சரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

சரமோபாய நிர்ணயம்

<< 10 – முடிவுரை

 1.  யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப்போகிறேனோ, என் ஆசார்யராய், அபயப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.
 2.  அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன் எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.
 3.  உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன், அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.
 4.  எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும், ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.
 5.  விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுபகுண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
  ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம்|
  தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
  ஶிஷ்டம் ஶ்ரீமத்குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷியாயிருப்பவர்: நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனியாவார். கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார். அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது. வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும் அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

6. ஸ ச ஆசார்யவம்சோ ஜ்ஞேயோ பவதி I
ஆசார்யாணாம் அஸாவஸாவித்யாபகவத்த: II

[பகவானிடமிருந்து தொடங்கி ‘இவர் இவர்’ என்று குருபரம்பரை முழுவதும்       அறியப்பட வேண்டும்.]

7. அர்வாஞ்சோ யத்பதஸரசிஜத்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிக முக்திமாபு: I
ஸோயம் ராமாநுஜமுநிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத்ஸம்பந்தாத் அமனுத கதம் வர்ண்யதே கூரநாத: II

[பின்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருவடித் தாமரையிணையோடு ஸம்பந்தம் பெற்றும், முன்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருமுடியோடு ஸம்பந்தம் பெற்றும் மோக்ஷம் அடைந்தனரோ, அந்த ராமாநுஜ முனிவரே எவருடைய ஸம்பந்தத்தாலே தனக்கு மோக்ஷம் கைப்பட்டதாகக் கருதினாரோ அத்தகைய கூரத்தாழ்வான் எப்படி வர்ணிக்கப்படுவார்.]

 1.  யாவரொரு ஆசார்யர் தம் அடியடைந்தவர்களைத் தன் கருணையினாலேயே ரக்ஷிக்கிறாரோ, அவரே அளத்தற்கரிய முக்யாசார்யராவார். நல்லோர்களால் அப்படியே சொல்லப்படுகிறதன்றோ. (ஸோமாசியாண்டான் அருளிய குருகுணாவளி)
 2.  இலக்குவன் ராமனுடைய வலதுகை போன்றவன். (ரா-அ-34-13)
 3.  எந்த நம்மாழ்வார் கருணைமிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)
 4.  ‘வைஷ்ணவன் நம் குலத்தில் பிறந்துவிட்டான்; நம்மைக் கரையேற்றுவான்’ என்று பித்ருக்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்; பிதாமஹர்கள் நடனமாடுகிறார்கள். (வராஹ புராணம்)
 5.  வைகுண்டம் என்னும் மேலான உலகில், உலகின் தலைவனாய் அளவிட்டறியமுடியாதவனாய், (குணநிஷ்டர்களான) பக்தர்களோடும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களோடும் கூடியவனாய், பெரிய பிராட்டியாருடன் சேர்ந்த நாராயணன் எழுந்தருளியிருக்கிறான்.
 6. மத்பக்தஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
  ஸ்வயம்பயாச்சநஞ்சைவ மதர்தே டம்பவர்ஜநம்||
  மத்கதாஶ்ரவணே பக்தி: ஸ்வரநேத்ராங்க விக்ரியா|
  மமாநுஸ்மரணம் நித்யம் யஶ்ச மாம் நோபஜீவதி ||
  பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் மிலேச்சேபி வாத்ததே |
  ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி:ஸ ச பண்டித:
  தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜயோ யதாஹ்யஹம் ||

[ 1. என் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம் 2. என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல் 3. தானே என்னைப் பூஜித்ததால் 4. என் விஷயத்தில் ஆடம்பரமற்றிருத்தல் 5. என் கதைகளைக் கேட்பதில் அன்பு, 6. (என் கதைகளைக் கேட்கும் போது) குரல் தழதழத்தும், கண்ணீர் மல்கியும், உடம்பு மயிர்க்கூச்செறிந்து கொண்டுமிருக்கை 7. எப்போதும் என்னை நினைத்திருக்கை, 8. என்னிடம் வேறு ஒரு ப்ரயோஜனத்தையும் கேளாதிருக்கை, என்னும் இந்த எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மணஶ்ரேஷ்டன், அவனே முனிவன், அவனே தனவான், அவனே இந்திரிய நியமனம் செய்தவன், அவனே பண்டிதன், அவனுக்கு ஞானத்தை உபதேஶிக்கலாம், அவனிடமிருந்து ஞானோபதேஶமும் பெறலாம். அவன் என்னைப்போல் பூஜிக்கத்தக்கவன் ] (காருடம் 219 6-9)

