அமலனாதிபிரான் அனுபவம்

ஸ்ரீ: ஸ்ரீமதே மஹதாஹ்வயாய நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தி
தேட்டரும் உதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிப்புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே
thiruppan-azhwar-purappadu-uraiyur
ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||
இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும். நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்), பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.  * उपबृहणं नाम, विदितसकलवेदतदर्थानां स्वयोगमहिमसाक्षात्कृतवेदतत्त्वार्थानां वाक्यैः स्व अवगतवेदवाक्यार्थओवक्तीकरणं * இது ஸ்வாமி எம்பெருமானாரால் ஸ்ரீபாஷ்யத்தில் மஹாஸித்தாந்தத்தில் அனுக்ரஹிக்கப்பட்ட, உபப்ருஹ்மணம் என்றால் என்ன என்பதின் விளக்கம் ஆகும்.  அதாவது வேதத்தின் பொருளை அறிவதற்குத் துணையாக இருப்பது என்பது தேறின அர்த்தம். இப்படி உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும். இத்தகைய பெருமை வாய்ந்த இரண்டு உபப்ருஹ்மணங்களை அருளியவர் வ்யாஸர் ஆவார்.

         அதில் சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள். அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது. எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள் சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன. அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2); ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4); அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2); காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)- இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) – பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) – ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) – பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) – அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன். இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது, வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

பண்டை நான்மறையும் தானாய் நின்ற எம்பெருமான், வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான், கேள்விப் பதங்களும் தானாய் நின்ற எம்பெருமான், பதங்களின் பொருளும் தானாய் நின்ற எம்பெருமான், …,அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் தானே நம்போல்வாருடைய கண்களுக்கும் விஷயமாம்படி விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கொண்டு திருவரங்கம் பெரியகோயிலிலே திருக்கண்வளர்ந்தருள்கிறான். அவனுக்கும் 16 திருக்குணங்கள் * வாய்த்த புகழ்பாணர் * அருளிய அமலானாதிபிரானில் ப்ரதிபாதிக்கப்படுவதாக வேதாந்த தேஶிகன் தம்முடைய * முநிவாஹனபோகத்தில்  *அருளியுள்ளார். அதனைச் சிறிது அனுபவிக்கலாம்.

* ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் – ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே * – இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல் ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார். இந்த ப்ரணாவாகார விமானமும் தன்னுள்ளே கொண்டிருக்கிற தத்வம் எப்படிப்பட்டது என்றால் – * இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னும் அணிவிளக்கு முயர்வெள்ளை யணையை மேவி * அதன் மேலே திருக்கண்வளர்ந்தருள்கின்ற எம்பெருமான் என்கிறார் ஸ்ரீ குலசேகரப் பெருமாள். அந்தப் பெருமானை திருப்பாதாதி கேஶமாக அனுபவித்தவர் ஸ்ரீபாண்பெருமாள். அதில் முதல் பாசுரந்தன்னிலே இந்த 16 திருக்குணங்கள் காட்டப்படுகின்றன.

மோக்ஷப்ரதத்வம்

* அமலன் * என்ற பதத்தினால் கிடைக்கும் திருக்குணம். ஹேயப்ரதிபடன் என்று அர்த்தம். தான் ஶுத்தனாய் இருக்கையன்றிக்கே தன்னை ஆஶ்ரயித்தவர்களையும் அப்படி ஆக்கச் செய்யவல்லவனாய் இருக்கை. * ப்ருஹத்வாத் ப்ரஹ்மணத்வாத் * என்று ப்ரஹ்ம ஶப்தத்திற்க்கும் இதுவே அர்த்தமாக சொல்லப்பட்டது புராண ஸித்தம். இதனால் மோக்ஷப்ரதத்வம் சொல்லப்பட்டது.

ஜகத்காரணத்வம்

*ஆதி * என்றதால் * வேர் முதலாய் வித்தாய் * என்று ஜகதேககாரணத்வம் சொல்லப்பட்டது.  இரண்டு பதத்தாலும் ஹேயப்ரத்யநீகத்வமும், கல்யாணகுணயோகமும் சொல்லிற்று என்று அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வ்யாக்யானம். காரணத்வமும், மோக்ஷப்ரதத்வமும் சத்ரசாமரங்கள் போலே ஸர்வலோகஶரண்யனுக்கு விஶேஷ சிஹ்நங்கள் என்று முனிவாஹனபோகம்.

ஸர்வப்ரகாரோபகாரகத்வம்

* பிரான் * என்ற பதத்தினால் எம்பெருமான் ஜீவர்களுக்கு ஸத்தை ஸ்திதி ப்ரவருத்திகளை தன் அதீனமாக நடத்துவது, ப்ரளயாபத்திலே ரக்ஷித்தது, கரணகளேபரங்களைக் கொடுத்தது தொடக்கமாக கைங்கர்யத்தைக் கொடுத்தருளியது வரை உள்ள ஈஶ்வர்னுடைய க்ருபா பரீவாஹகமான செயல்கள் சொல்லப்பட்டன. இதனால் அனைத்து ப்ரகாரத்திலும் அவனுடைய உபகாரத்வம் சொல்லப்பட்டது.

