Author Archives: sutharsansvpr

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 5

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

<< பகுதி – 4

निर्विकल्पकसविकल्पकभिन्नं प्रत्यक्षं द्विविधम्, अर्वाचीनमनर्वाचीनं चेति । अर्वाचीनं पुनर्द्विविधम्, इन्दिरियसापेक्षं तदनपेक्षं चेति । तदनपेक्षं द्विविधम् – स्वयंसिद्धंदिव्यं चेति । स्वयंसिद्धं-योगजन्यम्, दिव्यं भगवत्प्रसादजन्यम् अनर्वाचीनं तु, इन्द्रियानपेक्षं नित्यमुक्तेश्वरज्ञानम् । अनर्वाचीनं प्रसङ्गादुक्तम् । एव साक्षात्कारिप्रमाकरणं प्रत्यक्षमिति सिद्धम् ।

நிர்விகல்பகஸவிகல்பகபின்னம் ப்ரத்யக்ஷம் த்விவிதம், அர்வாசீனமநர்வாசீனம் சேதி | அர்வாசீனம் புனர்த்விவிதம், இந்திரியஸாபேக்ஷம் ததநபேக்ஷம் சேதி | ததநபேக்ஷம் த்விவிதம் – ஸ்வயம்ஸித்தம்திவ்யம் சேதி | ஸ்வயம்ஸித்தம்-யோகஜந்யம், திவ்யம் பகவத்ப்ரஸாதஜந்யம் அநர்வாசீனம் து, இந்த்ரியாநபேக்ஷம் நித்யமுக்தேஶ்வரஞானம் | அநர்வாசீனம் ப்ரஸங்காதுக்தம் | ஏவ ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷமிதி ஸித்தம் |

நிர்விகல்பகம், ஸ்விகல்பகம் என இரண்டு வகையான ப்ரத்யக்ஷமானது – (1) தாழ்ந்தது, (2) உயர்ந்தது என இரண்டு வகைப்படும்.

தாழ்ந்தது என்பது இந்த்ரியத்தைக் கொண்டு உண்டாவது, இந்த்ரியம் இல்லாமல் உண்டாவது என்று இருவகைப்படும். இந்த்ரியமில்லாமல் உண்டாவது என்பதும் தானே உண்டாவது (ஸ்வத ஸித்தம்), திவ்யம் (எம்பெருமானால் உண்டாவது) என்றும் இருவகைப்படும். தானே உண்டாவது – யோகத்தினால் உண்டாவது. திவ்யம் ஆவது எம்பெருமானின் அனுக்ரஹத்தினால் உண்டாவது.

 • யோகிகளின் ப்ரத்யக்ஷமாவது (ஸ்வத ஸித்தமாவது) – யோகாப்யாஸத்தாலோ, அல்லது தபஸினாலோ உண்டாகிறது. ஆகையினாலே இவர்களால் வேறு லோகத்தில் நடப்பவை ப்ரத்யக்ஷமாகப் பார்க்கப்படுகிறது.
 • திவ்யம் என்பது தேவனால் அளிக்கப்படுவது. தேவன் என்பது எம்பெருமானே. திவ் க்ரீடாதௌ என்கிற தாது ஸித்தமான அர்த்தம் எம்பெருமானையே குறிக்கும். இதுவே “மயர்வற மதிநலம் அருளுவது” (திருவாய் 1-1-1). பகவத் கீதையிலே இது தன்னையே दिव्यं ददामि ते चक्षुः [திவ்யம் ததாமி தே சக்ஷு:] (11-8) என்றருளினான்.
 • இங்கு ஸ்வாமி எம்பெருமானார் வ்யாக்யானம் – तव दिव्यम् – अप्राकृतं मद्दर्शनसाधनं चक्षुर्ददामि [தவ திவ்யம் – அப்ராக்ருதம் மத்தர்சனஸாதனம் சக்ஷுர்ததாமி] என்பது நினைக்கத்தக்கது.

அநர்வாசீநமாவது இந்த்ரியங்களின் உதவியில்லாமல் வரும் அறிவு. இது பகவானுக்கும், நித்யர்களுக்கும், முக்தர்களுக்கும் உள்ளது. இது ப்ரஸங்காத் சொல்லப்பட்டது.

 • உபநிஷதானது अपाणिपादो जवनो गृहीता पश्यत्यचक्षुः स श्रुणोत्यकर्णः [அபாநிபாதோ ஜவனோ க்ருஹீதா பச்யத்யசக்ஷு: ஸ ச்ருநோத்யகர்ண:] என்றது. அதாவது எம்பெருமானுக்கு ஒரு பொருளை எடுப்பதற்குக் கைகள் தேவையில்லை. கண்கள் பார்ப்பதற்கு அவசியமில்லை. அவனது திருவருளால், முக்தியடைந்தார்க்கும் இது கலங்காப்பெருநகரம் என்னும் பரமபதம் அடைந்தவுடன் இது ஸம்பவிக்கிறது.

 • ஸ்வாமி கூரத்தாழ்வான் தம்முடைய வரதராஜஸ்தவத்தில் 24-வது ஶ்லோகத்தில் இந்த விபூதியிலே பேரருளாளப் பெருமாளை இவ்விதம் அவனது திருவருளால் இந்த்ரியங்களின் அடைவுகெட அனுபவிக்க ஆசைப்பட்டதும் இந்த ரீதியிலே – முக்தி தசையில் அனுபவிக்கப் படுவதை இங்கு அனுபவிக்க ஆசைப்பட்டார்

ननु यथावस्थितव्यवहारानुगुणं ज्ञानं प्रमेति उक्तम् । एवं च स्मृतेरपि यथावस्थित व्यवहारानुगुणज्ञानत्वेन प्रामाण्यात् स्मृतेरपि प्रमाणत्वेन परिगणनात् त्रीण्येव प्रमाणानि इति कथं प्रतिपाद्यते इति चेत्; उच्यते – स्मृतेः प्रामाण्याङ्गीकारेSपि संस्कारसापेक्षत्वात्, तस्य प्रत्यक्षमूलत्वात् मूलभूतप्रत्यक्षेSन्तर्भावः इति न पृथक्प्रमाणत्वकल्पनम् । अतः त्रीण्येवेति सम्भवति ॥

நநு யதாவஸ்திதவ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமேதி உக்தம் | ஏவம் ச ஸ்ம்ருதேரபி யதாவஸ்தித வ்யவஹாராணுகுணஞாநத்வேன ப்ராமாண்யாத் ஸ்ம்ருதேரபி ப்ரமாணத்வேன பரிகணனாத் த்ரீந்யேவ ப்ரமாணானி இதி கதம் ப்ரதிபாத்யதே இதி சேத்; உச்யதே – ஸ்ம்ருதே: ப்ராமாண்யாங்கீகாரேSபி ஸம்ஸ்காரஸாபேக்ஷத்வாத், தஸ்ய ப்ரத்யக்ஷமூலத்வாத் மூலபூதப்ரத்யக்ஷேSந்தர்பாவ: இதி ந ப்ருதக்ப்ரமாணத்வகல்பனம் | அத: த்ரீண்யேவேதி ஸம்பவதி ||

இப்பொழுது ஸ்ம்ருதி என்பது தனி ப்ரமாணம் அல்லவா? என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு ஸ்ம்ருதி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஸ்ம்ருதியாவது ஒரு வஸ்துவை முன் அனுபவித்ததால் எழும் ஜ்ஞானம் ஆகும். அதாவது முன் அறிந்ததை மறுபடியும் நினைத்துக் கொள்வது.

இப்பொழுது மூலம் விளக்கப்படுகிறது. – ஒரு வஸ்துவை உள்ளது உள்ளபடி அறிவது ப்ரமா என்று சொல்லப்பட்டது. அப்படிக் கொண்டால் ஸ்ம்ருதியும் ஒரு ப்ரமாணமாகும். அப்படி இருக்கும் பொழுது, ப்ரமாணங்கள் மூன்று தான் என்று சொல்வது எப்படி என்று கேட்டால்?

பதில் சொல்கிறோம். ஸ்ம்ருதியை ப்ரமாணம் என்று அங்கீகரிப்பதற்குக் காரணம் ஸம்ஸ்காரம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் ப்ரத்யக்ஷத்தாலே உண்டாகிறது. எனவே ஸ்ம்ருதியை தனி ப்ரமாணமாகக் கொள்ள வேண்டியது இல்லை – அது ப்ரத்யக்ஷத்திலேயே அடங்கி விடுகிறது.

 • ஸம்ஸ்காரம் என்பது கீழே விளக்கப்படுகிறது.

स्मृतिर्नाम पूर्वानुभवजन्यसंस्कारमात्रजन्य ज्ञानम् । तत्र चोद्बुद्धः संस्कारो हेतुः । तदुद्बोधश्च “सदृशादृष्टचिन्ताद्याः” इत्युक्तप्रकारेण क्वचित् सदृशदर्शनात् भवति, क्वचित् अदृष्टात्, क्वचिच्चिन्तया । आदिशब्देन साहचर्यस्यापि ग्रहणात्तेनापि च भवति । सादृश्यजा यथा – देवदत्तयज्ञदत्तयोः सदृशयोर्देवदत्तदर्शन यज्ञदत्तस्मृतिः । द्वितीया यथा – यादृच्छिक कालान्तरानुभूत श्रीरङ्गादि दिव्यदेशस्मृतिः । तृतीया यथा चिन्त्यमाने श्रीवेङ्कटेशस्य कमनीयदिव्यमन्ङ्गलविग्रहस्मृतिः । चतुर्थी तु – सहचरितयोर्देवदत्तयज्ञदत्तयोर्मध्ये अन्यतरदर्शनेन तदन्यतरस्मृतिः । सम्यगनुभूतस्य सर्वस्य स्मृतिविषयत्वनियमः । क्वचित् कालदैर्ध्यात् व्याध्यादिना वा संस्कारस्य प्रमोषात् स्मृत्यभावः ।

ஸ்ம்ருதிர்நாம பூர்வானுபவஜன்யஸம்ஸ்காரமாத்ரஜன்ய ஞானம் | தத்ர சோத்புத்த: ஸம்ஸ்காரோ ஹேது: | ததுத்போதச்ச “ஸத்ருஷ-அத்ருஷ்ட – சிந்த்யாத்யா:” இத்யுக்தப்ரகாரேண க்வசித் ஸத்ருஷதர்ஷநாத் பவதி, க்வசித் அத்ருஷ்டாத், க்வசிச்சிந்தயா | ஆதிஶப்தேந ஸாஹசர்யஸ்யாபி க்ரஹநாத்தேனாபி ச பவதி | ஸாத்ருஶ்யஜா யதா – தேவதத்தயஞ்தத்தயோ: ஸத்ருஶயோர்தேவதத்ததர்ஷன யஞ்தத்தஸ்ம்ருதி: | த்விதீயா யதா – யாத்ருச்சிக காலான்தரானுபூத ஸ்ரீரங்காதி திவ்யதேஶஸ்ம்ருதி: | த்ருதீயா யதா சிந்த்யமானே ஸ்ரீவேங்கடேஸஸ்ய கமனீயதிவ்யமங்கலவிக்ரஹஸ்ம்ருதி: | சதுர்தீ து – ஸஹசரிதயோர்தேவதத்தயஞதத்தயோர்மத்யே அந்யதரதர்ஷநேன ததந்யதரஸ்ம்ருதி: | ஸம்யகனுபூதஸ்ய ஸர்வஸ்ய ஸ்ம்ருதிவிஷயத்வநியம: | க்வசித் காலதைர்த்யாத் வ்யாத்யாதினா வா ஸம்ஸ்காரஸ்ய ப்ரமோஷாத் ஸ்ம்ருத்யபாவ: |

