த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 12

கஜேந்த்ர மோக்ஷம்

முன் பகுதியில் எம்பெருமானார் சாதித்த விளக்கம் ஆழ்வாரின் கீழ்க்காணும் பாசுரத்தைத் தழுவியது என்று கண்டோம்:


“மழுங்காத வைநுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே”


ஆழ்வார், ஸாது பரித்ராணம் செய்ய எம்பெருமான் தானே வந்துவிடுகிறான் என்று காட்ட கஜேந்திர மோக்ஷத்தை உதாஹரிக்கிறார். கஜேந்த்ரமோக்ஷம் நாம் அனைவரும் நன்கறிந்ததே.இது புராணங்களிலும் விபுலமாகப் பேசப்பட்டுள்ளது. பல திவ்யதேசங்களிலும் இவ்வைபவம் மிகச் சிறப்பாகக்     கொண்டாடப்படுகிறது .

இந்நிகழ்ச்சியின் சுருக்கமாவது ..எம்பெருமானிடம் பக்திபூண்ட ஓர் ஆனை அவனுக்கு சமர்ப்பிக்கத்  தாமரை மலர்கள் கொய்ய ஒரு தடாகத்தில் இறங்கிற்று. அங்குக் காத்திருந்த ஒரு முதலை அதைக் கவ்விற்று. ஆனை தானே தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தது. தன் முயற்சியில் பயன் இல்லை என்பது உணர்ந்த ஆனை உதவிக்கு யாவற்றுக்கும் காரணப் பொருளை (ஆதிமூலம்) அழைத்தது. எம்பெருமான் திருநாட்டிலிருந்து கருடாழ்வார் மேலேறி வந்தான். அவன் அந்தக் கயத்தை அடைந்ததும் தன சக்ராயுதத்தை முதலையை அழிக்க ஏவினான். ஆனையின் புண்ணைத்தடவி ஒத்தடம் தந்து, ஆனை எடுத்திருந்த தாமரை மலர்களை ஏற்றுக்கொண்டான்.  

எம்பெருமான் குளக்கரைக்கு எழுந்தருளியது உள்ளபடியே ஆவச்யகமா என்பதை அறிஞர்கள் ஆலோசிக்கவேணும். அவன் அம்முதலையைக் கொன்று ஆனையை வேறு எப்படிக் காத்திருக்கலாம் என்று பார்ப்போம்.

1.கூரத்தாழ்வான், ஸ்ரீ வைகுண்டஸ்தவத்தில்  எம்பெருமான் அனைத்துலகங்களையும் தன் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே ஸ்ருஷ்டித்து , ரக்ஷித்து  சம்ஹரிக்கவும் வல்லவன் என்று அருளிச்செய்கிறார்: “விச்வம் தியைவ விரசைய நிசாய பூய: ஸம்ஜாஹ்ருஷ”. எனில், அவனால் கஜேந்த்ராழ்வானை ஸங்கல்ப மாத்ரத்தாலேயே ரக்ஷித்திருக்க முடியும். “கஜேந்த்ர: பரித்ராதோ பவது” கஜேந்த்ரன் ரக்ஷிக்கப்படக் கடவது என்று ஸங்கல்பித்திருந்தால், மேற்கொண்டு எதுவும் செய்யாமலேயே ரக்ஷணம் முடிந்திருக்கும்.

2.கஜேந்த்ரன் இன்னொரு வகையிலும் இரட்சிக்கப் பட்டிருக்கலாம். ஆழ்வார் அருளிச்செய்வதுபோல் “கருதுமிடம் பொருது கை நின்ற சக்கரத்தன்” சுதர்சனச் சக்கரத்துக்கு ஓர் ஆணையிட்டிருந்தாலே போதும். சுதர்சனர் எளிதாக முதலையை எளிதாக முடித்து ஆனையைக் காத்திருப்பர். பெரியாழ்வார், “கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்து அவருடைய கருவழித்தழிப்பான்” என்றருளிச் செய்தார். எம்பெருமான் சுதர்சனரை ஏவி, கீழே பாதாள லோகத்தின் அடியில் எண்ணற்ற அசுரர்களை வேரோடு ஒழித்தான். இங்கும்கூட, எம்பெருமான் குளக்கரை வந்தடைந்தவுடனே சுதர்சனத்தை ஏவியே முதலையை முடித்தான். பரமபதத்திலிருந்தே  இதைச் செய்து முடித்திருக்கலாம்.

இவ்விரண்டு விளக்கங்களிலும் சுதர்சனர் எம்பெருமானின் ரக்ஷகத்வ சக்தி மாத்ரமே என்று தெரிகிறது.”வாணீ பௌராகிணீ யம் கதயதி மஹிதம் ப்ரேக்ஷணம் கைடபாரே (சுதர்சனர் எம்பெருமானின் ரக்ஷகத்வ சக்தியின் ஸங்கல்பம் என புராணங்கள் கோஷிக்கின்றன)” என்பது சுதர்சன சதகம்.

இவ்வளவுக்குப் பின், கஜேந்திர சம்ரக்ஷணமும் மகர ஸம்ஹாரமும் ஆகிய இரண்டுமே எம்பெருமான் நேர்பட எழுந்தருளாமலேயே நடந்திருக்கக் கூடியவை என்பதே தேறும்.

