து வேண்டுவதும், எப்போதும் எல்லாவற்றுக்கும் எம்பெருமானையே எதிர்நோக்கி இருப்பதும், இந்நிலவுலகில் இருக்கும்வரை எம்பெருமானுக்கும், ஆசார்யருக்கும் பாகவதருக்கும் தொண்டு செய்தே இருப்பதும் திருவாராதனம், திவ்ய தேச கைங்கர்யம் இவற்றில் போது போக்குதலும் தலையாய கடமைகளாம்.

இச்சீரிய கருத்தினை அனைவரும் அறிந்து உய்யுமாறு அனைவர்க்கும் எடுத்துரைத்தலும் ஒரு பெரிய கைங்கர்யமாகும்.

ஆசார்யரே ஜீவனையும் பரமனையும் இணைத்து வைப்பவர் ஆதலின், நாம் அனைவரும் ப்ரபன்னரே ஆகிலும் நாம் ஆசார்யரையும் பாகவதர்களையும் அண்டி நிற்கும் ஆசார்ய/பாகவத நிஷ்டர்களே என்றே இராமாநுசர் முதலாக நம் முதலிகள் அனைவரும் மூதலித்துப் போந்தனர். ஜீவாத்மா தன் உண்மை நிலையை உணர்ந்து பஞ்ச ஸம்ஸ்கார சமயத்தில் ஆசார்யன் மூலமாக எம்பெருமானிடம் சரண் அடைவதால், இதுவே உண்மையான பிறவியாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த ஜீவாத்மா-பரமாத்ம ஸம்பந்தம் மனைவி-கணவன் ஸம்பந்தம் போன்றதால், ஜீவாத்மா மற்ற தேவதைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டியதின் ஆவச்யகதை அடிக்கடி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறாக, இந்த ஸம்ஸார மண்டலமும் அல்ப அஸாரமான பொருள்களில் ஆசையும் விட்டு, எம்பெருமானின் நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் செய்ய விரும்பிச் செல்வதே பிறவிப் பயன் என்பது இவ்வைஷ்ணவ சித்தாந்த ஸாரமாகும்.

யார் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யலாம்?

ஸ்ரீ வைஷ்ணவம் அநாதி காலமாய் இருந்துவரும் ஸம்ப்ரதாயமே ஆகிலும், இராமாநுசர் ஸகல சாஸ்த்ரங்களையும் ஆய்ந்து தமது பூர்வாசார்யர்களான ஆளவந்தார் நாதமுனிகள் போன்றோரின் நெறி நின்று எல்லாக் க்ரமங்களுக்கும் நெறிமுறைகளைத் தெளிவுபட ஏற்படுத்தி வைத்தார். அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளை நியமித்து, எவரெவருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்ள ஆசை உள்ளது, அதற்குத் தக்க உள்ளனர் என்று கண்டுகொண்டு அதைச் செய்துவைக்கச் சில மடங்களையும் ஏற்படுத்தினார். இவ்வேழுபத்தினான்கு ஆசார்யர்களின் வழியிலும், மடங்களின் மரபிலும் வந்தோர் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யும் மரபு ஏற்பட்டது.

பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்ளுமன்று நாம் என்ன செய்ய வேண்டும்?

 • அதிகாலையில் எழ வேண்டும்.
 • எம்பெருமானோடுள்ள ஸம்பந்த ஞாநம் இன்று பிறப்பதால் இன்றே பிறந்த நாள் என்றெண்ணி எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனையும், ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் சிந்திக்கவேண்டும்.
 • ஊர்த்வபுண்ட்ர தாரணம், ஸந்த்யாவந்தநாதி தினசர்யைகளை அனுஷ்டிக்கவேண்டும்.
 • இயன்ற அளவு புஷ்பம் பழம் ஆசார்யனுக்கும் எம்பெருமானுக்கும் வஸ்த்ரம் சம்பாவனைகளை எடுத்துக்கொண்டு குறித்த வேளைக்குள் ஆசார்யன் மடம்/திருமாளிகை அடைய வேண்டும்.
 • ஸமாச்ரயணம் பெறவேண்டும்.
 • ஆசார்யரிடம் ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்க வேண்டும்.
 • ஆசார்யர் அனுக்ரஹிக்கும் உபதேசங்களைக் கவனமாகக் கேட்க வேண்டும் .
  மடம்/திருமாளிகப் ப்ரசாதம் ஸ்வீகரிக்க வேண்டும்.
 • அன்றைய பொழுதை மடம்/திருமாளிகையிலேயே இருந்து ஆசார்யரிடம் நேரடியாக எவ்வளவு ஸாரார்த்தம் க்ரஹிக்க முடியுமோ க்ரஹிப்பது.
 • ஸமாச்ரயணம் ஆனவுடனே ஆலுவலகம் ஓடுவது தவிர்த்து அன்றைய நாளை முழுவதும் ஆத்மா சிந்தனையில் நிம்மதியாகச் செலவிடுவது.

பஞ்ச ஸம்ஸ்காரம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா?

ஸமாச்ரயணம் என்பது ஓர் எளிய சடங்கு, அத்தோடு எல்லாம் முடிந்தது என்றொரு தவறான கருத்து நிலவுகிறது. ஸ்ரீவைஷ்ணவ வாழ்வுக்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே. ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரோடு ஸ்ரீமன் நாராயணனுக்கு நித்ய கைங்கர்யம் திருநாட்டில் செய்ய வேணுமென்பதே ஒரே லக்ஷ்யம். ஆதலால் அதை அடைய ஆசார்ய அனுக்ரஹமும் பாகவத அனுக்ரஹமும் பெற்று எம்பெருமானின் கைங்கர்யத்தில் மகிழ்ச்சியோடு ஈடுபடப் பூர்வர்கள் காட்டிய நெறியில் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதே இதன் குறிக்கோள்.

பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்ற ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய நடைமுறை எப்படி இருக்கும் என இதனைப் பிள்ளை லோகாசார்யர் முமுக்ஷுப்படி ஸூத்ரம் 116ல் தெளிவுபடுத்தியருளும் வகை இதோ:

 • உலகியல் விஷயங்களில் எல்லா ஆசைகளையும் முற்றாக விட்டுத் தொலைப்பது.
 • ஸ்ரீமன் நாராயணன் ஒருவனையே ஒரே அடைக்கலமாகப் பற்றுவது.
 • நித்ய கைங்கர்யம் எனும் பேறு அவச்யம் கிட்டும் எனும் அசையா நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது .
 • அந்தப் பேற்றை விரைவிலேயே அடைய வேண்டும் எனும் இடையறாத ஆசையோடு தவிப்பது.
 • இவ்வுலகில் இருக்கும் வரை திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செய்தும் எம்பெருமானின் திவ்ய குணாநுபவம் செய்தும் பொழுது போக்குவது.
 • இப்படிப்பட்ட குண சீலர்களான எம்பெருமானின் அடியார் பெருமை உணர்ந்து அவர்களைக் கண்டு மகிழ்வது.
 • திருமந்த்ரத்திலும் த்வய மகா மந்த்ரத்திலும் நெஞ்சை நிலை நிறுத்துதல்.
 • தன் ஆசார்யரிடம் அன்பும் பக்தியும் பெருகி இருத்தல் .
 • ஆசார்யரிடமும் எம்பெருமானிடத்தும் நன்றி விச்வாசம் பாராட்டுதல் .
 • ஸத்வ குண ஸம்பன்னரான மெய்ஞானமும் பற்றின்மையும் சாந்தமும் உள்ள ஸ்ரீவைஷ்ணவரோடு கூடியிருத்தல் .

இதை இன்னும் விளக்கமாகக் காண – http://ponnadi.blogspot.in/2012/08/srivaishnava-lakshanam-5.html.

இவ்விஷயத்தில் தம் சிஷ்யர்கள் பலர் மூலமும், எழுபத்து நான்கு ஸிம்ஹாசனாதிபதிகள் மூலமும் பஞ்ச ஸம்ஸ்காரத்தை நிலை நிறுத்தி, ஒழுங்கு படுத்தி இதை ஒரு சாஸ்வதமான நெறியாக்கி நம் யாவர்க்கும் உய்வளித்த ஸ்வாமி எம்பெருமானாரை அவச்யம் நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்ஞானத்திலிருந்து நம்மை எடுத்துத் தூக்கி எம்பெருமான் கைங்கர்யமும் மங்களாசாசனமுமே வாழ்ச்சி எனக் காட்டிய அவர் திருவடிகளை ஸ்மரிப்பது கடமை.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/simple-guide-to-srivaishnavam-pancha-samskaram.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆசார்ய நிஷ்டை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygn6dBMoMHvuFwhBH

முன்னதாக ஸ்ரீ ராமானுஜ தரிசனம் பத்திரிகையில் ஆசிரியர் குழு பக்கத்தில் வெளியிடப்பட்ட வ்யாசங்களின் தொகுப்பு – http://www.varavaramuni.com/home/sriramanuja-dharsanam-magazine

குரு பரம்பரையை முழுவதுமாகப் பல மொழிகளில் அனுபவிக்க – http://acharyas.koyil.org/.

நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்ய நிஷ்டை ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இவ்விஷயமாக நம் பூர்வர்கள் வாழிவிலிருந்து சில விஷயங்களை இங்கு அனுபவிப்போம்.

தை மாத அனுபவம்

தை மாதத்தில், திருமழிசை ஆழ்வார், கூரத்தாழ்வான் மற்றும் எம்பார் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆழ்வான் தன்னுடைய செல்வங்களைத் துறந்து, எம்பெருமானாரைச் சரணடைந்து தன் வாழ்நாள் முழுதும் மாதுகரம் செய்து வாழ்ந்து வந்தார். வைராக்யத்தின் உருவமாகவே இருந்தார். தான் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தும் அவற்றைத் துறந்து தன்னுடைய ஆசார்யனை அடைந்து கைங்கர்யம் செய்வதற்கு ஒரு நொடியும் தயங்கவில்லை. மேலும், அவர் ஒரு சிறந்த ஞானியாக இருந்தும் தன்னுடைய ஞானத்தைத் தன் ஆசார்யன் முன்போ வேறு எவர் முன்போ காட்டிக்கொண்டதில்லை. சிறந்த நைச்சியத்தையே வெளிப்படுத்தினார். இதனாலேயே, திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் இவரை “மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்று கொண்டாடினார். இதையொட்டியே, மாமுனிகளும் தன்னுடைய யதிராஜ விம்சதியில் இவரை “வாசா மகோசர மஹாகுண தேசிகாக்ர்ய கூராதிநாத” என்று கொண்டாடினார்.