ஸ்ம்ருதி என்பது முன் அநுபவத்தினால் உண்டான ஸம்ஸ்காரத்தினால் மட்டும் உண்டாகும் ஜ்ஞானம். இதற்கு ஸம்ஸ்காரம் தான் முக்கிய காரணம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் வருவதற்கு காரணங்கள்

 1. ஒற்றுமை,
 2. அத்ருஷ்டம்,
 3. சிந்தை

சில சமயங்களில் முன்பு பார்க்கப்பட்ட வஸ்துவிற்கும், இப்பொழுது பார்க்கப்படுகிற வஸ்துவிற்கும் இருக்கும் ஒற்றுமையினாலும், சில சமயங்களில் அத்ருஷ்டத்தாலும், சில சமயங்களில் சிந்தையினாலும் உண்டாகிறது. “ஆதி” ஶப்தத்தால் ஸாஹசர்யம் சொல்லப்பட்டது. இவற்றுக்கு உதாரணங்கள்

(1) ஒருவருக்கொருவர் ஒப்பாக உள்ள தேவதத்த யஜ்ஞதத்தர்களுள் தேவதத்தனைப் பார்க்கும் பொழுது, வரும் யஜ்ஞதத்தனின் நினைவு.

(2) யாத்ருச்சிகமாக வேறு காலத்தில் அநுபவித்த ஸ்ரீரங்கம் முதலான திவ்யதேஶங்களின் நினைவு,

(3) சிந்திக்கும் பொழுது தோற்றும் ஸ்ரீவேங்கடேசனுடைய ரம்யமான திருமேனியின் நினைவு.

(4) எப்பொழுதும் சேர்ந்தே பார்க்கப்பட்ட தேவதத்தன், யஜ்ஞதத்தன் ஆகியவர்களில், தேவதத்தனைப் பார்க்கும் பொழுது வரும் யஜ்ஞதத்தனின் நினைவு. இதற்கும் (1) வித்யாஸம் உள்ளது. முதலாவது ஆகார ஒற்றுமை (உருவ ஒற்றுமை) யினால் உணர்த்தப்படுவது. இங்கு யானையையும் அதன் பாகனையும் சேர்த்தே பார்த்த ஒருவனுக்கு, யானையைக் கண்டவுடன் வரும் பாகனின் நினைவு.

நன்றாய் அநுபவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு வராமல் இருக்காது. ஆனால் நீண்ட காலமாவதாலும், வ்யாதி முதலியவைகளாலும் ஸம்ஸ்காரம் மழுங்கிப் போவதால் நினைவுக்கு வருவதில்லை.

यथा स्मृतेः प्रत्यक्षेSन्तर्भावः एवं “सोSयं देवदत्तः ” इति प्रत्यभिज्ञाया अपि प्रत्यक्षेSन्तर्भावः ॥

யதா ஸ்ம்ருதே: ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ஏவம் “ஸோSயம் தேவதத்த: ” இதி ப்ரத்யபிஜ்ஞா அபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ||

எப்படி ஸ்ம்ருதியானது ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறதோ, அப்படியே “இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன், முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தன் தான்” என்னும் ப்ரத்யபிஜ்ஞாவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது.

 • இந்த ப்ரத்யபிஜ்ஞா என்பது நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானம், ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. எல்லாவற்றிற்கும் ஆகாரம் பொதுவானது என்றறிவது ஸவிகல்பக ஞானம். ஸ்ம்ருதியின் ஸம்ஸ்கார காரணங்கள் (நான்கு) கீழே விளக்கப்பட்டன. ப்ரத்யபிஜ்ஞா என்பது முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தனே, இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன் என்னும் ஞானம்.

अस्मन्मते अभावस्य भावन्तर रूपत्वात्तस्यापि प्रत्यक्षेSन्तर्भावः । घटप्रागभावो नाम मृदेव । घटध्वंसश्च कपालमेव । प्रायः पुरुषेणानेन भवितव्यमित्येतत् ऊहः । संशय उक्तः ॥ तयोरपि प्रत्यक्षे अन्तर्भावः । पुण्यपुरुषनिष्ठा प्रतिभापि प्रत्यक्षेSन्तर्गता ॥

அஸ்மந்மதே அபாவஸ்ய பாவந்தர ரூபத்வாத்தஸ்யாபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: | கடப்ராகபாவோ நாம ம்ருதேவ | கடத்வம்ஸச்ச கபாலமேவ | ப்ராய: புருஷேநாநெண பவிதவ்யமித்யேதத் ஊஹ: | ஸம்ஸய உக்த: || தயோரபி ப்ரத்யக்ஷே அந்தர்பாவ: | புண்யபுருஷநிஷ்டா ப்ரதிபாபி ப்ரத்யக்ஷேSந்தர்கதா ||

பரம வைதிக மதமான எம்பெருமானார் தரிசனத்தில், அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தமாகக் கொள்ளப்படவில்லை. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. வைசேஷிகர்களான தார்க்கிகர்கள் அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தம் என்றும், அது ப்ராகபாவம் (இல்லாமை), ப்ரத்வம்ஸாவாம் (த்வம்ஸமாகை) என்றும் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு குடம் செய்வதன் முன்பு அது காணப்படாது – அது ப்ராகபாவம்; அது உருவாகி உடைந்த பின்பும் அது காணப்படாது – அது ப்ரத்வம்ஸாவாம் என்கிறார்கள்.

இது கல்பிப்பதே – ப்ராகபாவம் – மண்கட்டி (குடம் ஆவதன் முன்); ப்ரத்வம்ஸாவாம் – கபாலங்கள்.

அதே போன்று ஊஹமும் (ஒரு வஸ்துவில் கால்/கை அசைவதால் அவன் மனிதனே என்பது) ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ஸம்ஸயம் என்பது கீழே விளக்கப்பட்டது. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது.

புண்ணியம் புரிந்த ஒரு புருஷனிடத்தில் இருக்கிற ப்ரதிபையும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ப்ரதிபையாவது ஒரு மலை, நதி ஆகியவைகளைக் கண்டால் மேன்மேலும் அதைப் பற்றித் தோன்றும் ஞானம்.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 4

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

<< பகுதி – 3

तानि प्रमाणानि प्रत्यक्षानुमानशब्दाख्यानि त्रीण्येव । तत्र साक्षात्कारिप्रमाकरणं प्रत्यक्षम् । अनुमानादिव्यावृत्त्यर्थं साक्षात्कारिति । दुष्टेन्द्रियव्यावृत्त्यर्थं प्रमेति ।

தானி ப்ரமாணானி ப்ரத்யக்ஷானுமானஶப்தாக்யானி த்ரீண்யேவ | தத்ர ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷம் | அனுமானாதிவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸாக்ஷாத்காரிதி | துஷ்டேந்த்ரியவ்யாவ்ருத்த்யர்த்தம் ப்ரமேதி |

இப்படி விளக்கப்பட்ட ப்ரமாணமானது மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – அவை (1) ப்ரத்யக்ஷம், (2) அநுமானம், (3) ஶப்தம். அவைகளில் நேராய் (ஸாக்ஷத்தாய்) வஸ்துவை அறிவதற்குக் காரணமாயிருப்பது ப்ரத்யக்ஷமாகும். ஸாக்ஷாத்காரி என்னும் சொல்லினால் அநுமானம், ஶப்தம் ஆகிய ப்ரமாணங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தோஷமுள்ள இந்த்ரியங்களால் வருவதை ப்ரமாணம் என்று கொள்ளாமல் இருக்க லக்ஷணத்தில், ப்ரமை எனும் சொல் சேர்ந்திருக்கிறது.

 • அநுமானம், ஶப்தம் ஆகியவற்றின் விளக்கம், லக்ஷணம் ஆகியவை மேலே அவதாரங்களில் வரப் போகின்றன. இப்போதைக்கு ஸாக்ஷத்தாய் (நேராய்) வஸ்துவை அறிவது ப்ரத்யக்ஷத்தால் என்று கொள்வது.
 • துஷ்ட இந்த்ரியத்திற்கு எடுத்துக்காட்டு காமாலை நோய் வந்தவனின் கண்கள். அதைக் கொண்டு பார்த்தால் வெண்சங்கும் மஞ்சளாகத் தெரியும். அதனை ப்ரமை விலக்குகிறது.
 • ப்ரமையின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டது.

तच्च प्रत्यक्षं द्विविधम् – सविकल्पकनिर्विकल्पकभेदात् । निर्विकल्पकं नाम गुणसंस्थानादिविशिष्टप्रथमपिण्डग्रहणम् । सविकल्पकं तु सप्रत्यवर्शं गुन्णसंस्थानादिविशिष्टद्वितीयादिपिण्डग्रहणम् । उभयमप्येतत् विशिष्टविषयमेव । अविशिष्टग्राहिणः ज्ञानस्यानुपलम्भात् अनुपपत्तेश्च ।

தச்ச ப்ரத்யக்ஷம் த்விவிதம் – ஸவிகல்பகநிர்விகல்பகபேதாத் | நிர்விகல்பகம் நாம குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டப்ரதமபிண்டக்ரஹணம் | ஸவிகல்பகம் து ஸப்ரத்யவர்ஷம் குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டத்விதீயாதிபிண்டக்ரஹணம் | உபயமப்யேதத் விஶிஷ்டவிஷயமேவ | அவிஶிஷ்டக்ராஹிண: ஞானஸ்யானுபலம்பாத் அனுபபத்தேச்ச |

இந்த ப்ரத்யக்ஷ ஞானமானது இரண்டு வகை.

 1. நிர்விகல்பகம்
 2. ஸவிகல்பகம்.

நிர்விகல்பகமாவது ஒரு வஸ்துவை முதன் முதலில் அறிவது. அப்போதும் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம். ஸவிகல்பகமாவது அதே வகுப்பைச் சேர்ந்த வஸ்துவை பின்னர் அறியும் பொழுது உண்டாகும் ஞானமாகும். இப்போதும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  இப்படி இரண்டாவதாக அறிவதினால் (ஸவிகல்பக ஞானத்தால்) முதலில் அறியப்பட்ட வஸ்து நினைவில் வந்து, சில அமைப்புக்கள் இந்த வஸ்துவின் வகுப்பிற்கே பொது என்னும் ஞானம் உண்டாகிறது.