ஸாரதமமான உபகாரவிஶேஷம்

*அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன் * என்றத்தைப் பற்ற அருள்கிறது – எம்பெருமானைப் பற்றுவதைக் காட்டிலும் அவன் அடியாரைப் பற்றுதல் அதனினும் பெரிதன்றோ! * மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் * என்று ஸ்ரீமத்வரவரமுனிகள் அருளியதுவும் இதனையே! இதனை முனிவாஹநபோஹத்தில் தேஶிகன் * “அதோஹமபி தே தாஸ:” என்னப்பண்ணின உபகாரத்திற்காட்டிலும் ” உற்றதும் உன்னடியார்க்கடிமை ” (பெரிய திரு 8-10-3) என்னப்பண்ணின இதுக்குமேல் ஓருபகாரமுண்டோ என்று இப்பரமோபகாரத்தையும் * என்றருள்கிறார். இராமானுஜ நூற்றந்தாதியில் * உன் தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி * என்று இதே ரீதியில் அருளப்பட்டது.

நித்யநிர்தோஷத்வம்

* விமலன் * என்ற இத்தால் ஒளிவீசிசும் தன்மை சொல்லப்பட்டது. இதனால் பக்தமுக்த வர்க்கங்களின் வ்யாவ்ருத்தி சொல்லப்பட்டது. நித்யம் தோஷம் அணுகாமல் இருப்பது சொல்லப்பட்டது.

நித்யஸூரி நிர்வாஹத்வம்

* விண்ணவர் கோன் * என்றதால் நித்யஸூரிகளுக்கும் தலைவன் என்றது அருளப்பட்டது. ஸூரிஜனங்களால் ஸேவிக்கப்படுவபன் என்பதும் பரவஸ்துவைக் காட்டிக் கொடுக்கும் தன்மைகளாகும். ஸ்ரீபராஶரபட்டர் தம்முடைய ஸ்ரீகுணரத்னகோஶத்தில் * தே ஸாத்யா ஸந்தி தேவா ஜநநி குணவபுர் வேஷவ்ருத்தைஸ்வரூப: * (27) என்கிற ஶ்லோகத்தில் பரமபதத்தில் உள்ளார் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஒழிவில் காலமெல்லாம் ப்ரீதியினால் உருகின மனோவிகாரத்தாலே கலங்கிய ஹ்ருதயத்தாலே பணிவிடைகளின் இன்பம் உடையவர்களோ, அவர்கள் உனது பர்த்தாவிற்கும் உனக்கும் திருவடிகளில் கைங்கர்ய வ்ருத்திக்காகவே இருக்கின்றனர் என்றருளினது குறிக்கத்தக்கது.

நித்யவிக்ரஹத்வம்

* விண்ணவர் கோன் *  – இத்தாலே ஸூரிஸேவ்யமான பரரூபமும் தோன்றுகிறது என்கிறார் முனிவாஹநபோகத்தில். எம்பெருமான் பரமபதத்தில் விக்ரஹத்தோடே கூடினவனாய் இருக்கும் இருப்பு உணர்த்தப்பட்டது. அவனுக்கு திருமேனி இல்லை என்பவர்கள் பக்ஷத்தைத் தள்ளியருளினாராயிற்று.

ஸர்வஸுலபத்வம்

* விரையார் பொழில் வேங்கடவன் * என்றவித்தால் பரமபதத்தில் நித்ய ஸூரிகளுக்குத் தன்னைக் கொடுக்கை மாத்ரம் அன்று. இம்மண்ணில் உள்ளாரும் தன்னை ஆஶ்ரயிக்கைக்காக ஸுலபனாய் திருமலையில் வந்து நித்யவாஸம் பண்ணுவது அருளப்பட்டது. இதனை * குறும்பற்ற (குறும்பறுத்த) நம்பிக்கு கூசாதே நிரந்தரஸம்ஶ்லேஷம் பண்ணலாம்படி * என்ற ஸ்ரீஸுக்தியினால் அருளுகிறார்.

வாத்ஸல்யம்

* நின்மலன் * – தன் பேறாக உதவும் ஶுத்தியை உடையவன். இதனால் அடியார்களின் மீது குற்றங்கள் கூறினாலும் * என் அடியார் அது செய்யார் – செய்தாரேல் நன்று * என்று கொள்ளும் வாத்ஸல்ய விசேஷம் சொல்லப்பட்டது.

கைங்கர்ய உத்தேஶ்யத்வம்

* விமலன் * – * விண்ணவர் கோன் * – * விரையார் பொழில் வேங்கடவன் * – * நிமலன் * – * நின்மலன் * என்கிற இவ்வைந்து பதங்களினால் ஜ்ஞானம், ஸ்வாமித்வம், விக்ரஹ யோஹமும் / ஸௌசீல்யமும், ஸௌலப்யமும், வாத்ஸல்யமும் ஆகியவை ப்ரதிபாதிக்கப்பட்டதால் நாராயண ஶப்தார்த்தமும், அதன் மேல் உள்ள சதுர்த்தியும், அதன் கைங்கர்ய ப்ரதிபாதனமும் சொல்லப்பட்டது.