எம்பாரும் மிகச் சிறந்த ஆசார்ய நிஷ்டர். இவர் பெரிய திருமலை நம்பியின் சிஷ்யர். ஒரு முறை தன்னுடைய ஆசார்யனுக்குப் படுக்கை தயார் செய்து, அதைக் கைகளால் தடவிப் பார்த்து, பின்பு தான் அதில் படுத்தும் பார்க்கிறார். இதைக் கண்ட எம்பெருமானார் அதிர்ச்சியுற்றார். எம்பெருமானார் எம்பாரை நொக்கி “ஆசார்யன் படுக்கையில் படுக்க எவ்வாறு துணிந்தாய். இது மிகவும் தவறு” என்றார். எம்பாரோ அமைதியாக “என்னுடைய ஆசார்யனுக்கு படுக்கை சௌகரியமாக ஏற்பாடு செய்வது என் கடமை. ஆகையால் நானே அதில் படுத்துப் பார்த்தேன். இத்தால் எனக்கு பாபங்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்” என்றார். தான் இன்னலுக்கு ஆளானாலும், தன் ஆசார்யனின் சுகத்தையே விரும்பினார். இதைக் கேட்ட எம்பெருமானார் மிகவும் ஆநந்தித்தார். இவ்வாறு ஆசார்யன் திருமேனிக்கும் கைங்கர்யம் செய்யும் கொள்கையை மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் “தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை நோக்குமவன்” என்று உணர்த்துகிறார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

மாசி மாத அனுபவம்

மாசி மாதத்தில், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், மணக்கால் நம்பி , திருமாலை ஆண்டான், திருக்கச்சி நம்பி மற்றும்  பிள்ளை உறங்கா வில்லி தாஸர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக மணக்கால் நம்பி மற்றும் பிள்ளை உறங்கா வில்லி தாஸர் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

மணக்கால் நம்பி தன்னுடைய ஆசார்யனான உய்யக்கொண்டாருடன் 12 ஆண்டுகள் இருந்து கைங்கர்யம் செய்தார். அக்காலத்தில் உய்யக்கொண்டாரின் தர்ம பத்தினி திருநாடு அடைந்து விடவே ஆசார்யனின் திருமாளிகையையும் குழந்தைகளையும் இவரே கவனித்துக் கொண்டார். ஒரு முறை உய்யக்கொண்டாரின் குழந்தைகள் காவிரிக்குச் சென்று திரும்பும்போது ஓரிடத்தில் சேறாக இருக்க, நம்பி அந்தச் சேற்றில் படுத்துக் குழந்தைகளைத் தன் மேல் ஏறிச் செல்லும்படி பணித்தார். இதைக் கேட்ட உய்யக்கொண்டார் நம்பியின் ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மகிழ்ந்து அவரை மெச்சினார். நம்பியிடம் ஏதாவது அவருக்கு விருப்பமா என்று வினவ, நம்பியோ ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதே வேண்டும் என்று பணிவுடன் கூறினார். இதைக் கண்டு மகிழ்ந்த உய்யக்கொண்டார், மீளவும் ஒரு முறை நம்பிக்கு த்வய மந்திரத்தை உபதேசம் சேய்தார். ஆசார்யர்களுக்கு சிஷ்யர்களிடத்தில் ப்ரீதி உண்டானால் த்வயத்தை உபதேசம் செய்வது என்பது பல இடங்களில் காணப்பட்டுள்ளது.

பிள்ளை உறங்கா வில்லி தாஸர் எம்பெருமானாரால் திருத்தப்பட்டவர். அவரும் அவரது தர்ம பத்தினி பொன்னாச்சியாரும் நம்பெருமாளின் சிறந்த பக்தர்களாகவும் எம்பெருமானாரின் சிறந்த சீடர்களாகவும் திகழ்ந்தனர். இருவரும் எம்பெருமானாரிடத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து ஒரு கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டு க்ருஹஸ்தாச்ரம வாழ்க்கைக்கு ஒரு எடுக்காட்டாக விளங்கினார்கள். தாஸரும் எம்பெருமானாருக்கு மிகவும் அணுக்கராக இருந்து, அவர் தீர்த்தமாடித் திரும்பும்போது இவர் கையைப் பிடித்துக்கொண்டே கறை ஏறும் பேறு பெற்றிருந்தார். கூரத்தாழ்வான் போன்ற சிறந்த ஞானம், பக்தி உடையவர்களால் தாஸர் மிகவும் கொண்டாடப்பட்டார். பொன்னாச்சியாரும் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஆழ்பொருட்களை உணர்ந்தவராக இருந்து பல சமயங்களில் அதை வெளிப்படுத்தியும் உள்ளார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

பங்குனி மாத அனுபவம்

பங்குனி மாதத்தில் பெரிய பிராட்டியார், திருவரங்கத்து அமுதனார் மற்றும்  நஞ்சீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம். குறிப்பாக, பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீரங்கநாச்சியாரும் நம்பெருமாளும் சேர்த்தியில் எழுந்தருளி எம்பெருமானார் அனைவருடைய உஜ்ஜீவனத்துக்காகவும் செய்தருளிய சரணாகதியை நினைவுறுத்துகின்றனர்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக அமுதனார் மற்றும் நஞ்சீயர் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

அமுதனார் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியார் ஸன்னிதியை நிர்வாகம் செய்து வந்தார். எம்பெருமானார் கூரத்தாழ்வானைக்கொண்டு  அமுதனாரைத் திருத்தி ஆழ்வானுக்கே அவரை சிஷ்யனாகவுமாக்கினார். அமுதனார், அவ்வாறு மாறியபின் இராமானுச நூற்றந்தாதியை இயற்றினார். இப்ப்ரபந்தத்துக்கு உரையிடுகையில், மாமுனிகள் இதை ப்ரபந்ந காயத்ரி என்றே கொண்டாடுகிறார். எம்பெருமானாரின் ஏற்றத்தைச் சிறப்பாக வெளியிடும் இந்தப் ப்ரபந்தம், எம்பெருமானாருடைய திருவடிகளே நம்முடைய உய்வுக்கு ஒரே வழி என்று விளக்குகிறது.அமுதனார் ஆழ்வார்களில் ஒருவரும் அல்ல, இந்தப் ப்ரபந்தம் எம்பெருமானைக் கொண்டாடியும் அல்ல, ஆயினும் இது ஆழ்வார்கள் பாசுரத்துக்கு இணையாக திவ்ய ப்ரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அமுதனாருக்கு எம்பெருமானாரிடத்தில் இருந்த நிஷ்டை அவருடைய சொல் (இராமானுச நூற்றந்தாதி) மூலமாகவும் அவருடைய செயல் (தாயார் ஸன்னிதியின் நிர்வாகத்தை எம்பெருமானாரிடம் சமர்ப்பித்தது) மூலமாகவும் அறியலாம்.