உதாரணமாக முதன் முதலில் ஒரு பசுமாட்டைப் பார்க்கிறோம். அப்போது நமக்கு பசுவின் ஸம்ஸ்தானம் – அமைப்புகள், தெரிந்து அவற்றைக் க்ரஹித்துக் கொள்கிறோம். இப்பொழுது எல்லாப் பசுக்களுக்கும் இந்த அமைப்புக்கள் இருக்கும் என்பதை அறியமாட்டோம். இது நிர்விகல்பகம் ஆகும்.

பின்பு சிறிது காலம் கழித்து வேறு ஒரு பசுமாட்டைப் பார்க்கும் பொழுது, கோத்வம் முதலிய விசேஷணங்கள் மற்றும் ஸம்ஸ்தானங்கள் பசு வகுப்பிற்கே பொதுவானவைகள் என்று அறிந்து கொள்கிறோம்.

இவ்விருவகையிலும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  விசேஷணங்கள் இல்லாமல் வஸ்துவின் ஞானம் மட்டும் உண்டாகாது. விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது.

 • இது தன்னை (விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது) பாஷ்யகாரர் केनचिद्विशेषेण इदमित्थमिति हि सर्वा प्रतीतिरूपजायते  [கேனசித்விசேஷேண இதமித்தமிதி ஹி ஸர்வா ப்ரதீதிரூபஜாயதே] (ஸ்ரீ பாஷ்யம் 1-1-1) என்றருளிச்செய்தார். அதாவது எல்லா ஜ்ஞாநமும், ஏதாவது விசேஷத்தையிட்டு ‘இது இப்படியானது’ என்றுதானே உண்டாகிறது.
 • அத்வைதிகள், நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்கிறார்கள். நிர்விகல்பகம் என்பதை விகல்பம் அற்றது என்று கொண்டு, ப்ரஹ்மம் ஒன்றே இருக்கிறது. வேறு இல்லை அது தன்னைக் க்ரஹிக்கிறோம் என்கிறார்கள்.
 • विवितान् कल्प्यन्ते इति विकल्पकः – பலவாகக் கல்பிக்கப்படுவது
 • இது கிடையாது, நிர்விகல்பகம் என்றால் ஏதாவது விசேஷணங்களை விட்டுவிட்டு க்ரஹிப்பதே அன்றி, விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது அன்று. ஒருவனை நிர்தனன்/தரித்ரன் என்று சொன்னால் மிகவும் குறைவாக பணம் உள்ளவன் என்று ஆகுமே அன்றி, பணமே இல்லாதவன் என்று ஆகாது.
 • வைசேஷிகர்களும் நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது, ஸவிகல்பகமாவது – விசேஷணம், விசேஷ்யம், அவைகளின் ஸம்பந்தம் ஆகிய மூன்றும் தோன்றும் ஜ்ஞாநம் என்கிறார்கள்.
 • இதற்கு உதாரணமாகக் குழந்தைகள் இப்படித் தான் க்ரஹிப்பார்கள் என்கிறார்கள்.
 • ஆனல் அதுவும் சரியன்று, பாலர்களும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள். ஒரு குழந்தை விளையாடும் பொம்மையை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைக் கொடுத்தால் அது ஏற்பதில்லை. எனவே குழந்தைகளும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள்.

ग्रहणप्रकारस्तु – आत्मा मनसा संयुज्यते । मन इन्द्रियेण, इन्द्रियमर्थेन । इन्द्रियाणां प्राप्यकारित्वनियमात् । अतः घटादिरूपार्थस्य चक्षुरुपेन्द्रियस्य च सन्निकर्षे सति अयं घटः इदि चाक्षुषज्ञानं जायते । एवं स्पार्शन प्रत्यक्षादयोपि । द्रव्यग्रहणे संयोगः सम्बन्धः । द्रव्यगतरूपादिग्रहणे समवायानङ्गीकाराति संयुक्ताश्रयणं सम्बन्धः ॥

க்ரஹணப்ரகாரஸ்து – ஆத்மா மனஸா ஸம்யுஜ்யதே | மன இந்த்ரியேந, இந்த்ரியமர்தேந | இந்த்ரியாணாம் ப்ராப்யகாரித்வநியமாத் | அத: கடாதிரூபார்தஸ்ய சக்ஷுரூபேந்த்ரியஸ்ய ச ஸன்னிகர்ஷே ஸதி அயம் கட: இதி சாக்ஷுஷஞானம் ஜாயதே | ஏவம் ஸ்பார்சந ப்ரத்யக்ஷாதயோபி | த்ரவ்யக்ரஹணே ஸம்யோக: ஸம்பந்த: | த்ரவ்யகதரூபாதிக்ரஹணே ஸமவாயானங்கீகாராதி ஸம்யுக்தாஶ்ரயணம் ஸம்பந்த: ||

ப்ரத்யக்ஷ ஜ்ஞாநமாவது கண் முதலான இந்த்ரியங்களால் உண்டாவது என்று விளக்கப்பட்டது. இப்பொழுது அவை க்ரஹிப்படும் ப்ரகாரம் விளக்கப்படுகிறது. முதலில் ஆத்மா மனதோடு சேருகிறது, மனம் இந்த்ரியத்தோடு சேருகிறது, இந்த்ரியம் கடம் முதலான வஸ்துக்களோடு சேருகிறது. இப்படி ஐந்து விதமான ப்ரத்யக்ஷ ஜ்ஞாநங்கள் உண்டாகின்றன, கண், மெய், நாக்கு, செவி, மூக்கு என்ற ஐந்து இந்த்ரியங்கள் வாயிலாக அவை உண்டாகின்றன.

 • இதனால் தான் மனம் ஒன்றாவிட்டால் இந்த்ரியங்கள் அதன் வேலையைச் செய்தாலும் நம்மால் க்ரஹிக்க இயலவில்லை. இதனை அனுபவத்திலேயே உணரலாம். நாம் மனம் செலுத்தாவிட்டால், எதிரில் நடந்து வரும் நமக்குத் தெரிந்த நபரையே அறியாமல் சென்று விடுவோம்.

இப்படி ஒரு த்ரவ்யத்தை அறியும் பொழுது அதற்கும் இந்த்ரியத்திற்கும் ஸம்பந்தம் ஸம்யோகம். அந்த த்ரவ்யத்தை ஆச்ரயித்திருக்கும் ரூபம் முதலான குணங்கள் அறியும் பொழுது அந்த ஸம்பந்தம் – ஸம்யுக்தாஶ்ரயணம்.

வைசேஷிகர்கள் ரூபம் முதலான குணங்கள் ஸமவாயம் என்பதினால் சேர்ந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். எம்பெருமானார் தரிசனத்தில் ஸமவாயம் அங்கீகரிக்கப் படவில்லையாதலால், அது ஸம்யுக்தாஶ்ரயணம் ஆகிறது.

 • ஸமவாயம் என்பது ஒரு ஸம்பந்தம் – அதை ஒரு பொருளானது, அதன் ஆதாரத்தை விட்டுப் பிரியாமல் இருந்தால் அந்த தொடர்பு ஸமவாயம் என்பது வைசேஷிகர்களின் கொள்கை. இதிலுள்ள குறைகள்/தோஷங்கள் ஸ்ரீ பாஷ்யத்தில் மஹத்தீகாதிகரணத்தில் காட்டப்பட்டுள்ளது.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

<< பகுதி – 2

Image may contain: 1 person, smiling, text that says "VARAVARAMUNI"

एवमुद्देशक्रमेण परीक्षा क्रियते ।

ஏவமுத்தேச க்ரமேந பரீக்ஷா க்ரியதே |

இனி நிர்ணயித்த க்ரமத்திலேயே வஸ்துக்களைப் பற்றின லக்ஷணம் உரைக்கப்பட்டு அவை பரீக்ஷிக்கப் படுகின்றன. சாஸ்த்ர க்ரந்த விசாரங்கள் இந்த ரீதியிலே அமையும். முதலில் வஸ்துக்களை வரிசைப்படுத்தி, பின்பு அவற்றின் லக்ஷணமுரைத்து, அந்த லக்ஷணங்களை ஆராய்வது இந்த ரீதியிலேயே இருக்கும்.

 • இது தன்னை பெரிய ஜீயரும் தத்வத்ரய வ்யாக்யானத்தில் “உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்று மூன்று வகைப்பட்டிறே தத்வ நிர்ணயக்ரமம் இருப்பது” என்றருளிச் செய்தார்

तत्र प्रमाकरणं प्रमाणम् । प्रमाणं लक्ष्यम् । प्रमाकरणत्वं लक्षणम् । यथावस्थितव्यवहारानुगुणम् ज्ञानं प्रमा ॥ प्रमा लक्ष्यम् । यथावस्थितव्यवहारानुगुण ज्ञानत्वं लक्षणम् । ज्ञानं प्रमेत्युक्ते शुक्तिकायाम् ‘ इदं रजतम्’ इति ज्ञानेSतिव्याप्तिः । अत उक्तं व्यवहारानुगुणं ज्ञानमिति । एवमपि तत्रैवातिव्याप्तिः, भ्रान्तिदशायामिदं रजतमिति व्यवह्रियमाणत्वात् । अत उक्तं यथाडस्थितेति ।

தத்ர ப்ரமாகரணம் ப்ரமாணம் | ப்ரமாணம் லக்ஷ்யம் | ப்ரமாகரணம் லக்ஷணம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமா || ப்ரமா லக்ஷ்யம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுண ஞானத்வம் லக்ஷணம் | ஞானம் ப்ரமேத்யுக்தே ஶுத்திகாயாம் “இதம் ரஜதம்” இதி ஞானேSதிவ்யாப்தி: | அத உக்தம் வ்யவஹாரானுகுணம் ஞானமிதி | ஏவமபி தத்ரைவாதிவ்யாப்தி: ப்ராந்தி தஶாயாமிதம் ரஜதமிதி வ்யவஹ்ரியமாணத்வாத் | அத உக்தம் யதாவஸ்திதேதி |

ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு லக்ஷணம் – லக்ஷ்யம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது அவ்வஸ்துவின் லக்ஷணமாகும். அந்த லக்ஷணத்தால் அறிந்துகொள்வது லக்ஷ்யமாகும். இனி ப்ரமாணம் லக்ஷ்யமாமிடத்தில் – ப்ரமாகரணம் அதன் லக்ஷணம் ஆகும். அதாவது ப்ரமைக்கு கரணமாயிருப்பது. ப்ரமா லக்ஷ்யமாமிடத்தில் – ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்குக் (வ்யவஹரிப்பதற்கு) காரணமான அறிவு (அ) ஞானம் என்பது அதன் லக்ஷணம் ஆகும்.  ப்ரமைக்கு ஏன் ஞானம் என்று லக்ஷணம் உரைக்ககூடாது என்னில் – அப்படிக் கொண்டால் சுத்தி என்று சொல்லப்படும் முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுவதும் ப்ரமை என்றாகிவிடும். இது அதிவ்யாப்தி எனும் தோஷமாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே ப்ரமைக்கு ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்கு (வ்யவஹரிப்பதற்க்கு) காரணமான அறிவு என்று லக்ஷணம் உரைக்கப்பட்டது.

 • லக்ஷணம், அதிவ்யாப்தி, முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுகிற ஞானம் இவை அனைத்தும் மேலே விளக்கப்படவுள்ளன.