கைங்கர்ய ஸ்தான விசேஷம்

கைங்கர்யம் கொள்ளுமிடமான பரமபதம். பரமபதத்தின் லக்ஷணங்களை ஸ்ரீ பராசரபட்டர்

* யத்தூரே மநஸோ யதேவதமஸ:பாரேய தத்யத்புதம்
யத்காலா தபசேலிமம் ஸுரபுரீ யத்கச்சதோ துர்கதி: |
ஸாயுஜ்யஸ்ய யதேவ ஸுதிரதவா யத்துர்க்ரஹம் மத்கிராம்
தத்விஷ்ணோ: பரமம் பதம்……. * (ஸ்ரீ குண கோ – 21)

என்கிற ஶ்லோகத்தில் அருளினார். [எந்த இடம் மனத்திற்கு தூரத்தில் உள்ளதோ, எந்த இடமே ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ எந்த இடம் மிகவும் வியக்கத்தக்கதோ, எந்த இடம் காலத்தினால் முதுமை அடையாததோ, எந்த இடத்தை நோக்கி போகின்றவனுக்கு தேவர்களின் நகரமான அமராவதியும் நரகமோ எந்த இடமே முக்தி நிலைக்கு பிறப்பிடமோ , இறைவனான விஷ்ணுவின் மேலான ஸ்தானம் ஆகிற பரமபதம்]. அதனை இங்கு * நீதி வானவன் * என்றதில் உள்ள * வான் * சப்தத்தால் ஸ்வாமி தேசிகன் அருளிகிறார். * வானே ஏத்தும் வானவர் ஏறே * என்ற திருவாய்மொழிப்பாசுரத்திலும் ஈட்டில் நம்பிள்ளை வான் என்பதற்கு பரமபதம் என்றே குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது.

ஸர்வஸ்வாமித்வம்

* நீதிவானவன் * * நீள்மதிளரங்கத்தம்மான் * என்றதால் நித்ய விபூதி லீலா விபூதி இரணிடனையும் குறித்து இரண்டினுக்கும் ஸ்வாமியானவன் என்றாராயிற்று. கொடியணி நெடுமதிள் அங்கு; நீள்மதிள் இங்கு. அயர்வறும் அமரர்கள் அதிபதி அங்கு; செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் இங்கு. சேஷித்வத்தின் (ஸ்வாமியான) எல்லையிலே நிற்பது அங்கு; சேஷத்வத்தின் எல்லையில் ஆழ்வாரை நிற்கும்படி வைக்கும் ஸ்வாமியாக திருக்கண்வளர்ந்தருள்வது இங்கு.

திருவடிகளினுடைய பாவநத்வம்

* திருக்கமலபாதம் * என்கையினால் எம்பெருமானுடைய திருவடிகளாய் இருக்கையாலே பாவனத்வமும் (பரிஶுத்தப்படுத்தும் பாவனத்வம்) * துயரறு சுடரடிகளன்றோ * * தாமரையன்ன பொன்னாரடி அப்பன் *. அவனது திருவடிகளாகையாலே போக்யமுமாக ஆயிற்று! * தேனே மலரும் திருப்பாதம் * ஆச்ரிதர்களுக்கு போக்யமாய் இருத்தல் அன்றிக்கே எம்பெருமான் தானும் அதன் போக்யத்தைச் சுவைக்க * பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் * என்று சுவைத்தானன்றோ!

அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்றது

இப்படிப்பட்ட திருவடிகள் * வந்து * என்று ஆழ்வார் இருக்குமிடம் வரை நீண்டன. அவை ப்ரஹ்மா, ஸனகர் முதலானோர்க்கும் பார்க்க அரியதாய் இருக்க * காட்டவே கண்ட பாதகமலம் * என்று எம்பெருமான் காட்டித் தந்தானே என்று ஆச்சர்யப்பட்டு * என் கண்ணில் உள்ளன ஒக்கின்றதே * என்று முதல் பாசுரத்தைப் பூர்த்தி செய்கிறார். இதனால் எம்பெருமானை அனுபவித்தால் வேறு ஒன்றிலும் நெஞ்சு செல்லாது என்ற திருக்குணம் வெளிப்பட்டது. இதுவே பூமாதிகரண விஷயமாகும். இவ்வாழ்வார் தாமே * மற்றொன்றினைக் காணாவே * என்றருளிச் செய்து தலைக்கட்டுவது ஸ்மரிக்கத்தக்கது!

thiruvahindrapuram-swami-desikan-thirunakshatram1

ஆக முனிவாஹநபோகம் கொண்டு * பாண்பெருமாள் * அருளிச் செய்த அமலனாதிபிரான் முதல் பாசுரம் அனுபவிக்கப்பட்டது

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s