த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 19

ஸ்ரீபாஷ்யம் மங்கலச்லோக அநுபவம் – முதல் பகுதி

ஸ்வாமி ராமாநுசர் ஸ்ரீபாஷ்யத்தை இந்த அத்புத மங்கலச்லோகத்தொடு தொடங்குகிறார்:

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே     

              விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே

                பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா  

பெரும் பேராசிரியராகிய இராமானுசர் அருளிச் செய்த இந்த ச்லோகம் அடியார் அனைவர்க்கும் ஸதா ஸர்வதா போக்ய அமுதாகும். எம்பெருமானைப் பார்த்து பக்திரூபாபன்ன ஞானத்தை விளைக்கக் கோரும் இந்த ச்லோகம் அடியார் நெஞ்சில் பக்தியையே வளர்க்கிறது. இந்த ச்லோகத்துக்கு அடி ஆழ்வார்களின் அருளிச்செயல்களும் ஆசார்யர்களுமே.

நாம் இவற்றில் முதலில் அருளிச்செயல்களை அநுபவிப்போம்.

எம்பெருமான் ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை லீலையாகச் செய்கிறான் என்பதைச் சொல்லும்  “அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய  யத:” என்பதும், அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு. இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும். இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோகரக்ஷணம் அடங்கும்.  இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்வாமி மீண்டும், ”விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார் எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ச்லோகத்தின்  முற்பகுதியிலேயே குறிப்பிடப்பட்ட இந்த ரக்ஷணம் என் மறுபடி கூறப்படுகிறது?

நம் ஆசார்யர்கள் எப்போதுமே தங்கள் சொற்களைச் ச்ருதியைப் ப்ரமாணமாக வைத்தே சொல்லுவர்.  இராமானுசரின் இத்தகைய சொற்பிரயோகங்களைக் காணும்பொழுது நமக்கு இவ்வெல்லாவற்றுக்கும் அடி ஆழ்வார்களின் பாசுரங்களிலேயே கிடைக்கிறது.

ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல்  “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில் எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.  மீண்டும் அவனது மோக்ஷப்ரதத்வம் எனும் எக்காலத்தும் வீடுபேறளிக்கும் மஹா குணத்தை “வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார். முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள், மோக்ஷப்ரதத்வம் எம்பெருமானின் மிகத்தனித்ததொரு குண விசேஷம் என்பதால்   இது புனருக்தியன்று என்றனர்.

ஆழ்வார்  இரண்டாம் பத்தில் “அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார். ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.  ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது. இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர்  ஸ்வாமிக்கு முன்பு எவரும் தம் வடமொழி நூலில் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை மேற்கோள்  காட்டியதில்லையாதலால்  இவ்விடம் விளக்கும் ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,  “ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/17/dramidopanishat-prabhava-sarvasvam-20/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s