பராசர பட்டரால் திருத்தப்பட்டதற்கு முன் நஞ்சீயர் சிறந்த வேதாந்தியாகத் திகழ்ந்தார். பின்பு, பட்டருக்கு சிஷ்யாராகி, எல்லாவற்றையும் துறந்து, பட்டருக்குக் கைங்கர்யம் செய்தே வாழ்ந்தார். பல சமயங்களில் அவர் பட்டரிடத்தில் பூர்ணமாக சரணடைந்து இருந்து, ஒரு சிஷ்யன் ஆசார்யரிடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டியுள்ளார். அவர் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்ட பின், அவரின் ஸந்யாஸ ஆச்ரமம் க்ருஹஸ்தராக இருக்கும் பட்டருக்கு கைங்கர்யம் செய்வதற்குத் தடையாகுமோ என்ற கேள்வி வர, அப்படி ஒரு தடை வந்தால் தான் சந்யாஸ ஆச்ரமத்தை விடுவதாகவும் கூறுகிறார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

சித்திரை மாத அனுபவம்

சித்திரை மாதத்தில்  மதுரகவி ஆழ்வார், எம்பெருமானார், முதலியாண்டான், அநந்தாழ்வான், கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான், வடுக நம்பி, கிடாமபி ஆச்சான், எங்களாழ்வான், நடாதூர் அம்மாள் மற்றும் பிள்ளை லோகம் ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

மாமுனிகள், உபதேச ரத்தின மாலையில் ஆழ்வார்கள் பதின்மர்களைப் பாடிய பின், மதுரகவி ஆழ்வார், ஆண்டாள் மற்றும் எம்பெருமானாரைப் பாடுகிறார். ஆழ்வார்கள் பதின்மரும் எம்பெருமானிடத்தில் கொண்ட பக்தியால் கொண்டாடப்பட்டனர். மதுரகவி ஆழ்வாரும் ஆண்டாளும் தங்கள் தங்கள் ஆசார்யர்களான நம்மாழ்வாரிடத்திலும் பெரியாழ்வாரிடத்திலும் கொண்ட பக்தியால் கொண்டாடப்பட்டனர். எம்பெருமானார் ஆளவந்தார் மற்றும் பெரிய நம்பிகளிடத்தில் கொண்ட பக்தியினால் மாமுனிகள் எம்பெருமானாரையும் இந்த ஆசார்ய நிஷ்டர்கள் கோஷ்டியிலேயே சேர்த்து அனுபவித்தார்.

எம்பெருமானாரின் சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் அவரிடத்தில் இருந்த ஆசார்ய நிஷ்டையினால் சிறந்து விளங்கினார்கள். எம்பெருமானாரின் ஆணையின் பேரால் பெரிய நம்பியின் குமாரத்திக்கு சீதன வெள்ளாட்டியாக (வேலைக்காரனாக) உடன் சென்றார் முதலியாண்டான். எம்பெருமானாரின் ஆணையின் பேரால் திருவேங்கடம் என்கிற திருமலைக்குச் சென்று திருவேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் செய்தார் அநந்தாழ்வான். எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அறிந்த உடனேயே கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் தன்னுடைய உயிரைத் துறந்தார். வடுக நம்பி எம்பெருமானை விட எம்பெருமானாரையே மிகவும் கொண்டாடிப்போந்தார். எம்பெருமானார் திருக்கோஷ்டி நம்பியைக் கண்டவுடன் கடும் வெயிலில் கீழே விழுந்து வணங்க, அத்தைப் பொறுக்க முடியாமல் கிடாம்பி ஆச்சான் அவரைத் தூக்கி நிறுத்தினார். அதனாலேயே நம்பியால் எம்பெருமானாருக்குத் பிக்ஷை செய்து கொடுக்கும் கைங்கர்யம் செய்யும்படி நியமிக்கப் பெற்றார்.  இவை அனைத்தும் ஆசார்ய நிஷ்டைக்கு சிறந்த உதாரணங்கள்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

வைகாசி மாத அனுபவம்

வைகாசி மாதத்தில்  நம்மாழ்வார், திருவரங்கப்பெருமாள் அரையர், திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, பராசர பட்டர், வேத வ்யாஸ பட்டர் மற்றும் திருவாய்மொழி பிள்ளை போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

அந்திமோபாய நிஷ்டை (http://ponnadi.blogspot.in/2013/06/anthimopaya-nishtai-6.html) என்னும் க்ரந்தத்தில் திருக்கோஷ்டியூர் நம்பிகளின் வாழ்வில் நடந்த ஒரு அற்புதமான விஷயம் காட்டப்பட்டுள்ளது. ஒரு முறை எம்பெருமானார் நம்பிகளிடத்தில் “அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை அருளவேணும்” என்று ப்ரார்த்தித்தார். நம்பி தன் கண்களை மூடித் த்யானித்து, பின்வருமாறு அருளினார் “நாங்கள் ஆளவந்தாரிடம் கல்வி பயின்று வந்த காலத்தில், ஆளவந்தார் நதிக்குச் சென்று தீர்த்தமாடும்பொழுது அவர் திருமுதுகைச் சேவிப்போம். அது காண்பதற்கு பளபள என செப்புக் குடம் போன்றிருக்கும். அந்த திவ்ய சேவையையே நான் எப்பொழுதும் தஞ்சமாகக் கருதுவேன். நீரும் அவ்வாறே நினைத்திரும்” – இச்சரித்திரம் மிகப் ப்ரசித்தமானது. சிஷ்யனின் த்யானத்துக்கு ஆசார்யனின் திருமேனியே விஷ்யம் என்பதை உணர்த்தும் சரித்திரம். நம்பிகள் எப்பொழுதும் திருக்கோஷ்டியூர் ஸன்னிதி கோபுரத்தில் அமர்ந்திருந்து “யமுனைத்துறைவர்” என்கிற மந்திரத்தைக் கொண்டு ஆளவன்தாரையே த்யானித்திருப்பர் என்று கூறப்படுவதுண்டு.