यथावस्थितपदेन संशयान्यथाज्ञानव्यावृत्तिः । धर्मिग्रहणे मिथो विरुध्दानेकविशेष स्फुरण संशयः । यथा ऊर्ध्वताविशिष्टे स्थाणुर्वा पुरुषो वेति ज्ञानम् । अन्यथाज्ञानम् नाम धर्मविपर्यासः । यथा, कर्तृत्वेन भासमाने आत्मनि कुयुक्तिभिः कर्तृत्वस्य भ्रान्तत्वोपपादनम् । विपरीतज्ञानम् नाम धर्मविपर्यासः । यथा वस्तुनो वस्त्वन्तर ज्ञानम् ।

யதாவஸ்தித பதேன ஸம்சய அந்யதா விபரீத ஞான வ்யாவ்ருத்தி: | தர்மிக்ரஹணே மிதோ விருத்த அநேக விசேஷ ஸ்புரண ஸம்சய: | யதா ஊர்த்வதாவிசிஷ்டே ஸ்தாணூர்வா புருஷோ வேதி ஞானம் | அந்யதாஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா கர்த்ருத்வேன பாஸமானே ஆத்மநி குயுத்பி: கர்த்ருத்வஸ்ய ப்ராந்தத்வோபபாதனம் | விபரீத ஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா வஸ்துனோ வஸ்த்வநந்தர ஞானம் |

உள்ளதை உள்ளபடி வழங்குதல் என்றதினால் ஸம்சய ஞானம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் ஆகியவைகள் தள்ளப்பட்டன.

ஸம்சயம் என்றால் என் என்னில் – தர்மியை (தர்மி – பூ; தர்மம் – அதனுடைய  மணம்/நிறம்) க்ரஹிக்கும் பொழுது ஒரே சமயத்தில் விருத்தமான (ஒன்றுக்கொன்று விரோதமான) பல தர்மங்கள் (விசேஷணங்கள்) தோன்றுவது ஸம்சயம் ஆகும். உதாரணத்திற்கு நாம் இருட்டில் தூரத்தில் ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அது கை, கால்கள் கொண்ட மனிதன் போன்று தெரிகிறது. அதே சமயத்தில் அது கிளைகள் கொண்ட மரம் போன்றும் தோன்றுகிறது. இது தன்னையே ஸ்தாணுர் வா புருஷோ வ (மரமா அல்லது மனிதனா) என்று உரைப்பர்கள். ஒரே வஸ்துவினிடத்தில் மரத்தினுடைய விசேஷணங்களும், மனுஷ்யத்வமும் தோன்றுவதால் – இது ஸம்சயம் ஆகும்.

அந்யதா ஞானமாவது – தர்மியை க்ரஹிக்கும் விஷயத்தில் மாறாட்டம். ஒரு வஸ்துவினுடைய தர்மத்தை மாறாகக் க்ரஹிப்பது. கர்த்ருத்வம் எனப்படும் செயல்படும் தன்மையாவது ஆத்மாவின் (ஆத்மா – தர்மி; கர்த்ருத்வம் – தர்மம்) தர்மம் அன்று என்று தர்ம விஷயத்தில் மாறுபாடகக் கொள்வது அந்யதாஞானமாகும்.  இப்படி கர்த்ருத்வமாவது ஆத்மாவிற்கு கிடையாது என்று கொள்வது ஸாங்க்யர்கள் பக்ஷமாகும். அவர்கள் அதை ப்ரக்ருதிக்கேயுள்ளது என்கிறார்கள். அவர்களை நிரஸிக்கிறார். அப்படிக் கொண்டால் சேதனனைக் குறித்துக் கட்டளையிடும் வேத வாக்யங்கள் பயனற்றவையாகிவிடும்.

 • இதன் விரிவினை தத்வத்ரய சூர்ணிகைகள் 31, 32 மற்றும் ஸ்ரீமத் வரவரமுநிகளின் வ்யாக்யானம் கொண்டு மேலும் அறிந்து கொள்ளலாம்.

விபரீதஞானமாவது – தர்மியையே மாறாடி க்ரஹிக்கை. ஒரு வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது அந்த வஸ்துவையே தவறாகக் க்ரஹிக்கை. உதாரணமாக சுக்திகையை (சிப்பியை) ரஜதமென்று (வெள்ளியென்று) க்ரஹிக்கை, அல்லது தேஹத்தை ஆத்மா என்று கொள்ளுகை.

 • “அந்யதாஞானமாவது தேவதாந்தர சேஷமென்றிருக்கை. விபரீதஞானமாவது ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வபோக்யமாகவும் நினைத்திருக்கிற கேவலனைடைய ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் (1-1-1 மயர்வற),
 • “சேஷத்வஸயைவ ஆத்மந ஸ்வரூபநிரூபகத்வாத் ததவிஹாய ஸ்வதந்த்ரத்வேநாநுஸந்தாநம் தர்மிவிபர்யாஸ இத்யபிப்ராயேணாஹ, விபரீதஞானமாவது யத்வா நிரதிசய போக்யத்தை பராபிக்கவேணுமென்று அபேக்ஷித்து, அந்த போக்யந்தான் ஏதென்று நிரூபித்து போக்யந்தானே என்று நிச்சயிக்கையினாலே கேவலன் போக்யத்திலே ஸ்வபேதாத்யவஸாயம் பண்ணுகிறான் அது தர்மயாரோபரூப விபரீதஜ்ஞாநமென்று திருவுள்ளம்.” என்று அதன் அரும்பத ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது.
  • ஆத்மாவினுடைய தர்மமான பகவானுக்கு மட்டும் அடிமைப்பட்டு இருத்தல் என்பதை மாறாக தேவதாந்தரங்களுக்கு சேஷமாக நினைப்பதால் அது அந்யதாஞானம்.
  • கேவலனான கைவல்யார்த்தி பரம புருஷார்த்தத்தை நிச்சயிக்கும் பொழுது அதைத் தவறாக பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவிப்பதாகிற சிற்றின்பமாகக் நிச்சயிப்பதால் அது விபரீத ஞானமாகும்.
 • அந்யதாஞானம் மற்றும் விபரீத ஞானம் இரண்டையும் சேர்த்து விபர்யயம் என்று சொல்வதுண்டு.
 • “*துயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் *ஸ்தாணூர்வா புருஷோவா* என்கிறபடியே க்ராஹ்யவஸ்துவை இன்னதென்று நிச்சயிக்கமாட்டாத ஸம்சயமும், *மயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ரஜ்ஜூ சுக்த்யாதிவிஷய ஸர்ப்பரூப்யாதி புத்திபோலே அதஸ்மிந் தத்புத்தியகிற விபர்யமும்” – என்கிற ஸ்ரீமத்வரவரமுனிகளின் ஆசார்ய ஹ்ருதய (ஸூ – 98) வ்யாக்யான ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது

लक्षणस्य त्रीणि दूषणानि सन्ति, अव्याप्तिरतिओयाप्तिरसम्भवश्चेति । लक्ष्यैकदेशे लक्षणस्यावर्तनमव्याप्ति । लक्ष्यादन्यत्र वर्तमानत्वमतिव्याप्तिः। लक्ष्ये क्वाप्यवरतमनसम्भव । यथा जीवो गुनत्रयवश्य इत्युक्ते अव्याप्तिः, ज्ञानगुणक इत्य्क्ते अतिव्याप्तिः, चक्षुर्विषयो जीव इत्युक्तेSसम्भव एव । अत्रोक्तदूषणत्रयाभावात् प्रमाणलक्षणं सुस्थं ।

லக்ஷணஸ்ய த்ரீணி தூஷணாநி ஸந்தி, அவ்யாப்திரதிவ்யாப்திரஸம்பவம் | லக்ஷயைகதேசே லக்ஷணஸ்யாவர்தனமவ்யாப்தி | லக்ஷாயதந்யத்ர வர்த்தமானத்வமதிவ்யாப்தி: | லக்ஷ்யே க்வாப்யவரதமனஸம்பவ | யதா ஜீவோ குணத்ரயவச்ய இத்யுக்தே அவ்யாப்தி:, ஞாநகுணக இத்யுக்தே அதிவ்யாப்தி:, சக்ஷுர்விஷயோ ஜீவ இத்யுக்தேSஸம்பவ ஏவ | அத்ரோக்ததூஷணத்ரயாபாவாத் ப்ரமாண லக்ஷணம் ஸுஸ்தம் |

லக்ஷணம் என்றால் ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது என்று முன்பு உரைக்கப்பட்டது. ஒரு வஸ்துவிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது, அந்த லக்ஷணத்திற்கு மூன்று விதமான தூஷணங்கள் (குற்றங்கள்) ஸம்பவிக்கலாம். அவை அவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அஸம்பவம் ஆகும்.

உதாரணத்திற்கு பசு மாட்டிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது வெள்ளை நிறமுடையது பசுமாடு என்று லக்ஷணம் உரைத்தால், மற்ற நிறமுடைய பசுக்கள் விடுபடும். இது அவ்யாப்தியாகும்.

கொம்புடையது மாடு என்று கொண்டால், ஆட்டிற்கும் கொம்பு இருப்பதால் அது அதிவ்யாப்தி ஆகும். அந்த லக்ஷணம் ஆட்டையும் சேர்த்துக் கொள்ளும்.

Image result for goat

இரண்டு கால்கள் உள்ளது பசு மாடு என்றால், அது மாட்டையே குறிக்காததாகையால் அது அஸம்பவம் ஆகும்.

மூலத்தில் குறிப்பிட்டுள்ள உதாரணமாவது – ஜீவர்கள் முக்தர்கள், நித்யர்கள் மற்றும் பக்தர்கள் என் மூவகைப்படுவர்கள். ஜீவர்களுக்கு லக்ஷணம் சொல்லும் பொழுது – குணத்ரயவச்யர்கள் ஜீவர்கள் என்று கொண்டால் அது முக்தர்கள் மற்றும் நித்யர்களைக் குறிக்காது – ஆகையினால் அது அவ்யாப்தி ஆகும். ஞானத்தையுடையவன் என்று லக்ஷணம் சொன்னால் அது ஈச்வரனையும் குறிக்கும் ஆதலால், அது அதிவ்யாப்தி ஆகும். கண்ணால் பார்க்கப்படுபவன் ஜீவன் என்று சொன்னால் அது அஸம்பவம். ஒரு ஜீவனையும் கண்ணால் பார்க்க முடியாது.

 • இங்கு “இப்போது இவர்களுக்கு லக்ஷணம் – சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.” என்கிற தத்வத்ரய சூர்ணிகையும் (61),
  • “சேஷத்வமாத்ரத்தை சொல்லில் அசித்வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், ஜ்ஞாத்ருத்வமாத்ரத்தை சொல்லில் ஈச்வரவ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணம் என்கிறார்” என்கிற அதன் வ்யாக்யான ஸ்ரீஸுக்தியும் நினைக்கத்தக்கது.

இம்மூன்று தோஷங்களும் இல்லாதது லக்ஷணமாகும். ப்ரமைக்கு சொன்ன லக்ஷணமாவது இந்த மூன்று தோஷங்களும் இல்லாமல் உள்ளது.