ஆழ்வாரே இவ்விரண்டு மாற்றுகளையும் குறிப்பிடுகிறார். “மழுங்காத வைநுதிய சக்கர நல் வலத்தையாய்” என்பது எம்பெருமான் பரமபதத்திலிருந்தபடியே சுதர்சனரை ஏவியிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.”மழுங்காத ஞானமே படையாக மலருலகில்” என்பது கஜேந்த்ராழ்வானைக் காக்க எம்பெருமானின் தோலாத ஸங்கல்பம் மட்டுமே போதும் என்பதைக் குறிக்கிறது. இவ்வளவு மாற்றுகள் இருந்தபோதிலும், எம்பெருமான் தானே வந்து தோன்றுகிறான்.

எம்பெருமான் தானே வந்து தோன்றியதன் காரணம் “தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே” என ஆழ்வார் தாமே மயர்வற மதிநலம் அருளப்பெற்றதால் தெரிவித்தாராயிற்று.

முதலையிடமிருந்து ஓர் ஆனையைக் காப்பதற்காக மட்டும் எம்பெருமான் வந்து தோன்றவில்லை. கஜேந்த்ராழ்வான் தானே சொல்கிறான் “நாஹம் கலேவரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மதுசூதன! கரஸ்த கமலான்யேவ பாதயோர் அர்ப்பிதம் தவ” (மதுசுதன! என் சரீரத்தைக் காத்துக்கொள்ள நான் உன்னை அழைக்கவில்லை. என் துதிக்கையில் உள்ள  இந்தத் தாமரை மலர்களை உனக்கு ஸமர்ப்பிக்கவே அழைத்தேன்”). கஜேந்த்ராழ்வானின் இந்த நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டதாலேயே எம்பெருமான் தன் தாமத்திலேயே நில்லாமல் தானே அவனிருந்த இடத்துக்கு ஓடி வந்தான்.

களிறு எனும் சொல்லின்முன் உள்ள “தொழுங்காதல்” என்பது கஜேந்த்ரனின் பக்தி பாரவச்யத்தைக் காட்டும். ”தொழுங்காதல்” உணர்வினரையே கீதையில் எம்பெருமான் ஸாது என்கிறான். ஸாது பரித்ராணம் பகைவரை ஒழிப்பதும், ஸாதுக்களைக் காப்பதும் மட்டுமன்று , அவற்றையும் தாண்டிச் செல்கிறது. எம்பெருமான் தன்னடியாரோடு இருக்கவும், உறவாடவும் கலந்து பரிமாறவும் விரும்புகிறான். அவனுக்கு அடியார்பாலுள்ள காதலும், அவர்கட்கு அவன்பாலுள்ள காதலுமே அவனை நேர்பட வரவழைக்கின்றன. மிக உயர்ந்த பக்தி நிலையில் உள்ள ஸாதுக்களுக்குத் தங்கள் உடம்பைக் காத்துக்கொள்வதில் என்ன விருப்பம் இருக்கப் போகிறது! தம் ஸ்வரூபமும் பகவத் ஸ்வரூபமும் உணர்ந்தோராதலால் அவர்கள் அவன் அனுபவத்திலேயே ஊறி இருப்பார், ஆழ்ந்திருப்பார். இந்த “ஆத்ம” அநுபவமே ஸாது பரித்ராணத்தின் அகவுயிராகும். இது அவன் நேர்பட வருவதாலேயே நிறம் பெற்றது ஆகும். ஆகவேதான், “ஸாதூநாம் பரித்ராணாய யுகே யுகே ஸம்பவாமி” என்று தானே சொன்னதும்.

இவ்வாறு ஸாது பரித்ராண த்தை விளக்குவது ஆழ்வார் திருவாக்கு அறியாமல் இயலாது. ஆகவேதான் இவ்வர்த்தம் சுவாமியின் ஸ்ரீ பாஷ்யத்தில் மட்டுமே காணக் கிடைக்கிறது. வேதங்களைக் கரை கண்டோர் இப்பொருளை அறியவும், உணரவும் இயலார், தவிப்பார்கள். வேதங்களின் இச்செம்பொருளை அறிய ஆழ்வார் அருளிச்செயல் மூலமாகவே இந்த அவதார ரஹஸ்யம் அறியலாகும்.   

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/11/dramidopanishat-prabhava-sarvasvam-13/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

3 thoughts on “த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 13

 1. tskraghu

  It hasn’t been easy to understand ur chaste Tamizh. In which work is this contained?
  கஜேந்த்ராழ்வான் தானே சொல்கிறான் “நாஹம் கலேவரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மதுசூதன! கரச்த கமலான்யேவ பாதயோர் அர்ப்பிதம் தவ”(மதுசுதன!
  Is Koorathazvan translating it in his work to: “தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே”

  I know I’m getting mixed up.
  I understood the essence of the post – very nice. Never heard about this perspective before, hence the query.
  Thank you

  Reply
  1. sarathyt

   “நாஹம் கலேவரஸ்யாஸ்ய ” is present in SrIvishNu purANam. This is explained in context of nammAzhwAr’s thiruvAimozhi pAsuram “தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே” (http://divyaprabandham.koyil.org/index.php/2016/07/thiruvaimozhi-3-1-9-mazhungadha/) . kUraththAzhwAn’s SlOkam is used as a supporting evidence to demonstrate the principle.

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s