இது போன்று, திருவாய்மொழிப் பிள்ளையும் தனக்கு பிள்ளை லோகாசார்யரின் ஆணைப்படி ஸத் ஸம்ப்ரதாய ஸாரார்த்தங்களை உணர்த்திய கூர குலோத்தம தாஸரிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

ஆனி மாத அனுபவம்

ஆனி மாதத்தில்  பெரியாழ்வார், நாதமுனிகள், திருக்கண்ணமங்கை ஆண்டன், வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளை லோகாசார்யரின் சிறந்த சிஷ்யர். அவர் தன்னுடைய ஆசார்யனிடம் எப்பொழுதும் அடி பணிந்து இருந்து கைங்கர்யங்கள் செய்து வந்தார். அவருக்குத் திருமணம் ஆகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்தார். இதை நினைத்து வருந்திய அவரின் தாயார் நம்பிள்ளையிடம் சென்று முறையிடுகிறார். நம்பிள்ளை தன்னுடைய சிஷ்யரை ஸத் ஸந்தானத்தைப் பெறுவதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடுமாறு நியமிக்கிறார். நம்பிள்ளை மற்றும் நம்பெருமாள் அருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் தர்ம பத்தினி பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்னும் இரண்டு திவ்யமான குழந்தைகளை ஈன்றெடுக்கிறார். இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ப்ரம்மச்சாரிகளாக இருந்து ஆழ்வார் ஆசார்யர்கள் உரைத்த தத்துவங்களைத் தெளிவாக எடுத்துரைத்து நம் ஸத் ஸம்ப்ரதாயத்தை சீரிய முறையில் வளர்த்தார்கள்.

அது போலே, வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் முதலில் நம்பிள்ளை சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளையின் மெத்தப் படிக்காத ஒரு ஸாமான்யமான சிஷ்யராக விளங்கினார். பெரியவாச்சான் பிள்ளையின் கருணையினாலேயே, அவர் ஒரு சிறந்த வித்வானாக உருவாகிறார். பின்பு, திருவாய்மொழிக்குப் பதவரையும் கீதை வெண்பா மற்றும் பல க்ரந்தங்களை எழுதுமளவுக்கு சிறந்து விளங்கினார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

ஆடி மாத அனுபவம்

ஆடி மாதத்தில் ஆண்டாள், ஆளவந்தார் மற்றும் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம். ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

மாமுனிகள் ஆழ்வார்கள் மற்றும் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரங்கள் மற்றும் அவதார ஸ்தலங்களைத் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் கோடிட்டுக் காட்டுகிறார். அவ்வாறு செய்கையில், ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரமாக இருந்தாலும், மதுரகவிகள் மற்றும் எம்பெருமானாருடன் சேர்த்தே காட்டுகிறார் – ஏனெனில் இம்மூவரும் ஆசார்ய நிஷ்டர்கள் என்பதால். ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று பெரியாழ்வாருக்காக வரும் எம்பெருமானே தனக்கு வேண்டும் என்று அறுதியிடுகிறாள். நம்மாழ்வாரிடம் மதுரகவிகள் கொண்ட ஆசார்ய நிஷ்டை மிகப் ப்ரபலமானுது. எம்பெருமானாரும் நம்மாழ்வார், ஆளவந்தார் மற்றும் பெரிய நம்பிகளிடத்தில் மிகவும் அடிபணிந்து இருந்தவர்.

ஆளவந்தாரும் தன்னுடைய ஸ்தோத்ர ரத்தினத்தில் நாதமுனிகளையே தனக்கு எல்லாமாக அறுதியிட்டார். முதலில் “அத்ர பரத்ர சாபி” (நாதமுனிகளையே இவ்வுலகிலும் பரவுலகிலும் அண்டி இருப்பேன்) என்றும், இறுதியில் “அக்ருத்ரிம … பிதாமஹம் நாதமுனிம்…” (என்னை என்னுடைய நன்மைகளுக்காக ஏற்காமல், என் பாட்டனாருக்காக ஏற்றுக்கொள்வாயாக) என்றும் கூறினார். இறுதியாக மாமுனிகளைச் சரணடையும் போது, ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனும் தான் விசிஷ்டாத்வைதத்துக்கு எதிர் வாதிடுபவர்களுக்குச் சிங்கமாகவும், ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் தாஸனாகவும் இருப்பேன் என்று கூறினார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

ஆவணி மாத அனுபவம்

ஆவணி மாதத்தில்  ஸ்ரீ ரங்கநாதன் (பெரிய பெருமாள்), பெரியவாச்சான் பிள்ளை, நாயனாராச்சான் பிள்ளை மற்றும் அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

பெரிய பெருமாளின் ஆசார்ய நிஷ்டையை விளக்கும் விஷயத்தை இப்போது காண்போம்.