साधकतमं करणम् । अतिशयित साधकं साधकतमं । यस्मिन् सत्यविलम्बेण ज्ञानमुत्पद्यते तदतिशयितमित्युच्यते ।

ஸாதகதமம் கரணம் | அதிசயித ஸாதகம் ஸாதகதமம் | யஸ்மிந் ஸத்யவிலம்பேந ஞானமுத்பத்யதே தததிசயிதமித்யுச்யதே |

கரணம் என்பது ஸாதகதமம் ஆகும். அதாவது மிகுந்த உபகாரத்தைச் செய்வது. இவ்விடத்தில் ப்ரமை உண்டாவதற்கு தாமதமில்லாமல் மிகுந்த உபகாரத்தைச் செய்வது என்று கொள்ளல் வேண்டும். அதாவது ப்ரமா எனப்படும் உள்ளதை உள்ளபடி வழங்குதல் எனும் ஞானம் விரைவாக உண்டாவதற்கு உபகாரத்தைச் செய்வது.

இத்தால், ப்ரமாணம் என்பதன் லக்ஷணத்தை (ப்ரமா கரணம்) விரிவாக அருளிச் செய்தாராயிற்று.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

<< பகுதி – 1

सर्वं पदार्थजातं प्रमाणप्रमेयभेदेन द्विधा भिन्नम् ॥ 4

ஸர்வம் பதார்த்தஜாதம் ப்ராமாணப்ரமேயபேதேன த்விதா பிந்நம் ॥ 4

இனி க்ரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் வஸ்துக்களின் பிரிவினைக் காட்டி விட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து விளக்க உள்ளார். அனைத்து வஸ்துக்களயும் ப்ரமாணம், ப்ரமேயம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

प्रमाणानि त्रीण्येव  । प्रमेयं द्विधम्, द्रव्याद्रव्यभेदात् ॥ 5

ப்ரமாணாணி த்ரீண்யேவ | ப்ரமேயம் த்விவிதம், த்ரவ்யத்ரவ்யபேதாத் ॥ 5

ப்ரமாணம் – உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது; ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது. ப்ரமாணங்கள் மொத்தம் மூன்று – 1) ப்ரத்யக்ஷம், 2) அனுமானம், 3) ஶப்தம். ப்ரமேயத்தை மொத்தம் இரண்டாகப் பிரிக்கலாம். 1) த்ரவ்யம் – மாறும் நிலைகளையுடைய பொருள்; 2) அத்ரவ்யம் – த்ரவ்யங்களின் நிறம், சுவை முதலிய தன்மைகள்.

 • அழகிய மணவாளச் சீயரும் தம்முடைய தத்வ நிரூபணத்தில் “இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும், அநுமாநத்தையும், ஆகமத்தையும் இம்மூன்றையும் வைதிகர் ப்ரமாணமாக பர்க்ரஹிக்கிறவளவிலே…” என்றருளிச் செய்தது இங்கு குறிக்கொள்ளத்தக்கது..
 • ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது என்று ஸாதாரணமாகச் சொன்னாலும், முமுக்ஷுக்களுக்கு சிதசித் விலக்ஷணான பரமாத்மாவே ப்ரமேயம் என்பது அறியத் தக்கது.
  • கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ – ஈடு ஸ்ரீ ஸூக்தி – இவ்விஷயத்தையொழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடலல்ல என்றிருக்கிறார். தத்ஜ்ஞாநமதோந்யதுக்தம் என்றானிறே. பகவல்லாபத்துக்குஉடலான ஜ்ஞாநம் ஜ்ஞாநமாகிறது; அல்லாதது அஜ்ஞாநமென்னக்கடவதிறே

1

द्रव्यं द्विधं, जडमजडं चेति ॥ 6

த்ரவ்யம் த்விவிதம் ஜடமஜடம் சேதி ॥ 6

த்ரவ்யத்தை ஜடம், அஜடம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஜடமாவது – வேறொரு ஜ்ஞானத்தால் மட்டுமே தோன்றக்கூடியது; அஜடமாவது – தானாகவே ப்ரகாஶிப்பது.

जडं च द्विविधं, प्रकृतिः कालश्चेति । प्रकृतिश्चतुर्विंशतितत्वात्मिका । कालस्तु उपाधिभेदेन त्रिविधः ॥7

ஜடம் ச த்விவிதம், ப்ரக்ருதி காலச்சேதி । ப்ரக்ருதிச்சதுர்விம்ஶதிதத்வாத்மிகா । காலஸ்து உபாதிபேதேந த்ரிவித: ॥7

ஜடத்தின் பிரிவுகள் இரண்டு – ப்ரக்ருதி மற்றும் காலம். ப்ரக்ருதி – 24 தத்வங்களாவது; சூரியனுடைய உபாதி பேதத்தால் காலம் மூன்று – 1) பூத (இறந்த காலம்), 2) பவிஷ்ய (வருங்காலம்); 3) வர்த்தமான (நிகழ் காலம்) காலங்கள்.

अजडं तु द्विविधम्, पराक् प्रत्यक्चेति । परागपि द्विविधा – नित्यविभूतिः,  धरमभूतज्ञानं चेति । प्रत्यगपि द्विडिधः – जीवेश्वरभेदात्॥ 8

அஜடம் து த்விவிதம், பராக் ப்ரத்யக் சேதி। பராகபி த்விவிதா-நித்யவிபூதி:, தர்மபூதஞானம் சேதி। ப்ரத்யகபி த்விவிதா: – ஜீவேஶ்வர பேதாத்॥ 8

2

அஜடம் இருவகைப்படும் – 1) ப்ரத்யக் மற்றும் 2) பராக். ப்ரத்யக் – தன்னைப் பற்றிய ஜ்ஞானம் தனக்கு வருமாறு உள்ள பொருள். பராக் – தன்னப் பற்றின ஜ்ஞானம் மற்றொன்றிற்கே வருமாறு உள்ள பொருள் (ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அஜடப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வரும்)

जीवः त्रिविधः बध्दमुक्तनित्यभेदात् ॥  9

ஜீவ: த்ரிவித: பத்தமுக்தநித்யபேதாத் ॥  9

ஜீவர்கள் மொத்தம் மூன்று வகை – பத்தர், முக்தர், நித்யர்.

பத்தர்க்கும் பரமபதத்திலிருக்கும் நித்யர்க்கும், முக்தர்க்கும் உள்ள படியினை ஸ்ரீ லோகதேசிகனான பிள்ளை லோகாசார்யர், அஷ்டாதச க்ரந்தங்களில் ஒன்றான அர்ச்சிராதியில் கீழ்க்கண்டவாறு அருளியுள்ளார்.

(அர்ச்சிராதி மூலம்) நித்யர் மற்றும் முக்தர், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப (திருவாய் 4-9-10) என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடைய அபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள்.  லீலாவிபூதியிலுள்ளார் அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய் “நம இத்யேவ வாதிந:” என்கிறதுக்கு எதிராக, “ந நமேயம்”, “ஈஶ்வரோஹம்” என்கிறபடியே, மனையடைவே, “யானேயென்றனதே” என்று,


ஒண்டொடியாள் அழகிய வளைகளை உடையவள்; கழலாத வளைகளை உடையவள் – அகலகில்லேன் இறையும் என இருப்பவளிறே; சங்கு தங்கு முன்கை நங்கையிறே; சீரார் வளை (திருப்பாவை – 6000 படி ஸ்ரீ ஸூக்தி) – வளைக்குச் சீர்மையாவது – கையில் நின்றும் கழலாதொழிகை. விஶ்லேஷவ்யஸநம் அநுபவியாத வளை. சங்குதங்குமுன்கை – ஒண்டொடியாள் திருமகள் திருமகளும் – பெரிய பிராட்டியாரும்; நீயுமே – எம்பெருமானுமே;  செங்கோல் – செம்மையான கோல்/ஆட்சி; ஏகாதபத்ரமாக – வேறு ஒருவனுடைய தலையீடு இல்லாமல்/ ஒரு குடைக்குக் கீழே; அபிமானம் – எம்பெருமானால் தன்னுடையவன் (மதீயர்கள்) என்று நினைக்கப்படுதல்;  சந்தாநுவர்த்திகளன்றிக்கே– எம்பெருமான் திருவுள்ளம் அறிந்து கைங்கர்யம் செய்பவர்களாய் இருக்கை தவிர்ந்து; ஸங்கல்பாநுவிதாயிகளாய் – ஸங்கல்பத்தைப் பின்செல்லுபவர்களாய்; நம இத்யேவ வாதிந:இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு வாயால் எப்போதும் நம: என்று சொல்லிக் கொண்டும் (நித்யர் மற்றும் முக்தர் படி); ந நமேயம் ஒருவனையும் வணங்கமாட்டேன் (இராவணன் சொன்னது); ஈஶ்வரோஹம் – நானே ஈஶ்வரன் [பகவத் கீதை]; (லீலாவிபூதியிலுள்ளார் படி);  மனையடைவே – ஸம்ஸாரம் முழுவதும்; யானேயென்றனதே – அஹம்/மம, நான்/எனது என்றிருக்கும் இருப்பு


(மூலம்) அவர்கள் “பணியா அமரர்” (திருவாய் 8-3-6) யிருக்கும் இருப்புக்கெதிராக “மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து” (திருவாய் 4-10-7)


பணியா அமரர் – ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்காதே;


(மூலம்) “மிக்கார் வேதவிமலர்” (திருவாய் 2-9-8) என்கிறபடியே, அவர்களைப்போலே “பெருமக்களாய்” (திருவாய் 3-7-4) இராதே “சிறியார் சிவப்பட்டார்” (நான். திரு 6) என்கிறபடியே சிறியாராய்


மிக்கார் – பகவதனுபவத்திலே எல்லாரைக் காட்டிலும் விசேஷமாண ஸ்வபாவம் உடையவர்களாய்; மலம் – அழுக்கு; விமலர் – தோஷமில்லாதவர்கள் வேதவிமலர் –  வேதத்திலே விமலராய் சொல்லப்பட்டவர்கள்; சிறியார் – அல்ப்பர், சிறியார் – ஸ்வத:ப்ரமாணமான வேதத்தை விட்டு ஆகமத்தைக் கொண்டவர்கள் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பர் என்னக்கடவதிறே.


