த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 14

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 13

திருப்பாவை ஜீயர்

திருவரங்கத்தமுதனார் ஸ்வாமி இராமானுசரை  “சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” என்று கொண்டாடுகிறார். ஆண்டாளின் ஸ்வாபாவிகமான திருவருளால் எம்பெருமானார் வாழ்கிறார் என்பது கருத்து. திருப்பாவையின் பதினெட்டாம் பாசுரம் தொடர்பான ஓர்  ஐதிஹ்யத்தாலும் ஸ்வாமி திருப்பாவை ஜீயர் என்று கொண்டாடப்படுகிறார்.

ஸ்வாமி மீது திருப்பாவையின் ப்ரபாவம் என்னென்பதை  உய்த்துணர முடியுமோ?

இதற்கோர்  எடுத்துக்காட்டு இதோ:

ஸ்ரீ கீதை மூன்றாம் அத்யாயத்தில் கண்ணன் எம்பெருமான்  செயல்பாட்டில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தும்  பிரகரணத்தில் இவ்வாறு சொல்கிறான்:

“யத் யத் ஆசரதி ச்ரேஷ்ட: தத் தத் ஏவேதரோ  ஜனா:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகாஸ் தத் அநு வர்த்ததே “ || 3-21

முதல் நோக்கில்  இது ஸாதாரண ஸ்லோகம் போலத் தோற்றும். நல்லார் எனப்படுவோரின் இயல்பில் ஒழுக்கம்/சீலம் பற்றியதன் முக்யத்வத்தை இது உணர்த்துகிறது. வடமொழியில் நல்ல தேர்ச்சி பெற்றோர் இச்லோகத்தின் பொருளை எளிதில் உணர வல்லார்கள்.

இச்லோகத்தின் பின்பாதியை விளக்குகையில் ஸ்ரீ சங்கரர் , “ஸ: ச்ரேஷ்டா: யத் ப்ரமாணம் குருதே – லௌகிகம் வைதிகம் வா, லோக: தத் அநு வர்த்ததே – ததேவப்ராமாணிக ரோதி இதி அர்த்த:” . என்றார். லௌகிக, வைதிக விஷயங்கள் இரண்டிலுமே ஸாமான்யர்  பெருமக்களால் எது ப்ரமாணமாகக் கொள்ளப் படுகிறதோ அதையே பின்பற்றுகிறார்கள் என்றபடி.

ஸ்ரீ ஆனந்த தீர்த்தர் இதை, “யத் வாக்யாதிகம் ப்ரமாணீ குருதே – யதுக்த ப்ரகாரேண  திஷ்யதி இதி அர்த்த:” என விளக்கினார். இவ்விரண்டு விளக்கங்களிலுமே “யத்-ப்ரமாணம்” என்னும் பகுதி  “யத்” என்றும் “ப்ரமாணம்” என்றும் பிரிக்கப்பட்டது.

எனினும், ஸ்வாமி இராமாநுசர்  தம் பாஷ்யத்தில் இதற்குத் தனியொரு ஏற்றமிகு விளக்கம் அருளிச் செய்கிறார். அவர் “யத்ப்ரமாணம்” என்பதை ஒரே பன்மைக் கூட்டுச்சொல்லாகக் (பஹு வ்ரீஹி சப்தம்) கருதி விளக்குகிறார். இந்த விவரங்களைக் காணுமுன் இச்லோகத்துக்கு  ஸ்வாமியின் உரையைக் காண்போம்:

ச்ரேஷ்ட: – க்ருத்ஸ்ந சாஸ்த்ரஜ்ஞாத்ருதயா  அநுஷ்டாத்ருதயா ச ப்ரதித:

பெருமக்கள் என்போர் சாஸ்த்ரங்களைத் தெளிவாகக் கற்றுணர்ந்து, அதற்குத் தக்க மாசற்ற ஒழுக்கம் உடையோர்.