ஸ்ரீமந் நாராயணன் நிரங்குச ஸ்வதந்த்ரனாக இருப்பினும், மற்றவர்களுக்கு வழிகாட்ட, தானும் சில ஆசாரர்களைக் கொண்டான். பகவத் கீதையில், எம்பெருமான் ஒரு குருவைச் சென்றடைந்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து, அவரிடமிருந்து தத்துவத்தை அறியுமாறு உரைத்தான். தன்னுடைய அவதாரங்களில் அதை நடத்தியும் காட்டினான்.

ஸ்ரீ ராமனாக வசிஷ்ட விச்வாமித்ரர்களிடத்தில் பயின்றான். ஆயினும், அதில் அவன் த்ருப்தி அடையவில்லை. கண்ணனாக ஸாந்தீபனி  முனியிடத்தில் பயின்றான். அங்கும், அவன் த்ருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. எம்பெருமானார் காலத்தில், அவர் திருவேங்கடமுடையானுக்கு சங்க சக்கரங்களை வழங்கி அவர் விஷ்ணுவே என்பதை நிலை நாட்டினார் (பஞ்ச ஸம்ஸ்காரத்தின்போது சங்க சக்கரங்களை சிஷ்யனுக்கு ஆசார்யன் அளித்து அவன் ஸ்வரூபத்தை நிலை நாட்டுவதால், எம்பெருமானாரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டான்). திருக்குறுங்குடி நம்பியும் எம்பெருமானாரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு, அவரிடம் மந்த்ரோபதேசம் பெற்று ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்று அழைக்கப் பட்டான். இருப்பினும் எம்பெருமான் தன்னுடைய சிஷ்யத்வ பூர்த்தியை வெளிப்படுத்தாததால் அவனுக்கு பூர்ண த்ருப்தி ஏற்படவில்லை. மாமுனிகள் திருவரங்கம் வந்தடைந்தவுடன், அவரே தனக்குச் சிறந்த ஆசாயராக விளங்குவார் என்று ஸ்ரீ ரங்கநாதன் மிகவும் மகிழ்ந்தான். அதனால், முதலில் மாமுனிகளை திருவாய்மொழி காலக்ஷேபம் தன் திருமுன்பு சாதிக்குமாறு ஆணையிட்டான் – இதன் மூலம் ஆசார்யனிடம் அடி பணிந்து காலக்ஷேபம் கேட்கும் முறையை வெளிப்படுத்தினான். ஒரு ஆனி திருமூலத்தன்று காலக்ஷேபம் சாற்றுமுறை ஆனபின்பு, பெரிய பெருமாள் மிகச்சிறந்ததான “ஸ்ரீசைலேசா தயாபாத்ரம்” தனியனைத் தன் ஆசார்யனுக்கு ஸமர்ப்பித்தான். அவ்வளவோடு அல்லாமல், இந்தத் தனியனை எல்லா இடமும் பரப்பி, திவ்ய ப்ரபந்த சேவாகாலத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சேவிக்குமாறு ஆணையிட்டான். மேலும், சிஷ்யன் ஆசார்யனுக்குத் தன் சிறந்த செல்வத்தை அளிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப, தன்னுடைய சேஷ பர்யங்கத்தை மாமுனிகளுக்கு வழங்கினான். இவ்வாறு, பெரிய பெருமாள் மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்று மிகவும் மகிழ்ந்தான்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை பெரிய பெருமாளிடத்தில் ப்ரார்த்திப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாசன்

ஆங்கிலம்: http://ponnadi.blogspot.com/2015/08/acharya-nishtai.html

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முன்னதாக நாம் ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனத்தின் பெருமைகளையும் வழிமுறைகளையும் https://srivaishnavagranthamstamil.wordpress.com/2013/12/13/srivaishnava-thiruvaaraadhanam/ என்கிற கட்டுரையில் கண்டுள்ளோம். அந்தக் கட்டுரையில் பல ச்லோகங்களும் பாசுரங்களும் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. அங்கு விடுபட்ட விஷயங்களைக் கொடுப்பதே இந்தக் கட்டுரையின் முக்கியக் குறிக்கோள். திருவாராதனத்தில் உபயோகப்படுத்தப்படும் ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களைத் தொடுத்து அளிக்க எங்களால் ஆன முயற்சியை எடுத்துள்ளோம். முழு விவரங்களுக்கு மேலே படிக்கவும்.

ebook: https://onedrive.live.com/redir?resid=32ECDEC5E2737323!143&authkey=!AAS1WeJFYJguuT0&ithint=file%2cpdf

ஸ்ரீமந் நாராயணன் – பரமபதம்
 
திருவாராதனம் (கோயில் ஆழ்வார் – ஸந்நிதி)
நம்மாழ்வார், எம்பெருமானார், மாமுனிகள்

குறிப்புகள்:
ரஹஸ்ய த்ரயம் முதலியன பஞ்ச ஸம்ஸ்காரத்துக்குப் பின்பே சொல்லப்படலாம்.
வேத மந்திரங்கள் உபநயந ஸம்ஸ்காரத்தில் செய்யப்படும் ப்ரஹ்மோபதேசத்துக்குப் பின்பே சொல்லப்படலாம்.

ஊர்த்வ புண்ட்ர தாரணம்

தீர்த்தமாடிய பிறகு, சுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொன்னபடி திருமண் இட்டுக் கொள்ள வேண்டும். 12 திருமண்களும் அதைத் தொடர்ந்து 12 ஸ்ரீசூர்ணங்களும் கீழே காட்டப்பட்ட இடங்களில் இட்டுக் கொள்ள வேண்டும்.