(மூலம்)  “அயர்வறும் அமரர்கள்” (திருவாய் 1-1-1) என்கிறபடியே அவர்களைப்போலே திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே அறிவிலாமனிசராய் (திருமாலை 13), ஒளிக்கொண்டசோதிக்கெதிராக (திருவாய் 2-3-10) அழுக்குடம்பை (திருவிருத்தம் 1) பரிக்ரஹித்து,


அயர்வு – மறதி முதலானவைகள்; திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே – திவ்யமான ஜ்ஞானம் உடையவராய் இராதே; ஒளிக்கொண்டசோதி – ரஜோகுணம் தமோகுணம் கலசாதே ஸுத்தசத்வ திவ்ய மங்கள விக்ரஹம்;


(மூலம்)  விபந்யவ: விண்ணோர் பரவுந்தலைமகன் (திருவாய் 2-6-3) என்றதுக்கெதிராக உலகில் கண்டவா தொண்டரைப் பாடி (பெரிய திருமொ 1-1-7),


விபந்யவ: – விசேஷமாக எம்பெருமானைத் துதிப்பவர்கள்; விண்ணோர் பரவுந்தலைமகன்  – நித்ய ஸூரிகளால் துதிக்கப்படுபவன்; உலகில் கண்டவா தொண்டரைப் பாடி – கண்ட ஆ – தன்னை ஸ்தோத்திரம் பண்ண இச்சை உடையவர்களை பாடி, திருவாய்மொழி ஈட்டில் ஒரு அற்புதமான கதை த்ருஷ்டாந்தமாக இவ்வர்த்ததிற்கு எடுக்கப்பட்டுள்ளது இங்கு நோக்கத்தக்கது


(மூலம்) உனக்கே நாமாட்செய்வோம் (திருப்பாவை 29) என்கிறபடியே அவனுக்காட் செய்யாதே மாரனார் வரிவெஞ்சிலைக்காட்செய்து (பெரு திரு 3-3), தொண்டுபூண்டமுதமுண்ணாதே (திருமாலை 5) பாவையர் வாயமுதமுண்டு (பெரிய திருமொ 1-3-5),


உனக்கே நாமாட்செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாயிருக்கிற இருப்பைத் தவிர்ந்து “தனக்கேயாக” என்னுமாபோலே கொள்ளவேணும் (திருப்பாவை 6000படி ஸ்ரீ ஸுக்தி); மாறன் – மன்மதன்;


(மூலம்) ஸ ஏகதா பவதி என்கிறதுக்கெதிராக குலந்தானெத்தனையும் பிறந்து (பெரிய திருமொ 1-9-4), உருவார் சக்கரஞ்சங்கு சுமந்திங்கவனோடு ஒருபாடு உழலாதே (திருவாய் 8-3-7) ஆக்கையின் வழியுழன்று (திருவாய் 3-2-1),


ஸ ஏகதா பவதி – பரமபதம் செல்லும் முக்தாத்மா எம்பெருமான் ஸங்கல்பத்தாலே சரீரங்களை கொள்கிறான் – ஏனெனில் எம்பெருமானை ஒரு சரீரத்தால் அனுபவித்து முடிக்க முடியாமையாலே. பரமபதத்தில் இருப்பவர்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்காக சரீரம் கொள்கிறார்கள்; ஸம்ஸாரத்தில் உள்ளார் கர்மமடியாக பல சரீரங்களை எடுக்கிறார்கள் என்பது தாத்பர்யம்; உருவார் – அழகான; ஒருபாடு – ஒரு பக்கம்; அவனுடைய திருவாயுதங்களைச் சுமந்து கொண்டு அவனோடு போகாதே; ஆக்கை – உடம்பு; ஆக்கையின் வழியுழன்று  – சரீரத்தைக் கொடுத்து எம்பெருமானை அடை என்றால், சரீரம் செல்லும் வழி சென்று


(மூலம்) ஏதத் வ்ரதம் மம என்கிறவனுடைய வ்ரதத்துக்கெதிராக யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை (திருவிருத்தம் – 95) ஏறிட்டுக் கொண்டு, அவர்தருங் கலவியே கருதி ஓடினேன் (பெரிய திருமொ 1-1-1) என்கிறபடியே அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் (திரு நெடு – 6) எட்டாதபடி கைகழியவோடி, அற்பசாரங்களவை சுவைத்தகன்று (திருவாய் 3-2-6) போரக்கடவராயிருப்பர்கள்.


ஏதத் வ்ரதம் மம – ஒருக்காலே சரணம் அடைந்தார்க்கும் எல்லாராலும் வரக்கூடிய பயங்களைப் போக்குகிறேன் என்னும் பெருமாளின் வ்ரதம்; யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை – ஏதேனும் பற்றிக் கொண்டு நாம் எம்பெருமானை விட்டு நீங்கும் வ்ரதம்; ஏறிட்டுக் கொண்டு – இத்தால் இது (யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை) வந்தேறி என்றபடி – நானும் உனக்குப் பழவடியேன் என்பதே ஜீவாத்மாவின் உண்மையான நிலை; அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் – ஆச்ரிதர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் நிறுத்தாத நீண்ட நெடுங்கைகள்; எட்டாதபடி கைகழியவோடி – அதற்கும் தப்பி; அற்பசாரம் – சப்தாதி விஷயங்கள்


बध्दोSपि द्विविधः – बुभुक्षुमुमुक्षुभेदात् ॥ 10

பத்தோபி த்விவித: – புபுக்ஷுமுமுக்ஷுபேதாத்॥ 10

பத்தர் இருவகைப்படுவர் – புபுக்ஷு, முமுக்ஷு

बुभुक्षुSपि द्विविधः – अर्थकामपरो धर्मपरश्चेति । धर्मपरो द्विविधः- देवतान्तरपरो भगवत्परश्चेति॥11

புபுக்ஷுபி த்விவித: – அர்த்தகாமபரோ தர்மபரச்சேதி | தர்மபரோ த்விவித:- தேவதாந்தரபரோ பகவத்பரஶ்சேதி|| 11

புபுக்ஷுக்கள் இருவகை – அர்த்தபரர் மற்றும் தர்மபரர். தர்மபரர்கள் இருவகைப்படுவர் – தேவதாந்தரபரர் மற்றும் பகவத்பரர்கள்.

मुमुक्षुSपि द्विविधः – कैवल्यपरो मोक्षपरश्चेति । मोक्षपरो द्विविधः – भक्त: प्रपन्नश्चेति । प्रपन्नश्च द्विविधः – एकान्ती परमैकान्ती चेति । परमिकान्ती द्विविधः – दृप्तार्तभेदात् ॥12

முமுக்ஷுபி த்விவித: – கைவல்யபரோ மோக்ஷபரச்சேதி | மோக்ஷபரோ த்விவித: – பக்த: ப்ரபந்நச்சேதி | ப்ரபந்நச்ச த்விவித: – ஏகாந்தீ பரமைகாந்தி சேதி | பரமைகாந்தீ த்விவித: – த்ருப்தார்தபேதாத் ॥12

3

முமுக்ஷுக்கள் இரண்டு வகைப்படுவர் – கைவல்யபரர் மற்றும் மோக்ஷபரர்கள்; மோக்ஷபரர்கள் பக்தர்கள் மற்றும் ப்ரபந்நர்கள் என்று இரண்டு வகைப்படுவர்கள். ப்ரபந்நர்கள் மறுபடியும் ஏகாந்தீ, பரமைகாந்தீ என இரண்டு வகைப்படுவர்கள். பரமைகாந்தீ த்ருப்தன் ஆர்த்தன் என இரண்டு வகைப்படுவர்.

 • மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் முமுக்ஷுக்கள். மோக்ஷம் என்றால் பரமானந்தம் என்று நிகண்டு. அதாவது ப்ரஹ்மானுபவம்.
 • த்ருப்தன் – சரீரம் விடும்பொழுது மோக்ஷம் கிடைக்கட்டும் என ஆறி இருப்பவன்; ஆர்த்தன் – சரணாகதி செய்தயுடன் மோக்ஷம் வேண்டுபவன்

ईश्वरः पञ्चधा – परओव्यूहविभवान्तर्याम्यर्चावतारभेदात् । पर एकधा । व्यूहश्चतुर्धा – वासुदेवसङ्कर्षणप्रद्य्म्नानिरुद्ध्भेदात् । केशवादि व्यूहान्तरमत्रैवान्तर्भवति । मत्स्यादयो विभवाः पुनः अनन्ताः । अन्तर्यामि प्रतिशरीरमवस्थितः । अर्चावतारस्तु श्रीरङ्गवेङ्कटाद्रिहस्तिगिरियादवाद्रिघटिकाचलादिषु सकलमनुजनयनविषयताम् गतो मूर्तिविशेषः ॥ 23

ஈஶ்வர: பஞ்சதா – பரவ்யூஹவிபவாந்தர்யாம்யர்சாவதாரபேதாத் | பர ஏகதா | வ்யூஹச்சதுர்தா – வாஸுதேவஸங்கர்ஷணப்ரத்யும்னாநிருத்தபேதாத் | கேசவாதி வ்யூஹாந்தரமத்ரைவாந்தர்பவதி | மத்ஸ்யாதயோ விபவா: புந: அநந்தா: | அந்தர்யாமி ப்ரதிஶரீரமவஸ்தித: | அர்சாவதாரஸ்து ஸ்ரீரங்கவேங்கடாத்ரிஹஸ்திகிரியாதவாத்ரி கடிகாசலாதிஷு ஸகலமனுஜநயநவிஷயதாம் கதோ மூர்த்திவிசேஷ: || 23

4

ஈஶ்வரன் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து ப்ரகாரமாக இருக்கிறான். பரமபதநாதனான பகவான் ஸ்ரீமந் நாராயணன் என்கிற ரூபம் ஒன்றுதான். * ஆதியஞ்சோதிவுரு * . இவ்வுருவில் இருந்தே மற்ற ரூபங்கள் தோன்றுவதினால் பரம் என்னப்பட்டது. வ்யூஹ ருபங்கள் – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்று நான்கு. மத்ஸ்யம், கூர்மம் முதலான ரூபங்கள் விபவங்கள். அவை கணக்கற்றவை. அந்தர்யாமி நிலையாவது ஒவ்வொரு உடம்பிலும் அவர்கள் உபாஸிக்கும்படி அவர்கள் ஹ்ருதயத்தில், கட்டை விரல் அளவுள்ளதாய் இருக்கும் ரூபம். அர்ச்சாவதாரமாவது, ஸ்ரீரங்கம், திருவேங்கடம், முதலான திவ்யதேசங்களில் அனைவர் கண்களுக்கும் விஷயமாம்படி இருக்கும் நிலை.

 • தத்வத்ரயம் – 182, ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானம் இவ்வர்த்தம் அழகாக விளக்கப்பட்டுள்ளது காண்க.
 • விபவங்கள் அநந்தம் என்னுமிடம் தத்வத்ரயம் – 189வது சூர்ணிகையில் ” பரிகணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அநந்தமாய் ” என்ற வ்யாக்யான ஸ்ரீஸூக்திகொண்டு நோக்க வேண்டியது.
 • அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வெல்லும் அவன் இவன் என்று பரமபதத்தில் இருக்கும் பெருமானே அர்ச்சாவதாரமாக உள்ளான் என்று கொண்டு அர்ச்சாவதாரமே முக்கியமாகக் கொண்டனர் நம் ஆசார்யர்கள். மற்றைய நிலைகளைக் காட்டிலும் இதன் ஏற்றம் * தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்கும் இடத்திலே எல்லாம் பூர்ணம் * என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின் வ்யாக்யானத்தில் கண்டு கொள்வது.