யத்யத் ஆசரதி தத்ததேவ அக்ருத்ஸ்ந விஞ்ஞான அபி ஆசரதி

சாஸ்த்ரங்களை நன்கு அறியாத ஸாமாந்யர் இப்பெருமக்களின் வழியையே பின்பற்றுவர்

அனுஷ்டீயமானம் அபி கர்ம ச்ரேஷ்டோ, யத் ப்ரமாணம் யத்-அங்கயுக்தம் அநுதிஷ்டதி தத் அங்கயுக்தம் ஏவ அக்ருத்ஸ்ந வில்லோகோநுதிஷ்டதி

இவ்வாறு செய்யப்படும் கர்மங்களில் ஸாமாந்யர் பெருமக்களால் செய்யப்படும் கர்ம பாகங்களை மட்டுமே அனுசரிக்கிறார்கள்.

யத்ப்ரமாணம்  என்பதற்கான விளக்கங்களில் உள்ள வித்யாசம் தெளிவு. ஸ்வாமி அருளிய விளக்கம் தனிச் சிறப்புடையது மட்டுமன்று, பொருத்தமுள்ளதும்  ஆகும். தனி மனிதன் செயல்பாட்டைப் பெருமாள் விளக்கும் ப்ரகரணத்தில் கர்மமும், கர்மத்தின் பொருளும் மட்டும் விளக்கப்பட்டால் போதும். பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே பிறரால் ஏற்கப்படுகிறது என்று காட்டுவது மிகப் பொருள் செரிந்ததன்று.ஏன் எனில், சரியான ப்ரமாணத்தையே அனுசரிக்கவேண்டும் என்கிற விஷயம் கீதையின்  இந்த அத்யாயத்தில் முன்வைக்கப்படவில்லை. அர்ஜுனனுக்கு எந்த ப்ரமாணம் ஏற்றது என்பதும் கேள்வி இல்லை. கர்மத்தைப் பற்றிய கேள்வி மட்டுமே உள்ளது.

ஸ்வாமி இவ்வர்த்தத்தைத் திருப்பாவையிலிருந்து எடுத்துத் தந்தருள்கிறார் என்பது குறிக்கொள்ளத் தக்கது. திருப்பாவை இருபத்தாறாம் பாசுரத்தில் ஆண்டாள்,”மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்கிறாள். “வேண்டுவன” எனும் சொல்லே இங்கு “யத்ப்ரமாணம்” என்பதற்கு ஸ்வாமியின் விளக்கமாய்ப்  பொருந்துகிறது.

ப்ரமாணங்களாகக் கருதப்படும் வேதங்கள் பல ஒழுக்க நியதிகளைச் சொல்கின்றன. ஆயினும், மேலோர் அவற்றில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் பின்பற்றுவதில்லை. எவற்றைச் செய்யாவிடில் பாபம் சேருமோ அவற்றையே செய்ய வேண்டிய நியதியாகக் கொள்கிறார்கள்.

“க்ரியமாணம் ந கஸ்மைசித் யத் அர்த்தாய ப்ரகல்பதே
அக்ரியாவதனர்த்தாய தத்து கர்ம ஸமாசரேத்”

பலன்களைக் கருதிக் குறிப்பிட்ட   கர்மங்களை அவர்கள் செய்வதில்லை. செய்யாமல் விட்டால் பாபம் சேரக்கூடிய விதித கர்மங்களையே அவர்கள் செய்கிறார்கள்.

ஒரு ஸந்யாசி அச்வமேதம் செய்ய வேள்வி வளர்க்க மாட்டாரன்றோ.

திருப்பாவையிலோ கீதையிலோ பெருமக்கள்/மேலோர் செய்யும் கர்மங்களே, லௌகிகமோ வைதிகமோ, அவர்கள் செய்யும் வண்ணமே சாமான்யர்களுக்கும் செய்யத் தக்கனவாக உள்ளன. எனவே சீலமிக்க வேதம் வல்ல மேலோர் ஒழுகும் வழியே முக்கியம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/11/dramidopanishat-prabhava-sarvasvam-14/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s