எண் – உடம்பின் பாகம் – ஸ்ரீ விஷ்ணு மந்திரம் (திருமண்) – ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம் (ஸ்ரீசூர்ணம்)

 1. நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
 2. வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
 3. நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
 4. கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
 5. வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
 6. தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
 7. கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
 8. வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
 9. தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
 10. கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
 11. கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
 12. கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

குறிப்புகள்:

 • ஊர்த்வ புண்ட்ரம், தரையில் சௌகரியமாக அமர்ந்து கொண்டே இட்டுக்கொள்ள வேண்டும்.
 • கையில் மீதம் உள்ள திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணத்தை தீர்த்தம் கொண்டு கழுவுதல் கூடாது. மீதம் உள்ளதை தலையில் தடவிக் கொள்ள வேண்டும்.
 • திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் ஆள்காட்டி விரலாலேயே இட்டுக் கொள்ள வேண்டும். உபகரணங்கள் உபயோகப்படுத்துதல் கூடாது.
 • இறப்புத் தீட்டு காலங்களில், திருமண் இட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்ளக் கூடாது. பெரியோரிடம் கேட்டு அறிந்து குடும்ப வழக்கப்படி பின்பற்றவும்.

குரு பரம்பரா த்யானம்

ஊர்த்வ புண்ட்ரம் இட்டுக் கொண்ட பின், குரு பரம்பரையை மந்திரமாகவும் (எளிதில் நினைவில் கொள்ளத்தக்க) ச்லோகமாகவும் அநுஸந்திக்க வேண்டும். இரண்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ச்ரியை நம:
ஸ்ரீதராய நம:

ச்லோக குருபரம்பரை (ச்லோகம்)

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

ரஹஸ்ய த்ரய அநுஸந்தாநம்

குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.

திருமந்திரம்ஓம் நமோ நாராயணாய

த்வயம்
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே |
ஸ்ரீமதே நாராயணாய நம: ||

சரம ச்லோகம் (ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

ஸ்ரீராம சரம ச்லோகம்
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

ஓராண் வழி ஆசார்ய தனியன்கள் (https://guruparamparai.wordpress.com/thanians/)

 • பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந:

 • பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||

 • ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||

 • நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

 • ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||

 • உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||

 • மணக்கால்நம்பி (மாசி – மகம்)

அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||

 • ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||

 • பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

 • எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

 • எம்பார் (தை – புனர்பூசம்)

ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||

 • பட்டர் (வைகாசி – அனுஷம்)

ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

 • நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||

 • நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

 • வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||

 • பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||

 • திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே ||

 • மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

 • பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்) – வானமாலை மடம் சிஷ்யர்களுக்கு

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே

இதன் பிறகு, தன்னுடைய ஆசார்யன் மடம்/திருமாளிகை பரம்பரை தனியன்களை அநுஸந்திக்க வேண்டும்.

பிறகு ஸந்த்யாவந்தநம் மற்றும் மாத்யாஹ்நிகம் செய்ய வேண்டும். திருவாராதனம் மதிய வேளையில் மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டும்.

தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்ய வேண்டிய மந்திர ஸ்நாநமும் அதன் ச்லோகமும்

குறிப்பு: காலை அனுஷ்டாநங்களுக்கும் திருவாராதனம் தொடங்கும் சமயத்துக்கும் நடுவில் அசுத்தி நேர வாய்ப்புள்ளதால் இது அவச்யம்.

புவி மூர்த்நி ததாகாசே மூர்த்ந்யாகாசே ததா புவி |
ஆகாசே புவி மூர்த்நிஸ்யாத் ஆபோஹிஷ்டேதி மந்த்ரத: ||

என்று கூறி, மேல் வரும் மந்திரத்தைச் சொல்லவும்.

ஆபோ ஹிஷ்டா மயோபுவ: |
தா ந ஊர்ஜே ததாதந: |
மஹே ரணாய சக்ஷஸே |
யோவச் சிவதமோ ரஸ: |
தஸ்ய பாஜயதேஹ ந: |
உசதீரிவ மாதர: |
தஸ்மா அரங்கமாம வ: |
யஸ்ய க்ஷயாய ஜிந்வத |
ஆபோ ஜநயதா ச |

திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்
துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

குறிப்பு: திருத்துழாய் எல்லா நாட்களிலும் பறிக்கக் கூடாது – சில கட்டுப்பாடுகள் உள்ளன.

பொதுத் தனியன்கள் (http://divyaprabandham.koyil.org/?page_id=11)

கோயிலாழ்வார் முன்பு வட்டில்கள் முதலியவை அடுக்கி வைக்கும் பொழுது சேவிக்கவேண்டும்.

 • மணவாளமாமுனிகள் தனியன் அழகிய மணவாளன் அருளிச் செய்தது

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

 • பொன்னடிக்கால் ஜீயர் தனியன் – தொட்டையங்கார் அப்பை அருளிச்செய்தது (வானமாமலை மடம் சிஷ்யர்களுக்கு)

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே

 • குருபரம்பரை தனியன் ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச் செய்தது

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம் |
அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

 • எம்பெருமானார் தனியன் ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச் செய்தது

யோ நித்யமச்யுதபதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

 • நம்மாழ்வார் தனியன் ஸ்ரீஆளவந்தார் அருளிச் செய்தது

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

 • நம்மாழ்வார் உடையவர் தனியன் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

குறிப்பு: இது முதல், திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் அவ்வபொழுது சேவிக்க நேரும். அநத்யயந காலத்தில், திவ்ய ப்ரபந்த பாசுரங்களுக்கு பதில் உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரங்களைச் சேவிக்கவும்.

