வரதன் வந்த கதை 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 2

தேவகுரு ப்ருஹஸ்பதி !!

“ப்ருஹதீ வாக் தஸ்யா: பதி :” (ப்ருஹதீ = வாக்குகள்) என்கிறபடியே “வாக்குகளுக்குத் தலைவர்” என்று புகழப்படுகிறார். ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர்!

“புரோதஸாம் ச முக்யாம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம்” (கீதை 10-24)

(புரோஹிதர்களுக்குள்ளே தேவர்களுக்கு குருவான வாக்குகளை தன் வசத்திலுடையவரான ப்ருஹஸ்பதி ஆகிறேன் நான் ! (ப்ருஹதாம் பதி: கிராம் பதிர்ஹ்யஸௌ- தாத்பர்ய சந்த்ரிகையில் தேசிகன்) என்றான் கண்ணனும் !

“புரோஹிதர்” என்றால் நம் நன்மையை (நமக்கும்) முன்னாலேயே உத்தேசித்துச் செயல்படுபவர் என்றே பொருள்!

ஆம் ! தேவர்களின் நன்மைக்காக பாடுபடுபவர் புரோஹிதரான ப்ருஹஸ்பதி !

அவர் தான் தேவர்களையும், ரிஷிகளையும் மற்றும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு ஸத்யலோகம் வந்துள்ளார் !

அனைவரும் ஒரு பிரச்சினையையும் சுமந்து வந்துள்ளது சேவகன் மூலமாக பிரமனுக்கு உணர்த்தப்பட்டது !

என்ன கலகம் என்று நான்முகன் கேட்கவும் சேவகன் சொன்னது இது தான் !

சிற்சில யாகங்களில், ப்ராணிகளைப் பலியிட வேண்டிய கட்டளைகள் உண்டு.
ஆடு, வெள்ளாடு, குதிரை இவற்றின் வபை (சதை) மற்றும் மாம்ஸங்களைக் கொண்டு (சில வகை) யாகங்கள் செய்யப்பட வேண்டும் என்று சாத்திரங்கள் விதிக்கின்றன !

யாகத்திற்காக அழைத்து வரப்படும் அந்தப் ப்ராணிகளை “யாகப்பசு” என்றே அழைப்பர்கள்! (பசு என்றால் பசு மாடு என்று பொருளல்ல! மிருகம் என்றே பொருள்)

உதாரணமாக, கல்ப சூத்திரங்களின் படி அச்வமேத யாகத்தில் , மூன்று தினங்கள் முக்யமானவையாம் .

சதுஷ்டோமம், உக்த்யம், அதிராத்ரம் போன்ற வேள்விகள் அம் மூன்று நாள்களில் விதிப்படிச் செய்யப்பட வேண்டும் !

மேலும் ஜ்யோதிஷ்டோமம் முதலான பற்பல வேள்விகளைச் செய்ய வேண்டும்.

அவற்றில் குதிரையின் உள் அவயவத்தை (உடல் உள் உறுப்புகள்) ஆஹுதியாக வேள்வியில் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் நியமங்கள் உண்டு !

பிரச்சினை இது தான் !!

ரிஷி முனிவர்களில் சிலர் , அவ்வகை வேள்விகளில் உண்மையான ம்ருகத்தை பலியிடத் தேவையில்லை; அதற்கு பதில் பிஷ்ட பசு  ( = மாவினால் ஒரு ம்ருகத்தை) (ஆடு, குதிரை) செய்து அதனையே வேள்விகளில் சேர்க்கலாம் என்றனர் !

தேவர்களோ, இல்லையில்லை உண்மையான ம்ருகத்தினைக் கொண்டே யாகங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர் !

இதுவே சண்டைக்கான காரணம்! தற்சமயம் பிரமன் தலையில்(களில்) விழுந்திருக்கிறது. தேவ குரு ப்ருஹஸ்பதியோ அக்கினிப் பிழம்பாகத் திகழ்கிறார் .. நியாயம் கேட்டு வந்திருக்கிறார் !

அவர் பார்வையே பிரமனை பயமுறுத்துகிறது !

பிரமன் தன்னுள் எண்ணலானான்.. வாக்குகளுக்குத் தலைவி (வாக் தேவி – ஸரஸ்வதி) சற்று முன்பு தான் கோபித்துக் கொண்டு வெளி நடப்பு செய்தாள் !

இப்போது வாக்குகளுக்குத் தலைவர் (ப்ருஹஸ்பதி) கோபத்தோடு வந்திருக்கிறார் ! தாயும் மனைவியும் ஒரே நேரத்தில் கடுங்கோபம் கொண்டால் ஒருவன் எப்படிக் கலங்கிப் போகிறானோ அப்படித் தவித்தான் பிரமன் ! கைகளைப் பிசைந்தான்..

சரி ..ப்ருஹஸ்பதி தான் கோபமாயிருக்கிறார் .. மற்ற ரிஷி முனிவர்கள்?? அவர்களைப் பார்த்தால் ப்ருஹஸ்பதியின் கோபமே தேவலை போலும் !!

நிஜமான ம்ருகமா? மாவினால் ஆன ம்ருகமா?? இந்த நீயா நானாவில் நிலை குலைந்து போனான் அஜன் !

கடைசியில், தேவர்கள் நம் சாதி தானே! எனவே அவர்களையும் ப்ருஹஸ்பதியையும் பின்பு சமாளித்துக் கொள்ளலாம் என்றெண்ணினானோ என்னவோ; மாவினால் ஆன பிஷ்ட பசுவினால் வேள்வி செய்வதே நலம் என்று தீர்ப்பளித்து விட்டான் !

ரிஷி முனிவர்கள், “நாவலிட்டுழி தருகின்றோம் “தேவர் தம்” தலைகள் மீதே” என்று சந்தோஷத்தால் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்..

தேவர்களோ பிரமனுக்குச் சாபம் கொடுக்க வேண்டி ஸபை கூட்டினர் !!

என்ன சாபம் ?!

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

1 thought on “வரதன் வந்த கதை 3

  1. Pingback: Story of varadha’s emergence 3 | SrIvaishNava granthams

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s