இங்ஙனே த்ரவ்யம் பலவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,

 • சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டவன் என்பதினால் ஒன்று என்றும்,
 • ஆத்மா, அநாத்மா (ஆத்மா அல்லாதது – ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அனைத்தும்) என்ற பேதத்தால் இரண்டு என்றும்,
 • * போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா * என்ற ச்ருதியை அனுஸரித்து சித், அசித், ஈச்வரன் என மூன்றாகவும்,
  • இங்கு ” போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா என்று போக்த்ரு சப்தத்தாலும், போக்ய சப்தத்தாலும், ப்ரேரயித்ரு சப்தத்தாலும் சிதசிதீச்வர தத்வங்கள் மூன்றையுமிரே சொல்லுகிறது” என்னும் ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யான ஸ்ரீஸுக்தி ஸ்மரிக்கத்தக்கது.
 • ப்ரக்ருதி, காலம், நித்யவிபூதி, தர்மபூதஜ்ஞானம், ஜீவன், ஈச்வரன் என ஆறாகவும் கொள்ளலாம்.

अद्रव्यम् तु सत्वरजस्तमश्शब्दस्पर्शरुपरसगन्धसंयोगशक्तिभेदाद्दशधैव ॥ 24

அத்ரவ்யம் து ஸத்வரஜஸ்தமச்ஶப்தஸ்பர்சரூபரஸகந்தஸம்யோகஶக்திபேதாத்தசதைவ || 24

அத்ரவ்யம் ஶப்தம், ஸ்பர்ஶம், ரூபம், ரஸம், கந்தம், ஸத்வம், ரஜஸ், தமஸ், ஸம்யோகம், ஶக்தி என 10 பிரிவுகளைக் கொண்டது.

5

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

श्रीवेङ्कटेशम् करिशैलनाथम् श्रीदेवराजम् घटिकाद्रिसिम्हम् । कृष्णेन साकम् यतिराजमीडे स्वप्ने च दृष्टान् मम  देशिकेन्द्रान् ॥ 1

ஸ்ரீவேங்கடேசம் கரிசைலநாதம் ஸ்ரீ ஹேவராஜம் கடிகாத்ரிஸிம்ஹம் |
க்ருஷ்ணேந ஸாஹம் யதிராஜமீடே ஸ்வப்நேந த்ருஷ்டாந் மம தேசிகேந்த்ராந் || 1

ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யர் தாம் தொடங்கிய க்ரந்தம் நிர்விக்னமாக நிறைவு பெறுவதற்கும், பின்புள்ளார் அனுஸந்திப்பதற்கும் முதலில் இஷ்ட தேவதா நமஸ்காரமாக ச்லோகம் அருளிச்செய்கிறார்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனான ஸ்ரீநிவாஸனையும், ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் கச்சி தேவப்பெருமாளையும், கடிகாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரஸிம்ஹனான அக்காரக்கனியையும், கீதாசாரியனான கண்ணன் எம்பெருமானையும், ஸித்தாந்த ஸ்தாபகரான எம்பெருமானாரையும், ஸ்வப்னத்தில் ஸேவை ஸாதித்தருளிய மஹாசார்யரையும் அடியேன் வணங்குகிறேன்.

 • இந்த ஸ்வாமிக்கு அவர்தம் ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி ஸ்வப்னத்தில் ஸேவை ஸாத்திதருளி இக்க்ரந்தம் அருள நியமித்தார் என்பது ப்ரஸித்தம்.
 • ஸ்வாமி திருமலையில் நெடுநாட்கள் கைங்கர்யம் செய்ததால் முதலில் ஸ்ரீவேங்கடாசல நாயகனான ஸ்ரீநிவாஸன் என்று தொடங்கினார் என்னவுமாம்
 • ஸ்ரீநிவாஸன் எனத்தொடங்கி எம்பெருமானார் நடுவாக தமது ஆசார்யரான மஹாசர்யர் பர்யந்தமாக அருளியதால் இந்த ச்லோகம் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்…. அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் என்று குருபரம்பராநுஸந்தானமும் அருளிச் செய்தாராயிற்று.
  • தண்ணார் வேங்கடம் – குளிர்மிக்கு இருந்துள்ள திருமலை. ரக்ஷகனுக்கு ரக்ஷ்யவர்க்கம் பெறாமையால் வரும் தாபத்தையும், இங்குள்ளார்க்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் தீர்க்கவற்றாய் இருக்கை. (தி. வா. மொழி 1-8-3)
  • வட வேங்கடம் – உபயவிபூதிக்கும் நடுவான (திரு. நெடு – 16)
  • சீரார் திருவேங்கடமே – நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையாய் ஏற்றம் உண்டிறே திருமலைக்கு – சி. திரும
  • வேங்கடவன் – அர்ச்சாவதாரத்துக்குப் பொற்கால் பொலிய விட்ட இடம். (அமலனாதிபிரான் – 1 நாயனார் வ்யா) – இத்யாதி ஏற்றம் பெற்றதிறே திருமலை
 • कृष्णेन सह यतिराजम् (க்ருஷ்ணேந ஸஹ யதிராஜம்) என்பது இன்சுவை மிக்கது.
  • க்ருஷ்ணன் கீதாசாரியன், கீதை அருளியவன். ஸ்வாமி அதற்கு செம்மைப் பொருள் பாரினில் தெரிய வ்யாக்யானம் அருளியவர்.
  • அவன் பலராமானுஜன். இவர் இராமானுசர்.
  • அவன் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான். இவர் மேதினி (பூமி) நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்க (பூமாதேவி நல்லவர்களைத் தாங்குவது எளிது. தீயவர்களை சுமப்பது மிகவும் சுமையாகக் கருதுபவள். எம்பெருமானார் திருவவதரித்ததால் அனைவரும் திருந்தி விட்டதால் தம் சுமை நீங்கியது என ஆறி இருந்தாள். அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே – நாரணற்காயினரே) திருவவதரித்தார்.
  • க்ருஷ்ணனின் மாமாவான கம்ஸன் ஸாரதியாய் தேரோட்டினான்; க்ருஷ்ணனும் பார்த்தஸாரதியாய் தேரோட்டினான் – ஸ்வாமியின் மாதுலரான பெரிய திருமலை நம்பி திருவேங்கடமுடையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்தார் – ஸ்வாமியும் சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்தார்.
  • அவன் – கருந்தெய்வம், இருளன்ன மாமேனி கொண்டவன்; ஸ்வாமி – उद्यद्दिनेशनिभं उल्लसदूर्ध्व पुन्ण्ड्रम् रूपं तवास्तु यतिराज दॄशोर्ममाग्रे [உத்யத்திநேசநிபமுல்லஸதூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே] (உதிக்கும் ஸூரியனை ஒத்ததும் திருமண்காப்பு துலங்குவதுமான தேவரீர் திருமேனி) என்றபடி உதிக்கும் ஸூரியனை ஒத்த திருமேனியை உடையவர்

यतीश्वरम् प्रणम्याहम् वेदान्तार्यम् महागुरुम् । करोमि बालबोधार्थम् यतीन्द्रमतदीपिकाम् ॥ 2

யதீச்வரம் ப்ரண்ம்யாஹம் வேதாந்தார்யம் மஹாகுரும் |
கரோமி பாலபோதார்த்தம் யதீந்த்ரமத தீபிகாம் || 2

யதிகளுக்கெல்லாம் தலைவரான எம்பெருமானாரையும், வேதாந்தாசாரியரையும், தமது ஆசாரியரான மஹாசாரியரையும் வணங்கி, பாலர்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு  யதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தத்தை இயற்றுகிறேன்.

 • இதனால் இந்த க்ரந்தத்தில் அருளும் அர்த்தம் குருபரம்பராப்ராப்தமானது என்பதைக் காட்டியருளினாராயிற்று.
 • யதீந்த்ரர் என்றால் யதிகளுக்கு அரசர் என்றர்த்தம். இத்திருநாமம் கச்சி தேவப்பெருமாளால் ஸ்வாமிக்கு ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரிக்கும் பொழுது அனுக்ரஹிக்கப்பட்டது. பெரிய திருமொழித் தனியனிலும் எம்பெருமானாரை “தவராசா” என்றது காண்க.
 • பாலர்கள் என்றால் தத்வத்தை அறிந்து கொள்வதில் ஆசையுள்ளவர்கள் என்றபடி. மீமாம்ஸா பரிபாஷா முதலான க்ரந்தங்களிலும் பாலர்கள் என்பது இவ்வர்த்ததில் ப்ரயோகப்படுத்தியிருப்பது காண்க.

श्रीमन्नारयण एव चिदचिद्विशिष्टोSद्वैतम् तत्त्वम्, भक्तिप्रपत्तिभ्याम् प्रसन्न्स्स एवोपायः, अप्राकृतदेशविशिष्टस्स एव प्राप्यः इदि वेदान्तवाक्यैः प्रतिपादयताम् व्यासबोधयनगुहदेवभारुचिब्रह्मनन्दिद्रमिडाचार्य श्रीपराङ्कुशनाथयामुनमुनियतीश्वरप्रभृतीनाम् मतानुसारेण बालबोधनार्थम् वेदान्तानुसारिणी यतीन्द्रमतदीपिकाख्या शारीरकपरिभाषा महाचार्यकृपावलम्बिना मया यथामति सङ्ग्रहेण प्रकाश्यते ॥ 3 ॥

ஸ்ரீமந்நாராயண ஏவ சிதசித்விசிஷ்டாத்வைதம் தத்வம், பக்திப்ரபத்திப்யாம் ப்ரஸன்ன ஸ ஏவ உபாய: இதி வேதாந்தவாக்யை: ப்ரதிபாதயதாம் வ்யாஸ போதாயன குஹதேவ பாருசி ப்ரஹ்மநந்தி ட்ரமிடாசார்ய ஸ்ரீபராங்குச நாதயாமுனமுனி யதீச்வரப்ரப்ருதீநாம் மதாநுஸாரேண பாலபோதனார்த்தம் வேதாந்தாநுஸாரிணி யதீந்த்ரமததீபிகாக்யா சாரீரகபரிபாஷா மஹாசார்ய க்ருபாவலம்பினா மயா யதாமதி ஸங்க்ரஹேண ப்ரகாச்யதே || 3 ||

க்ரந்தத்தின் ஆதியில், மங்களாசாஸனம், நமஸ்காரக்ரியா ஆகியவை தவிர அக்க்ரந்தத்தில் தெரிவிக்கப்படும் விஷயத்தையும் அறிவிப்பது சாஸ்த்ரக்ரமம். ஆகையாலே முதலில் ஸித்தாந்தத்தை ஸங்க்ரஹிக்கிறார் – श्रीमन्नारयण एव – என்று.