ஸந்நிதி முன்பு விளக்கேற்றும்பொழுது சேவிக்கவ வேண்டிய பாசுரங்கள்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று (முதல் திருவந்தாதி 1)

அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா
நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் (இரண்டாம் திருவந்தாதி 1)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று (மூன்றாம் திருவந்தாதி 1)

கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ச்லோகங்கள்

ஸாஷ்டாங்கமாக சேவித்துப் பின்வரும் ச்லோகங்களைச் சொல்லவும்:

அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு || (ஸ்தோத்ர ரத்நம் 48)

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே || (ஸ்தோத்ர ரத்நம் 22)

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)

தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் |
ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜ
உத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா
 நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 16)

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 23)

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 24)

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே || (புராண ச்லோகம்)

மூன்று முறை கையைத்தட்டி ஓசை செய்து, கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கவும்

அங்கண்மா ஞாலத்து அரசர்
அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 22)

ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: || (புராண ச்லோகம்)

முந்தைய நாளில் சாற்றிய புஷ்பங்களை, இப்பாசுரத்தைச் சொல்லிக்கொண்டு களையவும்

உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (திருப்பல்லாண்டு 9)

மந்த்ராஸநம் செய்யவும்

ஸ்நாநாஸநம் செய்யவும் – புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம், பெரியாழ்வார் திருமொழி வெண்ணெயளைந்த குணுங்கு பதிகம் முதலியவைகளை கால அவகாசத்து ஏற்ப அநுஸந்திக்கவும்.

அலங்காராஸநம் ஆரம்பிக்கவும்.

முதலில் இந்த ச்லோகம்/பாஸுரம் சேவிக்கவும்.

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ச்ரியம் || (ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே (திருவாய்மொழி 4.3.2)

தூபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
தூபம் ஆக்ராபயாமி (ர்க் வேதம்)

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே (திருவாய்மொழி 1.6.1)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
பரிவதில் ஈசன்படியை பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று
உரிமையுடன் ஓதியருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு (திருவாய்மொழி நூற்றந்தாதி 6)

தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச || (மஹா நாராயண உபநிஷத்)

வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் (முன்பே உள்ளது)

மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பனிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும்
குடையேறத் தாம் குவித்துக் கொண்டு (நான்முகன் திருவந்தாதி 43)

மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.  (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள் கடலுள்,
என்றும் புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும் அணையாம் திருமார்க்கு அறவு (முதல் திருவந்தாதி 53)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பெயரிட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா (உபதேச ரத்தின மாலை 38)

கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி || (ஸ்தோத்ர ரத்நம் 31)

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா || (யதிராஜ விம்சதி 1)

அர்ச்சனை (திருத்துழாய் மற்றும் புஷ்பங்களைக் கொண்டு செய்யவும்):

ஓம் கேசவாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் வாமநாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஹ்ருஷீகேசாய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் தாமோதராய நம:

ஓம் ச்ரியை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் சந்த்ரஸோதர்யை நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் ஹரி வல்லபாயை நம:
ஓம் ஸார்ங்கிண்யை நம:
ஓம் தேவ தேவ்யை நம:
ஓம் லோகஸுந்தர்யை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

இதற்குப் பிறகு, பொதுத் தனியன்கள் தொடக்கமாக கால அவகாசத்துக்கு ஏற்றார்ப்போல் ஸேவாகாலம் (பாசுரங்கள்) சேவிக்கவும்.

போஜ்யாஸனம்
போகம் (உணவு) தயார் செய்து பெருமாள், தாயார்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசர்யார்களுக்குக் கண்டருளப் பண்ணவும்.

போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

சாற்றுமுறை சேவிக்கவும்:

 • எம்பெருமான்கள், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், எம்பெருமானார், மாமுனிகள் மற்றுமுண்டான ஆசார்யர்களின் மங்கள ச்லோகங்கள் சேவிக்கவும். மேலும் விவரங்கள்: https://guruparamparai.wordpress.com/mangala-slokams/
 • சாற்றுமுறை பாசுரங்கள் சேவிக்கவும்.
 • செய்ய தாமரைத்த் தாளிணை வாழியே… (மாமுனிகள் வாழி திருநாமம்) சேவிக்கவும்.
 • திருவிருந்த மலர்த் தாள்கள் வாழியே… (பொன்னடிக்கால் ஜீயர் வாழி திருநாமம்) சேவிக்கவும் – வானமமாலை மடம் சிஷ்யர்களுக்கு.
 • அந்த நாளில் திருநக்ஷத்திரம் கொண்டருளும் ஆழ்வார் ஆசார்யர்கள் வாழி திருநாமம் சேவிக்கவும். மேலும் விவரங்கள்: https://guruparamparai.wordpress.com/vazhi-thirunamams/

பர்யங்காஸனம்

இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்தித்துக் கொண்டு கோயிலாழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்):

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: || (முகுந்த மாலா)

ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:
உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம ||

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறிவெறி நாந்தக வாளே அழகிய ஸார்ங்கமே தண்டே
இரவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் (பெரியாழ்வார் திருமொழி 5.2.9)

பனிக் கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு
ஓடி வந்து என் மனக்கடலுள் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச்சுடரே தனி உலகே என்றென்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினயே (பெரியாழ்வார் திருமொழி 5.4.9)

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
அடியேன் வேங்கடேஷ் ராமானுஜ தாஸன்

மூலம்: விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் அருளிய ஜீயர் படி, காஞ்சீபுரம் ப்ர. ப. அண்ணங்கராசார்யர் ஸ்வாமியின் நித்யானுஷ்டான பத்ததி, http://ponnadi.blogspot.in/2012/07/srivaishnava-thiruvaaraadhanam.html

archived in https://srivaishnavagranthamstamil.wordpress.com/,

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) –http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – https://guruparamparai.wordpress.com
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org