 1. உபயவிபூதியும் இவளுக்கும் எனக்கும் ஶேஷமயிருப்பது. (விஷ்வக்ஸேநஸம்ஹிதை)
 2. எனக்கு எது நல்லது என்று உன்னால் நிஶ்சயிக்கப் படுகிறதோ, அதை எனக்குச் சொல்லுவாயாக. நான் உனக்கு ஶிஷ்யன். உன்னை ஶரணமடைந்த என்னை நியமிப்பாயாக. (கீதை 2-7)
 3. ஞானிகளை வணங்குவதாலும் நேரே குறிப்பிடாமல் கேட்பதாலும், ஶுஶ்ருஷை செய்வதாலும் ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவாயாக. உண்மையைக் கண்ட ஞானிகள் உனக்கு அவ்வறிவை உபதேஶிப்பார்கள். (கீதை 4-34)
 4. சக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது. வளை முதலிய ஆபரணங்கள் பதிவ்ரதைக்கு அடையாளங்களன்றோ.
 5. தன் வலதுபுறத்தில் அடக்கத்துடனும் அஞ்ஜலியோடும் கூடிய சீடனை இருத்தி, ஞானத்தைத் தரவல்ல தன் வலதுகையை சீடனின் சிரத்தில் வைத்து, தன் இடது கையைச் சீடனின் மார்பில் வைத்து, தன் ஆசார்யனை இருதயத்தில் தியானித்து, குருபரம்பரையை ஜபித்து இவ்வகையாக எம்பெருமானை சரணமடைந்து ரிஷிசந்தஸ் தேவதைகளுடன் கூடிய மூலமந்த்ரத்தைத் தானே கருணையால் சீடனுக்கு உபதேசம் செய்யக்கடவன்.
 6. ஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள். (ரா-பா 67.22)
 7. யஶ்ச ராமம் ந பஶ்யேத்து யஞ்ச ராமோ ந பஶ்யதி|
  நிந்தித: ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே||

[எவனொருவன் ராமனைக் காணாதிருப்பானோ, எவனை ராமனும் காணாதிருக்கிறாரோ அவன் உலகில் நிந்திக்கப்பட்டவனாய் வாழ்வான்; தன் ஆத்மாவும் இவனை இகழும்] (ரா-அ 17-14)

 1. இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
  ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||

[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம். (தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிடவேண்டும்; (தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ] (ரா -பா 31-4)

 1. நான் உனக்கு அடியேன்; உனக்கு இப்போது என்ன செய்வேன்?
 2. விஷ்ணுவானவர் மனிதவுருவுடன் பூமியில் ஸஞ்சரித்தார். (பாரதம் – வனபர்வம்)
 3. கோவிந்தனே! இப்போதும் உலகங்களுக்கு நன்மைக்காக மனிதவுருக்கொண்டு த்வாரகையில் நிற்கிறாய்
 4. ஆசார்யனே நேரே நடமாடும் பரமபுருஷன்: இதில் ஐயமில்லை.

26. குருவே மேலான ப்ரஹ்மம்; குருவே மேலான தனம்; குருவே மேலான காமம்; குருவே மேலான ப்ராப்யம்; குருவே மேலான கல்வி; குருவே மேலான ப்ராபகம்; அப்பரம்பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

27.அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விஶாரதை|
கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப் யுத்த ரிஷ்யதி||

[புராணப் பொருள்களிலே பண்டிதர்களான பேரறிவாளர்களாலே அவனே கோபாலனென்று கொண்டாடப்படுகிறான். தாழ்ந்து கிடந்த யதுகுலத்தைக் கைதூக்கிவிடப் போகிறான் இவன்] (வி-பு. 5-20-49)

 1. திருவனந்தாழ்வான் முதல் மூர்த்தியாவான். லக்ஷ்மணன் அவனுடைய அடுத்ததான அவதாரமாவான். பலராமன் அவனுடைய மூன்றாவது மூர்த்தியாவான், நாலாவது மூர்த்தியாகக் கலியுகத்தில் ஒரு மஹாபுருஷர் அவதரிக்கப்போகிறார்.

29. ந தர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதி நபக்திமாந் த்வச்சரணாரவிந்தே|
அகிஞ்சநோஅநந்யகதி: ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே||

[கர்மயோகத்தில் நிலைநிற்பவனல்லேன், ஆத்மஜ்ஞானமுமில்லாதவன், உன் திருவடித் தாமரையில் பக்தி யோகமும் இல்லை, கைமுதலற்றவன், வேறு புகலற்றவன், ஶரணமடையத்தக்கவனே! உன் திருவடியை ஶரணமடைகின்றேன்] (ஸ்தோத்ர ரத்னம் 22)

 1. ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்யமய: புருஷோத்ருச்யதே ஹிரண்யசமச்ருர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: I தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவக்ஷிணீ II

ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரமபுருஷன் காணப்படுகிறானோ, அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேசங்களையும்,நகம் முதலிய எல்லா அவையங்களையுமுடையவன். அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்ற இருகண்கள் உள.

