த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 11

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 10

ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம்

கத்யத்ரயம் பக்தர்களுக்குத் தெவிட்டாத அமுது. “அகிலஹேய பிரத்யநீக” என்று தொடங்கும் பகுதியில், சரணாகதி கத்யத்தில் ஸ்வாமி எம்பெருமானார் எம்பெருமானின் திவ்ய ஸ்வரூபம்,, திவ்ய ரூபம்,திவ்யகுணங்கள், திவ்ய ஆபரணங்கள் ,ஆயுதங்கள் ஆகியவற்றை விவரிக்கிறார்.

“ஸ்வோசித விவித விசித்ரானந்த”என்று தொடக்கி அவனது திருவாபரணங்களை விவரிக்கும்போது “கிரீட மகுட சூடா வதம்ச” என்ற சொற்கள் வருகின்றன. கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களும் ஒரே பொருள் உடையன. மூன்றுமே அவன் திருவபிஷேகம்…திருமுடியைக் குறிப்பான. ஒரே பொருளை உணர்த்த ஸ்வாமி என் மூன்று சொற்களைப் பயன்படுத்துகிறார் என்ற கேள்வி பிறக்கும்.

ஒவ்வொரு சொல்லும் திருமுடியின் ஒரு பகுதியைக் குறிப்பதாகும். கிரீடம், தலையைச் சுற்றிவரும் அடிப் பகுதியைக் குறிக்கும். மகுடம் தலைக்குமேல் செல்லும் பகுதியைக் குறிக்கும்.சூடா முடியில் தொங்கி முன் நெற்றியில் திகழும் மணியைக் குறிக்கும். அவதம்சம் என்பது பூப்போலக் காதுகளின் மேல் தெரியும் திருவாபரணம். இவ்விளக்கம் பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தில் காணப்படுகிறது.

நம்பெருமாளின் உத்சவங்களை சேவித்திருக்கும் அடியார்கள் அவர் வெவ்வேறு அபிஷேகங்களை அணிவதைக் கண்டிருக்கலாகும். வெவ்வேறு சொற்கள் நம்பெருமாள் அணியும் வெவ்வேறு திருவபிஷேகங்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

ஸ்வாமியின்  க்ரந்தங்களில் அழ்வார்களின் அனுபவத்தைப் பார்க்கும் இப்ரகரணத்தில், ஆழ்வார்கள் எம்பெருமானின் இவ்விஷயத்தை எவ்வாறு அனுபவித்துள்ளனர் என்று பார்ப்பது பொருந்தும்.

பாரளந்த பேரரசே! எம் விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்கிறார். ஆழ்வார் அரசே அரசே அரசே என மும்முறை விளிக்கிறார்..

இம்மூன்றனுள், ஒவ்வொரு சொல்லும் ஒரு தனிப்பொருள் கொண்டது.  

பாரளந்த பேரரசே  என்பதில் சௌலப்யத்தில்  அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.

எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.

 

எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில்  அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார்பால் பூண்ட பிரணயித்வம்  தெரிகிறது.

எம்பெருமான் மூன்று நிலைகளில் அரசனாயிருப்பதை அழகியமணவாளப் பெருமாள் நாயனார்  தம் ஆசார்ய ஹ்ருதயத்தில் “பாரளந்த என்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு” என்று காட்டுகிறார்.

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்  எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.

இவ்விடத்தில், பிரணயித்வம் சௌலப்யத்தில் அடங்கியதன்றோ என்றொரு ஐயம் எழும். ஆயினும், அது தனியே அனுபவிக்கவேண்டியதொரு பகவத் குணம். சௌலப்யம் பொதுவாக எல்லாச் சேதனர்க்கும் பொது. ஆனால் பிரணயித்வம் ஆழ்வார் ஒருவர்மாட்டே எம்பெருமான் காட்டிய குணம். “உண்டியே உடையே உகந்திருக்கும் இம்மண்டலத்தோர்” எல்லாருக்கும் சௌலப்யம் பொது. ஆனால் “உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம் கண்ணன்” என்றிருக்கும் ஆழ்வார் ஒருவருக்கு மட்டுமே உரியது பிரணயித்வம்.

இப்படிப் பட்ட விசேஷ திருக்குணங்களை அனுபவிப்பது மற்ற பொதுவான இடங்களிலும் உண்டு. எம்பெருமானாரே ஸ்ரீ பாஷ்யத்தில் இதற்கு ஓர் இடம் காட்டியருளுகிறார்.  

தொடக்கத்திலேயே “அகில புவன ஜன்ம சதம பந்காதி லீலா”என்று பரம்பொருளான ஸ்ரீநிவாசன் எல்லாவற்றையும் படைப்பதும் காப்பதும் அழிப்பதும் ஒரு திருவிளையாடலாகவே செய்கிறான் என்கிறார். மறுபடியும், “விவித வினத பூத வராத ரக்ஷிக்க தீக்ஷா” என்று சகல புவனா ரக்ஷனமும் போற்றுகிறார். இவ்வாறே பிரணயித்வமும்  ஒரு தனிப் பெருங்குணமாகப் போற்றப்படுகிறது.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/09/dramidopanishat-prabhava-sarvasvam-11/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s