அறிவுள்ள சேதனர் எனப்படும் சித், அறிவற்றவையான அசித் இவையிரண்டையும் தனக்கு, பிரிக்க முடியாத விசேஷணங்களாக, ப்ரகாரமாக உடையவனான பெரிய பிராட்டியாருடன் கூடியவனான நாராயணன் ஒருவனே தத்வம். இதனையே பரமாசாரியாரன ஸ்வாமி நம்பிள்ளை ஈட்டில் “நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று. அவையாவன – சித்தும், அசித்தும், ஈச்வரனும். ப்ரகார ப்ரகாரிகள் ஐக்யத்தாலே ஒன்றென்னலாய், ஸ்வரூப பேதத்தாலே பலவென்னலாயிருக்கும்.” என்றருளினார். ப்ரகாரம் என்றால் பிரிக்க முடியாத விசேஷணம் என்றபடி.  “குண்டலங்களை அணிந்த புருஷர் வருகிறார்” – என்ற வாக்கியத்தில் குண்டலங்கள் விசேஷணமாக இருந்தாலும் அதனை விசேஷ்யமான புருஷனிடமிருந்து பிரித்துவிடலாம். ஆனால் *அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்தித:* என்று உள்ளும் புறமும் ஒக்க வ்யாபித்திருக்கும் நாராயணனுக்கு, சித் அசித் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத விசேஷணங்களாகின்றன. எனவே அவை ப்ரகாரங்கள் ஆகின்றன. இதையே அப்ருதக்ஸித்த விசேஷணம் என்று அழைப்பர்.

இதனையே திருமழிசைப் பிரான் * உலகு நின்னொடொன்றி நிற்க * என்றார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையினுடைய வ்யாக்யானம்.” ஜகத்து உனக்கு சரீரமாகையாலே உன்னைப் பிரியாதே நிற்க ” அதாவது ப்ரபஞ்சம் முழுவதும் சரீரியான உன்னோடு சரீரமாய் அணைந்து நிற்க என்றபடி.

தானே எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்திருசுடருமாய இறை (சுடர் விடும் அக்னியும் பெரிய குலபர்வதங்களும் எட்டுத் திக்குக்களும் அண்டத்தினுள்ள சந்த்ர சூர்யர்களும் தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்) என்றார் மஹதாஹ்வயரான பேயாழ்வார். தானே என்ற ஏகாரத்தினால் இப்படி இருப்பவன் ஒருவனே – வேறுயவனுமில்லை என்றருளினாராயிற்று

ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:
வநாநி விஷ்ணுர் கிரயோ திசச்ச |
நத்ய: ஸமுத்ராச்ச ஸ ஏவ ஸர்வம்
யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய || (ஸ்ரீ வி.பு – 12-12-38)

ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே “அந்தணர் தலைவரே! (மைத்ரேயரே!) சோதிகளும் விஷ்ணுவே; உலகங்களும் விஷ்ணுவே; வானங்களும் விஷ்ணுவே; வனங்களும், மலைகளும், திசைகளும் , நதிகளும், ஸமுத்ரங்களும் விஷ்ணுவே; நிலையானதாகையால் உள்ளதெனப்படும் சேதனமும், நிலையற்றதாகையாலே இல்லதெனப்படும் அசேதனமும் ஆகிய எல்லாம் அவனே” என்று ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாய், தான் ப்ரகாரியாய், தன்க்கு ஒரு ப்ரகார்யந்தரமன்றிக்கே இருக்கக்கடவன் ஸர்வேஸ்வரன் என்பதனை அருளினார்.

द्वयोर्भावोद्विता – द्वित्वम् । द्वितैव द्वैतम् । नास्ति द्वैत यस्मिन्, तदद्वैतम् । चिदचितोर्पृथक्सिद्धविशेषणत्वेन ब्रह्मण्यण्तर्भुतत्वात् विशिष्टमेकमेव तत्वम् इत्यर्थः | (த்வயோர்பாவத் த்விதா – த்விதம்; த்விதைவ த்வைதம்; நாஸ்தி த்வைத யஸ்மின், ததத்வைதம்; சிதசிதோர்ப்ருதக்ஸித்தவிசேஷணத்வேந ப்ரஹ்மண்யண்தர்பூதத்வாத் விசிஷ்டம் ஏகமேவ தத்த்வம் இத்யர்த்த:) இரண்டாகப் பாவிப்பது த்விதம் – இரண்டு என்பது த்வைதம் – இரண்டாவது இல்லை என்பது அத்வைதம் – சித் அசித் ஆகியவற்றைத் தனக்கு சரீரமாகக் கொண்ட வஸ்துவான ப்ரஹ்மத்தைப் போன்று இரண்டாவது வஸ்து இல்லை என்பது விசிஷ்டாத்வைதம்.

இப்படி இருக்கும் பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனே பக்தி, ப்ரபத்தி எனும் இரண்டில் ஒன்றினால் அகமகிழ்ந்து, தானே உபாயமாகிறான். உபாயமாகிறான் என்றது மோக்ஷம் அளிக்கிறான் என்றபடி. இப்படி மோக்ஷம் அளிக்கும் வல்லமை ஸ்ரீமந்நாராயணனுக்கே உண்டு. ஆழ்வார் தாமும் எம்பெருமானுடைய பரத்வத்தை அறிவிக்க நாலு திருவாய்மொழிகளை அருளிச் செய்தார் (உயர், திண், அணை, ஒன்று என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் அவை காட்டப்பட்டுள்ளது காண்க). அவற்றுள் அணைவது அரவணை மேல் என்னும் திருவாய்மொழியில் மோக்ஷப்ரதத்வம் என்னும் குணத்தையே ஆழ்வார் காட்டியருளினார். ஸ்ரீமத் வரவரமுனிகளும் இத்திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி அருளிச்செய்யுமிடத்து, இது தன்னையே குணந்தனையே என்றருளினார்.

ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதான தேசவிஷேஷமான பரமபதத்தில் இருக்கும் அவ்வெம்பெருமானே மோக்ஷத்தில் அடையப் பெரும் பொருளாகிறான். இது அப்ராக்ருதம் என்றதினால், இந்த தேசம், அங்கு கிடைக்கும் பலன் ஆகியவை அழியாதது என்ற அர்த்தம் கிடைத்தாயிற்று. ப்ராக்ருதம் – ப்ரக்ருதி ஸம்பந்தமுடையது; அப்ராக்ருதம் – அது இல்லாதது. இத்தால் ப்ரக்ருதி மண்டலம் போல ஸத்த்வ, ரஜஸ், தமோ குணங்கள் சேர்ந்தது இல்லாமல் சுத்த ஸத்வமாய் உள்ளது என்றதாயிற்று. * சோதி விண் * என்றபடி. ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யானம் – ஸூ 79 இது விளக்கப்பட்டுள்ளது காண்க.

 • ஆக இவ்வளவினால் தத்வ, ஹித, புருஷார்த்தங்களை அருளினாராயிற்று. தத்வம் -> சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மம்; ஹிதம் -> எம்பெருமானின் அருள்; புருஷார்த்தம் -> ஸ்ரீவைகுண்டத்தில் அவனைக் கிட்டி அங்கு பெறும் வாழ்வு.
 • இதனால் எம்பெருமானே உபாயம்; அவனே உபேயம் என்பதனை தெரிவித்தருளினாராயிற்று. புல்லைக் காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பலஸாதநங்களுக்கு பேதமில்லை என்கிற ஸ்ரீவசன பூஷண ஸ்ரீஸுக்தி இங்கு நினைக்கத் தக்கது.

இது தன்னையே வேதாந்த வாக்யங்கள் ப்ரதிபாதிக்கின்றன. மேலும் ஆசாரியர்களும் இது தன்னையே கைக்கொண்டார்கள். அவ்வாசார்ய பரம்பரையை அனுஸந்திக்கிறார்.

வ்யாஸர் ப்ரஹ்ம மீமாம்ஸா சாஸ்த்ரத்தை அருளிச்செய்தவர்
போதாயனர் வ்ருத்தி க்ரந்ததை அருளிச் செய்தவர்
குஹதேவர் வேதபாஷ்யம் அருளிச் செய்தவர்
பாருசி விஷ்ணு ஸ்ம்ருதி வ்யாக்யானம் அருளிச் செய்தவர்
ப்ரஹ்மநந்தி , த்ரமிடாசார்யர் சாந்தோக்ய உபநிஷத்திற்கு வ்யாக்யானம் அருளிச் செய்தவர்
ஸ்ரீபராங்குச முனி திவ்ய ப்ரபந்தங்களை அருளிச் செய்தவர்
நாதமுனி யோகத்தில் நம்மாழ்வாரிடம் ஸித்தாந்த ரஹஸ்ய உபதேசங்களைப் பெற்றவர்
யாமுனமுனி ஸித்தித்ரயம், ஆகம் ப்ராமாண்யம், முதலியவை அருளிச் செய்தவர்
எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம் முதலியவை அருளிச் செய்து ஸித்தாந்தம் பல்கிப் பெறுக காரணமாக இருந்தவர்

இவர்கள் அனைவருமே மேலே கூறிய மதத்தையே ஆசரித்திருக்கிறார்கள். அவர்களுடைய மதத்தை அனுஸரித்து “யதீந்த்ர மத தீபிகை” என்னும் சாரீரக பரிபாஷையானது என் ஆசாரியரான ஸ்வாமியின் க்ருபையால் சிறுவர்களுக்கு ஞானம் உண்டாவதற்காக செய்யப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்திற்கு சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்றே பெயர். ஸமஸ்த சேதனாசேதனங்களும் எம்பெருமானுக்கு சரீரம்; எம்பெருமான் சரீரி – சாரீரனைப் பற்றிக் கூறும் சாஸ்த்ரம் ஆகையாலே இது சாரீரகம். यस्य पृथिवी शरीरं (யஸ்ய ப்ருதிவீ சரீரம்) என்றாம்பித்து यस्यात्मा शरीरं (யஸ்யாத்மா சரீரம்) என அனைத்தையும் ப்ரஹ்மத்திற்கு சரீரமாக ஸ்ருதி சொன்னது.

 • நம்மாழ்வாரைக் குறிப்பிடும் பொழுது மட்டும் “ஸ்ரீ” சேர்க்கப்பட்டது காண்க. ருஷிகளில் காட்டிலும் இவருக்கு உண்டான ஏற்றம் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டப்பட்டுள்ளது இங்கு ஸ்மரிக்கத் தக்கது.
 • वेदान्तवाक्यैः (வேதாந்த வாக்யை:) என்ற பஹுவசனத்தினால் (பன்மையினால்), சிலரைப் போன்று, ஒன்று இரண்டு வாக்யங்களை முக்யமாகக் கொண்டு ஸித்தாந்தம் செய்வதில்லை. வேதத்தில் உள்ள வாக்யங்கள் அனைத்தையும் கொண்டு தான் ஸித்தாந்தம்  செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டியருளினார் ஆயிற்று. ஸ்வாமி எம்பெருமானாரும் தம்முடைய வேதார்த்த ஸங்க்ரஹத்தில், இதே ரீதியில் வேதாந்த வாக்ய ஜாதம் (வேதாந்த வாக்யங்களின் கூட்டங்கள்) என்றார்.
 • வ்யாஸரை இவரது ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியும் தமது பாராசர்ய விஜயத்தில்,

वेदापहारिणं दैत्यं मीनरुपी निराकरोत। तदर्थहारिणस्सर्वान् व्यासरुपि महेश्वरः॥

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

என்னும் ஶ்லோகத்தினால் கொண்டாடியிருப்பது குறிக்கத்தக்கது. அதாவது “வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான்.” என்றபடி.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org