31. காருண்யத்தால் ஆசார்யகளுள் சிறந்தவர் எதிராஜர்.

32. அழிவற்ற செல்வம்.

33. அர்ஜுனா! உனக்குப்போலே எனக்கும் பல பிறப்புகள் கடந்துவிட்டன.(ஆயினும் யான் அவற்றை அறிவேன்; நீ அறிய மாட்டாய்.)

34. அர்ஜுனா! அஸுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து ஜன்மந்தோறும் மூடர்களாய் என்னை அடையாமலே அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.

35. தன் சரமகாலத்தில் தன் திருவடிவாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள் ‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று உபதேஶித்தார்.

36. முக்காலும் சத்யம் செய்து கூறுகிறேன்; யதிராஜரே உலக குருவாவர். எல்லாவற்றையும் உய்விக்கசெய்ய வல்லவர் அவரே.

37. உபாயமாகவும், உபேயமாகவும் ஆசார்யனையே ஶரணமடைய வேண்டும்.

38. தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜதத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஶீம்நே|
நாதாய நாதமுநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

[இவ்வுலகிலும் மேலுலகிலும் எப்போதும் எந்த ஶ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடிகள் எனக்குப் புகலிடமோ மதுவை அழித்த எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளைப் பற்றிய உண்மையறிவினுடையவும் அன்பினுடையவும் பெருமேன்மையின் முடிவே எல்லையாயிருப்பவரும், எனக்கு நாதராயிருப்பவருமான அந்த நாதமுனிகட்கு நமஸ்காரம்.] (ஸ்தோத்ர ரத்னம் 2)

39. ஸாத்யமில்லாவிடில் ஸாதனங்களால் என்ன பயன்? (வி-பு. 1-19.36)

40. உபாதத்தே ஸத்தாஸ்திதிநியமநாத்யைஶ் சிதசிதௌ
ஸ்வமுத்திஶ்ய ஶ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ|
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணௌ
அதஸ்த்வாம் ஶ்ரீரங்கேஶய ஶரணமவ்யாஜம்பஜம் ||

[ஹே ஶ்ரீரங்கநாதனே! ‘ஶ்ரீ மந்நாராயணன் – ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால் சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத் வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால் இவ்விஷயத்தில் உபயத்வமும் உபேயத்வம் உனக்கு முக்யம்; கௌணமல்ல. ஆகையால்உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.] (ர-ஸ்த 2-88)

 1. மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
  ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
  ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
  ஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||

[என் வம்ஶத்தவர்களுக்கு எப்போதும் தாயும், தந்தையும், மாதரும், மக்களும், பெருஞ்செல்வமும், மற்றுமுள்ள எல்லாமும் எப்போதும் எந்த ஆழ்வாருடைய திருவடியிணையேயோ, நமக்கு முதல்வரும், குலபதியுமான அவருடைய, மகிழமலராலே அலங்கரிக்கப்பட்டதும், வைணவச் செல்வமுடையதுமான அத்திருவடியிணையைத் தலையால் வணங்குகிறேன்.] (ஸ்தோ – ர 5)

 1. ஆசார்யர்கள் நேரில் துதிக்கத்தக்கவர்கள்.

சரமோபாய நிர்ணய ப்ரமாணத் திரட்டு முற்றிற்று.

********************************************

1,2,3,4 நாயனாராச்சான் பிள்ளையருளிய உபோத்காதகாரிகைகள்

5. பெரியவாச்சான் பிள்ளையருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

This entry was posted in charamopaya nirnayam on by .

About sarathyt

Disciple of SrImath paramahamsa ithyAdhi pattarpirAn vAnamAmalai jIyar (29th pattam of thOthAdhri mutt). Descendant of komANdUr iLaiyavilli AchchAn (bAladhanvi swamy, a cousin of SrI ramAnuja). Born in AzhwArthirungari, grew up in thiruvallikkENi (chennai), presently living under the shade of the lotus feet of jagathAchArya SrI rAmAnuja, SrIperumbUthUr. Learned sampradhAyam principles from vELukkudi krishNan swamy, gOmatam sampathkumArAchArya swamy and many others. Full time sEvaka/servitor of SrIvaishNava sampradhAyam. Taking care of koyil.org portal, which is a humble offering to our pUrvAchAryas. koyil.org is part of SrI varavaramuni sambandhi Trust (varavaramuni.com) initiatives.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s